என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    படிக்க விருப்பம் இல்லாததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை
    X

    கோப்பு படம்.

    படிக்க விருப்பம் இல்லாததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை

    • வீட்டில் தங்களுக்கு தேவையான உணவை கீர்த்தனா தாயார் செய்து கொண்டு இருந்தார்.
    • கொட்டகையில் உள்ள இரும்பு பைப்பில் தனது தாயாரின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் அருகே மூர்த்திக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ். கட்டிட தொழிலாளி.இவரது ஜெயப்பிரதா. இவர்களது மகள் கீர்த்தனா (வயது 17).

    இவர் 12-ம் வகுப்பு படித்து பொது தேர்வில் தோல்வி அடைந்தார். பெற்றோர்கள் தொடந்து படிக்க ஆசைப்பட்டு கீர்த்தனாவின் 10-ம் வகுப்பு தேர்ச்சியை கொண்டு தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படிக்க ஏற்பாடு செய்து இருந்தனர்.

    ஆனால் கீர்த்தனா கல்லூரிக்கு சென்று படிக்க விருப்பபடவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை அவரது வீடு கட்டுமான பணி நடந்து வருவதால் உறவினர் வீட்டில் தங்களுக்கு தேவையான உணவை கீர்த்தனா தாயார் செய்து கொண்டு இருந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த கீர்த்தனா அங்கிருந்த கொட்டகையில் உள்ள இரும்பு பைப்பில் தனது தாயாரின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார் ஏட்டு ராதா கிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×