என் மலர்
புதுச்சேரி
- முன்னாள் மாணவர்கள் சங்கம் வலியுறுத்தல்
- மாதா கோவில் அருகில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் தற்சமயம் 283 மாணவ- மாணவியர்கள் படித்து வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் நாராயணகுமார், செயலாளர் பிரபு ஆகியோர் அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் என்ற தட்சிணாமூர்த்தியை சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி அரியாங்குப்பம் மாதா கோவில் அருகில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் தற்சமயம் 283 மாணவ- மாணவியர்கள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் உள்ள ஒரு கட்டிடம் 90 வருடங்களுக்கும் மற்றொரு கட்டிடம் 50 வருடங்களுக்கும் மேலான பழமையான கட்டிடமாகும்.
மேலும் இப்பள்ளி தொடங்கப்பட்டு 100-ம் ஆண்டை நெருங்கி க்கொண்டி ருக்கிற வேளையில் பழமையான கட்டிடத்தில் மாணவர்கள் படித்து வருவதால் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
எனவே இப்பள்ளியின் பழைய கட்டிடத்தை இடித்து விட்டு மாணவர்கள் நலன் கருதி புதிய கட்டிடத்தினை கட்டித்தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுவரை தற்காலிகமாக சிறுவர் சீர்திருத்தபள்ளியிலோ அல்லது பாரதியார் பல்கலைக்கூ டத்திலோ மாணவர்களுக்கு வகுப்பு நடத்த வேண்டும்.
மாணவர்களை நோணாங்குப்பம் அரசு பள்ளிக்கு மாற்றுவதாக இருந்தால் மாணவர்கள் 15 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசலில் பாதுகாப்பின்றி நடந்து செல்ல நேரிடும். எனவே இதனை தவிர்க்க வேண்டும்.
- பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் மேற்கூரை சேதமடைந்து காணப்பட்டது.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை தொகுதி முத்தையா முதலியார் வீதியில் உள்ள அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் மேற்கூரை சேதமடைந்து காணப்பட்டது.
இதுகுறித்து பள்ளியின் ஆசிரியர்கள் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏவிடம் கோரிக்கை வைத்து புதியதாக மேற்கூரை அமைக்கும்படி கேட்டுக் கொண்டனர். பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ வின் முயற்சியால் மேற்கூரை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது.
ரூ.13.78 லட்சம் மதிப்பீட்டில் நடக்கவுள்ள இப்பணியை பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ. இன்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி, கல்வித்துறை துணை இயக்குனர் (பெண் கல்வி) சிவராம ரெட்டி, பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிடப் பிரிவு செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், உதவி பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் ஆனந்தன், ஆசிரியர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- தெளிவான மாற்றல் கொள்கையை உருவாக்க முடியாத போது, ஓராண்டுக்கு மட்டும் ஒரு வழிமுறையைப் பின்பற்றுவது தேவையில்லாத ஒன்று.
- பணியிட மாற்றல் உத்தரவு பெற்றவர்களை மாற்றம் செய்யப்பட்ட பள்ளிகளுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்.
புதுச்சேரி:
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசு ஊழியர்கள் பணியிட மாற்றம் என்பது பணியின் ஒருங்கிணைந்த பகுதி என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. புதுவை பள்ளிக்கல்வித்துறையின் சமீபகால நடவடிக்கைகள் பணியிட மாற்றத்தை கேலிக்கூத்தாக்கி உள்ளன.
தெளிவான மாற்றல் கொள்கையை உருவாக்க முடியாத போது, ஓராண்டுக்கு மட்டும் ஒரு வழிமுறையைப் பின்பற்றுவது தேவையில்லாத ஒன்று. கலந்தாய்வில் பணியிட மாற்றல் உத்தரவுகளைக்கூட நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் பள்ளிக் கல்வித்துறை உள்ளது.
பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள் ஆகியோருக்குப் பணியிட மாற்றல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.தலைமையாசிரி யர்களுக்குக் கலந்தாய்வு முடிந்துள்ளது.
