என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இடமாற்றம் பெற்ற ஆசிரியர்கள் பணியில் சேர நடவடிக்கை-மக்கள் உரிமை கூட்டமைப்பு வலியுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    இடமாற்றம் பெற்ற ஆசிரியர்கள் பணியில் சேர நடவடிக்கை-மக்கள் உரிமை கூட்டமைப்பு வலியுறுத்தல்

    • தெளிவான மாற்றல் கொள்கையை உருவாக்க முடியாத போது, ஓராண்டுக்கு மட்டும் ஒரு வழிமுறையைப் பின்பற்றுவது தேவையில்லாத ஒன்று.
    • பணியிட மாற்றல் உத்தரவு பெற்றவர்களை மாற்றம் செய்யப்பட்ட பள்ளிகளுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்.

    புதுச்சேரி:

    மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசு ஊழியர்கள் பணியிட மாற்றம் என்பது பணியின் ஒருங்கிணைந்த பகுதி என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. புதுவை பள்ளிக்கல்வித்துறையின் சமீபகால நடவடிக்கைகள் பணியிட மாற்றத்தை கேலிக்கூத்தாக்கி உள்ளன.

    தெளிவான மாற்றல் கொள்கையை உருவாக்க முடியாத போது, ஓராண்டுக்கு மட்டும் ஒரு வழிமுறையைப் பின்பற்றுவது தேவையில்லாத ஒன்று. கலந்தாய்வில் பணியிட மாற்றல் உத்தரவுகளைக்கூட நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் பள்ளிக் கல்வித்துறை உள்ளது.

    பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள் ஆகியோருக்குப் பணியிட மாற்றல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.தலைமையாசிரி யர்களுக்குக் கலந்தாய்வு முடிந்துள்ளது.

    துணை இயக்குனர் உத்தரவிட்டும், இணை இயக்குநர் மாற்றல் உத்தரவு பெற்றவர்களை விடுவிக்காதது ஏன்? உத்தரவு வந்தவுடன் பள்ளி நிதி ஆதாரங்களை செலவிடுகின்றனர்.

    இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். கல்வி அமைச்சர், பள்ளிக் கல்வித்துறைச் செயலர், கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் உடனடியாக தலையிட்டு பணியிட மாற்றல் உத்தரவு பெற்றவர்களை மாற்றம் செய்யப்பட்ட பள்ளிகளுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். மற்ற ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×