என் மலர்
புதுச்சேரி
- நோய் காரணமாக முருகன் கடந்த ஒரு வருட மாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறர்கள்.
புதுச்சேரி:
வீராம்பட்டினம் யோக லட்சுமி நகரை சேர்ந்தவர் முருகன்(வயது54). இவர் தச்சு தொழில் செய்து வந்தார். இவரது மனைவி அலமேலு. இவர் மீன் வியா பாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. மேலும் அவருக்கு அடிக்கடி வலிப்பு நோய்யும் ஏற்படும். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நோய் காரணமாக முருகன் கடந்த ஒரு வருட மாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் முருகன் வீட்டில் சாப்பிட்டு விட்டு கடற்கரைக்கு சென்று வருவதாக கூறிச் சென்றார். இந்த நிலையில் அங்குள்ள சவுக்கு தோப்பில் முருகன் இறந்து கிடப்பதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் வந்தது.
உடனே குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு முருகன் வலிப்பு நோய் ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து முருகனின் மனைவி அலமேலு கொடுத்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறர்கள்.
- அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தல்
- தடை செய்த பொருட்களை உணவுகளில் கலப்பதை தடுத்து கடுமையான நடவடிக்கைகள் எடுத்து உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் சுகாதாரமற்ற உணவு விற்பனையால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். புதுவை நகரப்பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் ஷவர்மா உள்ளிட்ட பல்வேறு துரித உணவுகளை விற்பனை செய்து வருகின்றனர். இவற்றுக்கு பயன்ப டுத்தப்படும் இறைச்சிகள் சுகாதா ரமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.
இதனை உணவு பாதுகாப்புதுறை ஆய்வு செய்வது கிடையாது. எனவே தமிழகத்தை போல் புதுவையிலும் பலி ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து உள்ளாட்சி துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் உணவகங்கள், சலையோர உணவு கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும்.
தடை செய்த பொருட்களை உணவுகளில் கலப்பதை தடுத்து கடுமையான நடவடிக்கைகள் எடுத்து உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு முன்னெச்சரிக்கை நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
புதுவை மின் துறையை தனியார் மயமாக்கும் முடிவு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதுவை மாநிலம் முழுவதும் பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்த கவர்னர் தமிழிசை அனுமதி அளித்துள்ளார்.இதற்காக அரசு ரூ.360 கோடி செலவு செய்வது மக்களுடைய வரி பணத்தை வீணடிக்கும் செயலாகும்.
பிரீபெய்டு மீட்டர் பொருத்த முன்பணமாக ரூ.9 ஆயிரம் கேட்கின்றனர். பிரீபெய்டு மீட்டர் பொருத்துவது மக்களை வஞ்சிக்கும்.புதுவை மின்துறை என்பது ஒரு கூட்டுகொள்ளை அடிக்கும் துறையாக உள்ளது.
இவ்வாறு அன்பழகன் கூறினார்.
- கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
- மாநிலத்தில் நிலவும்போதுஎப்படி மக்கள் முன்னதாகவே பணம் கட்டி மின்சாரத்தை உபயோகப்படுத்த முடியும் என்பதனை புதுச்சேரி அரசு எண்ணிப் பார்க்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. துணை அமைப்பாளரும், உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-
புதுவை கவர்னர் மாநிலம் முழுவதும் இருக்கின்ற பழைய மின்மீட்டர்களை மாற்றி, புதிய கொள்கை முடிவாக மக்கள் முன்னதாகவே பணம் செலுத்தி மின்சாரத்தை பயன்படுத்தும் முறையினை கொண்டு வருவதாக சமீபத்தில் அறிவித்துள்ளார்.