துணை இயக்குனர் உத்தரவிட்டும், இணை இயக்குநர் மாற்றல் உத்தரவு பெற்றவர்களை விடுவிக்காதது ஏன்? உத்தரவு வந்தவுடன் பள்ளி நிதி ஆதாரங்களை செலவிடுகின்றனர்.
இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். கல்வி அமைச்சர், பள்ளிக் கல்வித்துறைச் செயலர், கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் உடனடியாக தலையிட்டு பணியிட மாற்றல் உத்தரவு பெற்றவர்களை மாற்றம் செய்யப்பட்ட பள்ளிகளுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். மற்ற ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சுகேஷ் தம்பி புதுவை ஐ.ஆர்.பி.என் காவல்துறையில் பணியாற்றும் கேரளாவை சேர்ந்த சனில்குமார் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார்.
- பி.பி.ஏ. அப்ரூவர் பிரச்சினை உள்ளதாக கூறி மனையை கிரயம் செய்த கொடுக்காமல் தம்பதியை அண்ணன், தம்பி இருவரும் ஏமாற்றினர். பணத்தையும் திருப்பித்தரவில்லை.
புதுச்சேரி:
புதுவை கோரிமேடு ஆனந்தாநகரில் வசிப்பவர் தீபக்தாமஸ்(37). இவர் அப்பா பைத்தியம் சுவாமி கோவில் அருகே ஓட்டல் வைத்துள்ளார். இவரின் மனைவி அனுமோல்(34) கேரளாவை சேர்ந்தவர். இவர் ஜிப்மரில் நர்சாக பணியாற்றி வருகிறார்.
தீபக்தாமசின் தொழில் நண்பரான சுகேசிடம் சொந்தமாக வீட்டு மனை வாங்க வேண்டும் என தெரிவித்தார். சுகேஷ் தம்பி புதுவை ஐ.ஆர்.பி.என் காவல்துறையில் பணியாற்றும் கேரளாவை சேர்ந்த சனில்குமார் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார்.
2021 அக்டோபரில் கோரிமேடு காமராஜ் நகரில் உள்ள ஒரு வீட்டு மனையை அனுமோல் குடும்பத்துக்கு சுகேஷ், சனில்குமார் காண்பித்தனர். இதற்கு ரூ.10.82 லட்சம் ஆன்லைன் மூலம் அனுமோல் அளித்தார்.
பி.பி.ஏ. அப்ரூவர் பிரச்சினை உள்ளதாக கூறி மனையை கிரயம் செய்த கொடுக்காமல் தம்பதியை அண்ணன், தம்பி இருவரும் ஏமாற்றினர். பணத்தையும் திருப்பித்தரவில்லை.
சனில்குமார் வீட்டுக்கு சென்று விசாரித்தபோது ஜிப்மரில் பணியாற்றும் நர்சுகள், டாக்டர், ஊழியர்கள் பலரிடம் இதேபோல அவர் மோசடி செய்து சுமார் ரூ.40லட்சம் சுருட்டியது தெரிய வந்தது.
அதிர்ச்சிடைந்த அனுமோல் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ. ரமேஷ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான காவலர் சனில்குமார், அவரின் அண்ணன் சுகேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
- யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் காய்கறிகடை யின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்செ ன்றிருப்பது தெரியவந்தது.
- போலீசார் மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மதுக்கடையில் மது குடித்துக் கொண்டிருந்த முருகனை பிடித்து விசாரணை செய்தனர்.
புதுச்சேரி:
திருபுவனை அருகே உள்ள மதகடிப்பட்டு பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (43).
இவர் மதகடிப்பட்டு தனியார் திருமண மண்டபம் அருகே காய்கறி கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் காய்கறிகடையில் கல்லாபெ ட்டியில் ரூ.30 ஆயிரத்தை வைத்து பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது காய்கறிகடை பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் பணத்தை காணாமல் திடுக்கிட்டார்.
யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் காய்கறிகடை யின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்செ ன்றிருப்பது தெரியவந்தது.
இது குறித்து சரவணன் திருபுவனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த திருட்டில் கலிதீர்த்தாள்குப்பம் பகுதியை சேர்ந்த முருகன் (41) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
அவரை நோட்டமிட்ட போலீசார் மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மதுக்கடையில் மது குடித்துக் கொண்டிருந்த முருகனை பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது காய்கறி கடையில் பணம் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார்.
அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 11ஆயிரத்து 400 பறிமுதல் செய்தனர்.
- பிரதமர் மோடியின் அபிமானியான சிவசங்கர் எம்.எல்.ஏ. வெற்றி பெற்ற பிறகு பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.
- இவருக்கு அரசு வழங்கிய கார் பழுதடைந்து பல நாட்களாக ஆகியும் புதிய கார் இவருக்கு வழங்கப்படவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஆளும் கட்சியினர் நடந்து கொள்கிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவராக இருந்தவர் சிவசங்கர். தற்போது இந்த கூட்டமை ப்பின் பெருந்தலைவராக உள்ளார். மேலும் அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் முதன்மை துணை தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
புதுவையில் 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இவர் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவில் சீட் கேட்டிருந்தார். சீட்டு கிடைக்காததால் உழவர்கரை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணியில் உழவர்கரை தொகுதி என்.ஆர்.காங்கி ரசுக்கு ஒதுக்கப்பட்டது.
என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பன்னீர்செ ல்வத்தை எதிர்த்து சிலிண்டர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டி யிட்ட சிவசங்கர் வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட விடுதலை சிறுத்தை கட்சி டெபாசிட் இழந்தது. பிரதமர் மோடியின் அபிமானியான சிவசங்கர் எம்.எல்.ஏ. வெற்றி பெற்ற பிறகு பா.ஜனதா
எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். இந்நிலையில் சிவசங்கர் எம்.எல்.ஏவுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்பட்டது. மிகவும் பழமையான கார் என்பதால் அவ்வப்போது இந்த கார் பழுது ஏற்பட்டது.
இந்தக் காரை போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கொடுத்து சரி செய்ய சொன்னபோது இந்த கார் வாங்கி 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதாகவும் இந்த கார் ஓட்ட தகுதியற்ற வாகனம் எனவும் கூறிவிட்டனர்.
அவ்வப்போது இந்த கார் என்ஜினில் பழுது ஏற்பட்டு தீ பிடிக்கும் நிலையும் உருவானது. இது தொடர்பாக சிவசங்கர்
எம்.எல்.ஏ. சபாநாயகர் மற்றும் முதல்-அமை ச்சரிடம் தகவல் தெரிவித்தும் அவருக்கு மாற்று வாகனம் வழங்கப்படவில்லை.
இதனால் சிவசங்கர் எம்.எல்.ஏ. சட்ட மன்றத்திற்கும், உழவர்கரை தொகுதியில் நடக்கும் அரசு நலத்திட்ட நிகழ்ச்சி களுக்கும், தொகுதியில் பொது மக்களை சந்திப்பதற்கும், அவர் தனது சொந்த பைக்கில் செல்கிறார்.
இதுகுறித்து தொகுதி யைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், சுயேட்சையாக போட்டியிட்டு மக்கள் செல்வாக்குடன் வெற்றி பெற்றவர் சிவசங்கர் எம்.எல்.ஏ.மேலும் இந்திய அளவில் வணிகர் சங்க சம்மேனத்தின் பொறுப்பா ளராகவும் உள்ளார்.
தினந்தோறும் மக்கள் பணிகளை மேற்கொள்ள கூடியவர். இவருக்கு அரசு வழங்கிய கார் பழுதடைந்து பல நாட்களாக ஆகியும் புதிய கார் இவருக்கு வழங்கப்படவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஆளும் கட்சியினர் நடந்து கொள்கிறார்கள்.
