என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தனியார் தங்கும் விடுதியில் ரகசிய கேமரா
    X

    கோப்பு படம்.

    தனியார் தங்கும் விடுதியில் ரகசிய கேமரா

    • தோழியுடன் வந்த வாலிபர் அதிர்ச்சி
    • போலீசார் அந்த புகாரை ஏற்காமல் ஆதாரங்களை கொண்டுவரும் படி அவரை இழுத்தடித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை 100-அடி சாலையில் தனியார் தங்கும் விடுதி உள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு இந்த விடுதியில் புதுவையைச்சேர்ந்த ஒரு நபர் தனது தோழியுடன் அறையெடுத்து தங்கியுள்ளார்.

    அப்போது அந்த அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அந்த வாலிபர் விடுதி உரிமையார் மற்றும் ஊழியரிடம் கேட்ட போது அவர்கள் பதில் எதுவும் கூறவில்லை.

    இதையடுத்து தோழியுடன் தங்கிய வாலிபர் இது குறித்து உருளையன் பேட்டை போலீசில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் அந்த புகாரை ஏற்காமல் ஆதாரங்களை கொண்டுவரும் படி அவரை இழுத்தடித்தனர்.

    ஒருவழியாக அந்தவாலிபர் ஓட்டல் அறையில் கேமரா பொருத்தப்பட்டதற்கான ஆதாரங்களை கொடுத்தார். அதனை ஏற்று போலீசார் விடுதி உரிமையாளர் மற்றும் ஊழியர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    Next Story
    ×