இந்த புதிய கொள்கை முடிவினை மக்களின் கருத்தை அறியமாலும், எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனைகளை கேட்காமலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று திட்டமிடும் கொள்கை முடிவினை புதுவை மாநில தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது. ஏறக்குறைய ரூ. 360 கோடியில் திட்ட செலவினங்கள் இருக்கின்ற இந்தத் திட்டத்தினை அமுல்படுத்தும்போது அது மக்களுக்கு பயன் அளிக்குமா? அதனால் மக்கள் பாதிக்கப்ப டுவார்களா? என்பதனை கூட அறியாமல் அரசு இம்மாதிரி மக்கள் விரோத கொள்கைகளை வெளியிடுவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஏற்கனவே புதுச்சேரி அரசு மின்துறையினை தனியார் மயமாக்க கடும் முயற்சி எடுத்து அமல்படுத்த முனைகின்றது. அந்த துறைக்கு இவ்வளவு பெரிய தொகை ஒதுக்க வேண்டும் என்பதில் எங்களை போன்ற எம்.எல்.ஏ.க்கள் அல்லாமல் மக்களுக்கும் சந்தேகம் எழுகின்றது.
புதுச்சேரி மாநிலத்தில் ஏறக்குறைய 1.75 லட்சம் குடும்பங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதாக அரசு கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
மேலும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளதாக -அரசின் திட்டங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக விண்ணப்பித்து நிலுவையில் காத்திருக்கின்றனர். வேலைவாய்ப்பின்மை பெருக்கம்- மக்களின் வாங்கும் சக்தி குறைவு போன்ற சூழல்கள் நமது மாநிலத்தில் நிலவும்போதுஎப்படி மக்கள் முன்னதாகவே பணம் கட்டி மின்சாரத்தை உபயோகப்படுத்த முடியும் என்பதனை புதுச்சேரி அரசு எண்ணிப் பார்க்க வேண்டும்.
எனவே தொழில்நுட்பம் என்ற பெயரில் மக்களை வஞ்சிக்கும்' ப்ரீபெய்டு"போன்ற திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- இடையஞ்சாவடி பகுதியில் வந்த போது எதிரே வந்த பள்ளி வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி அருகே ஆரோவில் சர்வதேச நகரம் உள்ளது. இங்கு வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.
அதுபோல் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மைக்கேல் அலெக்சாண்டர் (வயது 45) என்பவர் ஆரோவில்லில் வசித்து வந்தார். சம்பவத்தன்று இவர், புதுச்சேரிக்கு சென்று விட்டு ஆரோவில் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இடையஞ்சாவடி பகுதியில் வந்த போது எதிரே வந்த பள்ளி வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த மைக்கேல் அலெக்சாண்டரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்
- பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான தாமரைச்செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
புதுச்சேரி:
பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்த நாளையொட்டி சந்திராயன் விண்கலம் வெற்றி விழா விற்கான வினாடி-வினா போட்டி ராஜ்பவன் தொகு திக்குட்பட்ட நியூ மாடர்ன் வித்யா மந்திரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வி.பி. ராம லிங்கம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். சந்திராயன் விண்கலம் பற்றிய கேள்விகளை மாணவ- மாணவியரிடம் எழுப்பி பதில் அளித்த மாணவ-மாணவிகளை பாராட்டி னார். மேலும் வினாடி-வினா போட்டிக்கான மாநில பொறுப்பாளரும் பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான தாமரைச்செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு நியூ மாடர்ன் வித்யா மந்திர் பள்ளியின் தாளாளர் கஸ்தூரி, துணை முதல்வர் குலசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். ராஜ்பவன் தொகுதியின் பா.ஜனதா தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். ஒ.பி.சி. அணியை சேர்ந்த ரஞ்சித் மற்றும் ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த நிர்வாகிகள் கதிரவன், உமா மகேஸ்வரி மற்றும் மாணவ-மாணவி யர் கலந்து கொண்டனர்
முடிவில் சரியான பதில் அளித்த மாணவ-மாணவி யருக்கு வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
- 3 பேர் கைது
- மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
புதுச்சேரி;
புதுவை வில்லியனூர்- திருக்காஞ்சி ரோட்டில் நேற்று ஒரு மினி வேன் சந்தேகப்படும்படி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
நீண்ட நேரமாக ஒரே இடத்தில் அந்த மினி வேன் நிற்பது குறித்து சிறப்பு அதிரடிப் படை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைய டுத்து, போலீசார் அங்கு விரைந்து வந்து, அந்த மினி வேனை சோதனையிட்டனர்.