கூட்டணி கட்சியான பா.ஜனதாவின் ஆதரவு எம்.எல்.ஏ.வுக்கு புதிய கார் வழங்காத அரசு, எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களுக்கும், நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு புதிய காரை வழங்கியிருக்கிறது.
சிவசங்கரன் எம்.எல்.ஏ. பைக்கில் செல்லும் பொழுது தொகுதி மக்களாகிய எங்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவசங்கர் எம்.எல்.ஏவுக்கு உடனடியாக அரசு நவீன காரை வழங்க வேண்டும்.
- மாணவர்களுக்கும் காமராஜர் பிறந்த நாளைவிழாவை முன்னிட்டு காலணி மற்றும் புத்தகப் பை வழங்கப்பட்டது.
- மனிதநேய மக்கள் சேவை இயக்க மூத்த நிர்வாகிகள், இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
புதுச்சேரி:
கோஜிரியோ கராத்தே சங்கம் மற்றும் மனிதநேய மக்கள் சேவை இயக்கம் சார்பில் உருளையன் பேட்டை தொகுதிக்கு உட்பட்ட ராஜா நகரில் பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் காமராஜர் பிறந்த நாளைவிழாவை முன்னிட்டு காலணி மற்றும் புத்தகப் பை வழங்கப்பட்டது.
இதில் உருளை யன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வும் மனித நேயம் மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான நேரு, புதுச்சேரி மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் ஆகியோர் மாணவர்களுக்கு காலணி மற்றும் பள்ளி புத்தகப்பையை வழங்கினர்.
விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மனிதநேய மக்கள் சேவை இயக்க மூத்த நிர்வாகிகள், இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
- அங்காளன் எம்.எல்.ஏ.விடம் தெரிவித்து சாலை அமைத்து தரும்படி கோரிக்கை மனு அளித்தனர்.
- மல்லிகார்ஜுணன் இளநிலை பொறியாளர் பாஸ்கர் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
திருவண்டார்கோயில் அருகே உள்ள ஞானசுந்தரி நகர் பகுதியில் உள்ள சாலைகள் சேரும் சகதியுமாகி மழை நீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இது பற்றி அப்பகுதி மக்கள் அங்காளன் எம்.எல்.ஏ.விடம் தெரிவித்து சாலை அமைத்து தரும்படி கோரிக்கை மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து மண்ணாடி பட்டு கொம்யூன் பஞ்சாயத்து நிதியிலிருந்து ரூ.11 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள உட்புற சாலைகள் கிராவல் சாலைகளாக அமைக்க பூமி பூஜை விழா நடைபெற்றது.
இதில் அங்காளன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன் உதவி பொறியாளர் மல்லிகார்ஜுணன் இளநிலை பொறியாளர் பாஸ்கர் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- பெரியமார்க்கெட் வியாபாரிகளை அங்கிருந்து தற்காலிகமாக ரோடியர் மில் திடலுக்கு இடமாறும்படி நகராட்சி அறிவித்திருந்தது.
- மீன் அங்காடி பெண் வியாபாரிகளும் பங்கேற்றனர். அப்போது போலீசார் அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தனர்.
புதுச்சேரி:
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுவை நகரத்தின் மைய பகுதியில் உள்ள பெரியமார்க்கெட் என அழைக்கப்படும் குபேர் அங்காடி புதிதாக கட்டப்பட உள்ளது.
50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் பெரியமார்க்கெட்டில் இட நெருக்கடி இருந்து வந்த நிலையில், அடிப்படை வசதிகளும் இல்லாததால் அதை நவீனமுறையில் புதிதாக கட்ட அரசு தீர்மானித்துள்ளது.
இதனால் பெரியமார்க்கெட் வியாபாரிகளை அங்கிருந்து தற்காலிகமாக ரோடியர் மில் திடலுக்கு இடமாறும்படி நகராட்சி அறிவித்திருந்தது.
