search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பழமையான அரசு பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்
    X

    நாராயணகுமார்

    பழமையான அரசு பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்

    • முன்னாள் மாணவர்கள் சங்கம் வலியுறுத்தல்
    • மாதா கோவில் அருகில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் தற்சமயம் 283 மாணவ- மாணவியர்கள் படித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் நாராயணகுமார், செயலாளர் பிரபு ஆகியோர் அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் என்ற தட்சிணாமூர்த்தியை சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி அரியாங்குப்பம் மாதா கோவில் அருகில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் தற்சமயம் 283 மாணவ- மாணவியர்கள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் உள்ள ஒரு கட்டிடம் 90 வருடங்களுக்கும் மற்றொரு கட்டிடம் 50 வருடங்களுக்கும் மேலான பழமையான கட்டிடமாகும்.

    மேலும் இப்பள்ளி தொடங்கப்பட்டு 100-ம் ஆண்டை நெருங்கி க்கொண்டி ருக்கிற வேளையில் பழமையான கட்டிடத்தில் மாணவர்கள் படித்து வருவதால் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

    எனவே இப்பள்ளியின் பழைய கட்டிடத்தை இடித்து விட்டு மாணவர்கள் நலன் கருதி புதிய கட்டிடத்தினை கட்டித்தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதுவரை தற்காலிகமாக சிறுவர் சீர்திருத்தபள்ளியிலோ அல்லது பாரதியார் பல்கலைக்கூ டத்திலோ மாணவர்களுக்கு வகுப்பு நடத்த வேண்டும்.

    மாணவர்களை நோணாங்குப்பம் அரசு பள்ளிக்கு மாற்றுவதாக இருந்தால் மாணவர்கள் 15 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசலில் பாதுகாப்பின்றி நடந்து செல்ல நேரிடும். எனவே இதனை தவிர்க்க வேண்டும்.

    Next Story
    ×