இதில் போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப் படும். எரிசாராயம், கள்ளச் சாராயம், காலி மதுபாட்டில் கள், ஹாலோகிராம் ஸ்டிக்கர்கள், தமிழக போலி மதுபான லேபிள்கள் மற்றும் மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபற்றி உடனடியாக புதுச்சேரி கலால்துறையின ருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கலால்துறை அதிகாரிகள் விரைந்து சென்று, போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப் பட்ட மூலப்பொருட்களு டன் மினிலாரியை கைப் பற்றினர்.
அப்போது சந்தேகப்படும் படி நின்றுக் கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் செந்தில்குமார், சீனு என்பதும். இவர்கள் மினிவேனில் போலி மதுபானம் தயாரித்து அதனை தமிழக பகுதியில் விற்பனை செய்ய தயாராகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
மேலும் விசாரணை நடத்தியதில் இந்த போலி மதுபானம் தயாரிப்பில் காலாப்பட்டை அடுத்த தமிழக பகுதியான அனு மந்தை அருகே செட்டி யான்குப்பம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் முக்கிய குற்றவாளியாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜசேகரையும் கலால் போலீசார் கைது செய்தனர்.
- சட்டசபை தொகுதி வாரியாக ஆலோசனை
- அப்பகுதியில் உள்ள நண்பர்கள் உறவினர்களுக்கு பிரதமர் திட்டத்தினால் பலன் அடைய உதவி செய்ய கேட்டுக் கொள்ள வேண்டும்.
புதுச்சேரி:
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் புதுச்சேரியில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசார பணியிலும் வேட்பாளர் தேர்விலும் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. பா.ஜனதாவினர் சட்டசபை தொகுதி வாரியாக நிாவாகிகளை சந்திந்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பான நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி உழவர்கரை தொகுதியில் மாவட்டத் தலைவர் நாகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய செயலாளர் சத்திய குமார் புதுச்சேரி மாநில தலைவர் சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தேசிய செயலாளர் சத்யகுமார் பேசுகையில் உழவர்கரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளையும் வலிமை படுத்த வேண்டும். அனைத்து கிளைகளில் உள்ள மக்களை நேரடியாக சந்தித்து பிரதமரின் திட்டங்களை தெரிவிக்க வேண்டும். பிரதமர் திட்டத்தினால் பலன் அடைந்தவர்களை சந்தித்து அவர்களை அப்பகுதியில் உள்ள நண்பர்கள் உறவினர்களுக்கு பிரதமர் திட்டத்தினால் பலன் அடைய உதவி செய்ய கேட்டுக் கொள்ள வேண்டும்.
நிர்வாகிகள் அனைவரும் அவரவர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான அரசு சார்ந்த உதவிகளை செய்ய முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் பாராளுமன்ற தேர்தல் பிரவாஸ் மாநில அமைப்பாளர் பாஜக மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் பாராளுமன்ற தேர்தல் பிரவாஸ் மாநில இணை அமைப்பாளர்கள் பட்டியலினி மாநில தலைவர் தமிழ்மாறன் மகளிர் அணி மாநில தலைவி ஜெயலட்சுமி மற்றும் மாநில செயலாளர்கள் அகிலன், லதா உள்பட நூற்றிற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் அருண்குமார் (35), டிரைவர் இவரது மனைவி உஷா
இருவரும் 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக அருண்குமாருக்கு சரியாக வேலை இல்லாததால் குடும்பத்தை நடத்த போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார்.