இதற்கு பெரியமார்க்கெட்டில் உள்ள நிரந்தர மற்றும் அடிக்காசு, மீன் அங்காடி வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கடைகளை காலி செய்யாமல், தேவையான சீரமைப்பு பணிகளை பகுதி, பகுதியாக நிறைவேற்றித்தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த வாரம் 4 மணி நேரம் கடைகளை அடைத்து பெரியமார்க்கெட் அனைத்து வியபாரிகளும் ஒன்றிணைந்து சாய்பாபா திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்தினர்.
இந்த கூட்டத்தில், பெரியமார்க்கெட்டை இடமாற்றம் செய்யக்கூடாது என தீர்மானமும் நிறைவேற்றினர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் பெரியமார்க்கெட்டில் உள்ள கடைகளில் நகராட்சி சார்பில் ஒரு அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
அந்த அறிவிப்பில், புதுவை நகராட்சிக்கு சொந்தமான குபேர் அங்காடியில் வியாபாரம் செய்யும் அனைத்து வகையான வணிகர்கள், வியாபாரிகள் ஆகியோருக்கு அறிவிப்பது என்னவென்றால், தற்போது பழுதான நிலையில் உள்ள குபேர் அங்காடி வளாகத்தை புதுவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் தேசிய கட்டிட கட்டுமான கழகத்தால் மறுகட்டுமானம் செய்யும் பணி விரைவில் தொடங்க புதுவை அரசு தீர்மானித்துள்ளது.
அந்த பணி முடிவடைந்தவுடன் தற்போது கடை ஒதுக்கீடு பெறப்பட்ட அனைத்து வகை வியாபாரிகளுக்கும் நகராட்சி விதிகளுக்கு உட்பட்டு புதிய ககைடள் மறு ஒதுக்கீடு செய்து தரப்படும்.
ஆகவே விரைவில் தொடங்க உள்ள கட்டுமான பணிக்கு ஏதுவாக தற்போது குபேர் அங்காடியில் இயங்கி வரும் அனைத்து வகை கடைகளும் (மீன் அங்காடி தவிர்த்து) புதுவை கடலூர் சாலையில் உள்ள ரோடியர் மில் வளாகத்தில் தற்காலிகமாக இடமாற்றம் செய்ய அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட அனைத்து வியாபாரிகளும் தங்கள் வியாபாரத்தை ரோடியர் மில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைக்கு மாற்றம் செய்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இன்று காலை இதனை பார்த்த வியாபாரிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். காலை 10.30 மணியளவில் பெரியமார்க்கெட் வியாபாரிகள் ஒன்றுகூடி கடைகளை அடைத்து நேருவீதி-காந்தி வீதி சந்திப்பில் திரண்டனர்.
இதில் மீன் அங்காடி பெண் வியாபாரிகளும் பங்கேற்றனர். அப்போது போலீசார் அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தனர்.
ஆனால் வியாபாரிகள் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேரு வீதி வழியாக காமராஜர் சிலை சந்திப்புக்கு வந்தனர். அங்கு நாலாபுறமும் சாலை சந்திப்புகளில் அமர்ந்து வாகனங்களை செல்ல விடாமல் தடுத்து மறியலில் ஈடுபட்டனர்.
மறியலால் அண்ணாசாலை, காமராஜர் சாலை, நேருவீதி சாலைகளில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. வாகனங்களில் வந்தவர்கள் அருகிலிருந்த சாலைகளின் வழியாக சென்றனர். வியாபாரிகள் சாலையின் மைய பகுதியில் அமர்ந்து கோஷம் எழுப்பி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நகராட்சி அறிவிப்பை வாபஸ் பெறும்வரை போராட்டத்தை தொடர்வோம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அவர்கள் சட்டசபையை நோக்கி ஊர்வலமாக சென்றனர் இதனால் புதுவை நகரின் மைய பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
- மாணவர்களின் பாடபுத்தகங்களை வாங்கி ஒரு சில கேள்விகளை கேட்டு மாணவர்களின் கல்வி அறிவை கலெக்டர் சோதிட்டார்.
- பாதியில் படிப்பை நிறுத்திய 9-ம் வகுப்பு மாணவனிடம் கலெக்டர் குலோத்துங்கன் உருக்கமாக பேசி படிப்பை தொடர வலியுறுத்தியுள்ளார்.
காரைக்கால்:
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், தொடர் நடவடிக்கையை கலெக்டர் குலோத்துங்கன் எடுத்து வருகிறார். அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டுவருகிறார். அதன் ஒரு பகுதியாக, காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறு தேனூரில் அமைந்துள்ள சண்முகம் அரசு மேல்நிலை பள்ளியில், நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, பள்ளிவளாகம், வகுப்பறைகள், கழிவறை, விளையாட்டுத்திடல் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அப்போது, மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறை சுத்தமாக இல்லாத காரணத்தினால் அடைப்பு ஏற்பட்டு மாணவர்கள் உபயோகப்படுத்த முடியாமல் இருந்ததை அறிந்து,உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து கழிவறை அடைப்பை சரி செய்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும்படி உத்தரவிட்டார்.
மேலும், பள்ளியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கட்டிட பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்திடுமாறும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கலெக்டர் கேட்டுக்கொண்டார். பின்னர், ஒவ்வொரு வகுப்புகளுக்கும் சென்று, மாணவர்களுடன் கலந்துரையாடினார். மேலும், மாணவர்களின் பாடபுத்தகங்களை வாங்கி ஒரு சில கேள்விகளை கேட்டு மாணவர்களின் கல்வி அறிவை சோதிட்டார்.
அப்போது, மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். வரும் கல்வியாண்டில் 100 சதவீத விழுக்காடு பெற்று இப்பள்ளியின் பெருமையை நிலை நாட்ட வேண்டும். இப்போது படித்தால்தான் எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு சென்று நமது பெற்றோரை மகிழ்ச்சியாக வைத்திருக்கமுடியும். நாமும் மகிழ்ச்சியாக இருக்கமுடியும் என்றார்.
இதை தொடர்ந்து, மாணவர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்த கலெக்டர், 4 பேர் தொடர் விடுமுறையில் இருப்பதையும், 9-ம் வகுப்பு படித்த மாணவன், பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, எதிரே உள்ள ஒரு கடையில் பணி செய்வதாக மாணவர்கள் கூறியதை கேட்ட கலெக்டர், உடனடியாக அந்த மாணவனை அழைத்து, அவரிடம் உருக்கமாக பேசி, மீண்டும் பள்ளி படிப்பை தொடரவேண்டும். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.
மேலும் அங்கு இருந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம், அந்த மாணவனின் பெற்றோரை அழைத்து வந்து தன்னை சந்திக்கும்படியும் கலெக்டர் கேட்டுக்கொண்டார். மேலும், வரும் கல்வியாண்டில் 100சதவீத தேர்ச்சி விழுக்காடு பெற ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும். சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வரவேண்டும். இடைநிறுத்தல் மாணவர்களை அழைத்து கவுன்சிலிங் தரவேண்டும் என்றார்.
- சிலையை புதுச்சேரியை சேர்ந்த பத்ம விருது பெற்ற சிற்பக் கலைஞர் முனுசாமி வடிவமைத்துள்ளார்.
- சிலையை பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி பார்வையிட உள்ளார்.
புதுச்சேரி:
பிரான்சில் உள்ள தமிழ் கலாசார மன்றம் பிரான்ஸ் அரசு அனுமதி பெற்று அங்கு மகாத்மா காந்திக்கு முழு உருவ வெண்கலச்சிலையை கடந்த 2011-ல் அமைத்தது.
தற்போது பிரான்ஸ் அரசு அனுமதி பெற்று பிரான்சின் ஜெர்சி நகரத்தில் உள்ள மைய பூங்கா வளாகத்தில் திருவள்ளுவர் சிலை செப்டம்பர் மாதம் நிறுவப்பட உள்ளது.