மேலும் அருண்குமார் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் கணவன், மனைவிடையே சண்டை ஏற்பட்டு வந்தது. கடன் தொல்லையும் அதிகமாகியுள்ளது. இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அருண்குமாரின் மாமியார் லீனாதேவி நேற்று வீட்டிற்கு வந்து இருவரையும் சமாதானம் செய்துவிட்டு சென்றார். இந்த நிலையில் நேற்று இரவு உஷா தனது குழந்தை களுடன் படுக்கை அறையிலும் அருண்குமார் வீட்டு வராண்டாவிலும் தூங்கினர்.
இந்த நிலையில் குழந்தை அழும் சத்தம் கேட்டு அருண்குமார் எழுந்து பார்த்தபோது, படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில்
உஷா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அருண்குமார் உஷாவை மீட்டு புதுவை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உஷா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து முத்தியால் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எம்.எல்.ஏ.க்கள் பிரகாஷ்குமார், சிவசங்கர் தொடங்கி வைத்தனர்
- புதுவை வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை பெருமாள் கோயில் வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புதுவை கண் கண்ணாடி உரிமையா ளர்கள் சங்கம் மற்றும் பிம்ஸ் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் நடத்தியது.
முகாமை எம்.எல்.ஏ.க்கள் பிரகாஷ்குமார், சிவசங்கர் புதுவை வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த முகாமில் முத்தியால்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் சுமார் 300 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
நிகழ்ச்சியில் புதுவை கண் கண்ணாடி உரிமையாளர்கள் சங்க தலைவர் பாலசுப்பி ரமணியன், செயலாளர் ஆனந்தன், பொருளாளர் மதிவாணன், துணை தலைவர்கள் முகமது அலி, நடராஜன், துணைச் செயலாளர்கள் அப்துல்ரசாத், சிவானந்தம் சங்க நிர்வாகிகள் ஜமால்மு கமது, ராஜேந்திரன், பிரகாஷ், குமார், செல்வம், நேரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் பங்கேற்ற பொது மக்களுக்கு இலவச மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
- கிருமாம்பாக்கம் அருகே பரிதாபம்
- மூத்த மகளுக்கு கடந்த மாதம் வெங்கடேசனுக்கு தெரியாமலேயே மங்கையர்கரசி திருமணம் செய்து வைத்தார்.
புதுச்சேரி:
விழுப்புரம் அருகே நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 55). இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக புதுவை கிருமாம்பாக்கத்தை அடுத்த சுள்ளியாங்குப்பம், குறிஞ்சி நகர் பகுதியில் வசித்து வந்தார்.
இவருக்கு மங்கை யர்க்கரசி என்ற மனைவியும் 2 மகள் ஒரு மகன் உள்ளனர். வெங்க டேசன் வீட்டிலேயே மாடு வைத்து பண்ணை நடத்தி பால் வியாபாரம் செய்து வந்தார்.
இவரது மனைவி மங்கைக்கரசி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தமிழகப் பகுதியில் வசித்து வருகிறார். மேலும் இவர்களது மகள் மற்றும் மகனும் தாயுடனே இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் மூத்த மகளுக்கு கடந்த மாதம் வெங்கடேசனுக்கு தெரியாமலேயே மங்கையர்கரசி திருமணம் செய்து வைத்தார். இதனால் வெங்கடேசன் மனவேதனை யில் இருந்து வந்துள்ளார்.
மேலும் கடந்த 6 மாதமாக வெங்கடேசன் வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில் அந்தப் பெண்ணும் இவரை தனியாக விட்டு சென்று விட்டார்.
இதனால் தொடர்ந்து மன உளைச்சல் அடைத்த வெங்கடேசன் இன்று காலை வீட்டில் சிமெண்ட் சீட்டு போட்ட கொட்டகையின் கம்பியில் தனது வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த வுடன் கிருமாம்பாக்கம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
- 17 வயதான பிளஸ்-2 மாணவி ஒருவர் ஆசிரியர் கணேஷ்குமார் நடத்திவரும் டியூஷன் செண்டரில் படித்தார்.