இந்த சிலையை புதுச்சேரியை சேர்ந்த பத்ம விருது பெற்ற சிற்பக் கலைஞர் முனுசாமி வடிவமைத்துள்ளார்.
வெண்கலத்தில் 7 அடியில் 600 கிலோ எடையில் திருவள்ளுவர் சிலை பிரமாண்டமாக உருவாகியுள்ளது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு விமானத்தில் திருவள்ளுவர் சிலை பிரான்சுக்கு கொண்டு செல்லப்பட்டது. சிலை திறப்பு விழாவையொட்டி திருவள்ளுவர் மாநாடும் நடத்தப்படுகிறது.
சிலை அனைவரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி பார்வையிட உள்ளார்.
தமிழ் கலாசார மன்றத்தின் மூலம் பிரான்சில் வாரந்தோறும் தமிழ் மொழி வகுப்புகள், பண்பாட்டு இசை, நடனப்பயிற்சி வகுப்புகளை இளையோருக்கு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
- பிரெஞ்சு துணை தூதர் லிஸ் டால்போட் பாரே நடனமாடி பிரெஞ்சு மக்களை உற்சாகப்படுத்தினார்.
- பேரணியில் 500-க்கும் மேற்பட்ட பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
கடந்த 1789-ம் ஆண்டு ஜூலை 14-ந்தேதி பிரான்ஸ் நாட்டில் இருந்த மன்னராட்சியை பாரீஸ் நகரில் உள்ள பஸ்தி என்ற சிறைச்சாலையை மக்கள், புரட்சி மூலம் தகர்த்து முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சியை நிறுவினர்.
இந்த தினம் பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. அக்காலத்தில் மின்சாரம் இல்லாததால் மக்கள் தீப்பந்தம் ஏந்தி புரட்சி செய்து வென்றனர்.
இத்தினத்தை நினைவு கூறும் வகையில் பிரான்ஸ் நாடு முழுவதிலும், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வாழும் அனைத்து நகரங்களிலும் ஜூலை 13-ந்தேதி பேரணி தீப்பந்த ஊர்வலம் நடைபெறும்.
புதுவையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் இதை நினைவுகூறும் வகையில் மின்விளக்கு ஊர்வலம் நடத்தினர். புதுவை பிரெஞ்சு தூதரகம் சார்பில், கடற்கரை சாலை டு பிளக்ஸ் சிலையில் இருந்து பிரெஞ்சு தூதரகம் வரை 3 கி.மீ. தூரம் டார்ச் லைட், மின் விளக்குகளை கையில் ஏந்திய படியும், பிரான்ஸ் நாட்டின் தேசியக் கொடி மற்றும் இந்திய நாட்டின் தேசியக்கொடியை கையில் ஏந்தி வந்தனர்.
ஊர்வலத்தின் முன் ஈபிள் கோபுரம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கொண்டுவரப்பட்டது. கடற்கரை சாலையில் பிரெஞ்சு போர்வீரர்கள் நினைவிடத்தில், இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்பின் பிரான்ஸ் நாட்டு பாடல்கள் இசைக்கப்பட்டு ஆடிப்பாடி மகிழ்ந்தபடி ஊர்வலம் சென்றனர்.
ஊர்வலத்தில் நடிகர் விஜய்யின் ரஞ்சிதமே பாடலுக்கு பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்கள் உற்சாகமாக நடனமாடினர்.
பிரெஞ்சு துணை தூதர் லிஸ் டால்போட் பாரே நடனமாடி பிரெஞ்சு மக்களை உற்சாகப்படுத்தினார். பேரணியில் 500-க்கும் மேற்பட்ட பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
இரு நாட்டு உறவையும் மேம்படுத்தும் விதமாக பிரான்ஸ் நாட்டின் கொடியின் வண்ணத்தில் புதுவை தலைமை செயலகம் மின் ஒளியில் மின்னியது. புதுவை நகராட்சியின் மேரி கட்டிடம், போர் வீரர் நினைவிடம், பிரான்ஸ் தூதரகம் ஆகியவையும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.