- கணேஷ்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அவரை தேடிவந்த னர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த நெடுங்காடு மேல பொன் பேற்றியை சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 43). இவர், நெடுங்காடு ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். மேலும் அப்பகுதியிலேயே தனது மனைவியுடன் சேர்ந்து டியூஷன் செண்டரையும் நடத்தி வந்தார். இந்நிலையில் அப்பள்ளி யில் படிக்கும் 17 வயதான பிளஸ்-2 மாணவி ஒருவர் ஆசிரியர் கணேஷ்குமார் நடத்திவரும் டியூஷன் செண்டரில் படித்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு டியூஷன் செண்டருக்குப் போன மாணவியிடம் ஆசிரி யர் கணேஷ்குமார் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, அந்த மாணவி தனது பெற்றோரிடம் புகார் தெரிவித்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் கணேஷ்குமார் மீது நட வடிக்கை எடுக்க கோரி மாணவியின் பெற்றோர் நெடுங்காடு போலீசில் புகாரளித்தனர். தொடர்ந்து, நெடுங்காடு போலீசார் கணேஷ்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அவரை தேடிவந்த னர். அவரது செல்போன் எண் சிக்னலை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடு பட்டனர். இந்த நிலையில் கும்ப கோணத்தில் உள்ள உறவினர் வீட்டில் ஆசிரியர் கணேஷ்குமார் தலைமறை வாக இருந்தது போலீ சாருக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து நெடுங்காடு சப்- இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார், கும்பகோணம் விரைந்து சென்று ஆசிரியர் கணேஷ் குமாரை கைது செய்தனர்.
- அரசு கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வர் தகவல்
- பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டால் 4 ஆண்டிற்குள் ரேபிஸ் நோய் இல்லாத பகுதியாக புதுவையை மாற்றி விடலாம்.
புதுச்சேரி:
புதுவை பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு ரேபிஸ் நோய் ஒழிப்பு விழிப்புணர்வு மினி மராத்தான் கடற்கரை சாலையில் இன்று நடந்தது.
பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கத் தலைவர் டாக்டர் செல்வமுத்து தலைமை தாங்கினார். புதுவை அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் செழியன் மராத்தானை தொடங்கி வைத்து பேசினார்.
அவர் பேசியதாவது:-
ரேபிஸ் என்பது உயிர் கொல்லி நோய். விலங்குகளிடம் இருந்து மனிதர்களை தாக்ககூடியது. இதற்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு. இதனால் வீடுகளில் வளர்க்கப்படும் விலங்குகளுக்கு தடுப்பூசி அவசியம் போட வேண்டும்.
தவிர்க்க கூடிய இந்த நோய் மனிதர்களுக்கு ஏற்பட்டால் தடுப்பூசியால் மட்டுமே தடுக்க முடியும். தெரு நாய்கள் பாதிக்கப்பட்டி ருந்தால் பொது மக்கள் பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கத்தி னருக்கு தெரிவிக்க வேண்டும். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒருங்கிணைந்த வகையில் தடுப்பூசி போடப்பட்டு ரேபிஸ் நோய் இல்லாத மாநிலமாக கோவா மாற்றப்பட்டுள்ளது. அந்த மாதிரி இலக்கை நோக்கிதான் புதுவையும் செல்கிறது. நாய்களுக்கு தடுப்பூசி போட பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டால் 4 ஆண்டிற்குள் ரேபிஸ் நோய் இல்லாத பகுதியாக புதுவையை மாற்றி விடலாம்.
புதுவையில் ரேபிஸ் நோயால் மனிதர்கள் பாதிப்பு என்பது இல்லை.இருப்பினும் நாய்களுக்கு ரேபிஸ் நோய் அதிக அளவில் உள்ளது.இதனை தடுக்க அரசு போதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இவ்வாறு டாக்டர் செழியன் தெரிவித்தார்.
மராத்தான் நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்களும் தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர்.
கடற்கரை சாலை சீகல்ஸ் ஒட்டல் அருகே தொடங்கிய மராத்தான் பழைய வடிசாலை அருகே முடிந்தது.






