search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் விபத்தில் பலி
    X

    புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் விபத்தில் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இடையஞ்சாவடி பகுதியில் வந்த போது எதிரே வந்த பள்ளி வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அருகே ஆரோவில் சர்வதேச நகரம் உள்ளது. இங்கு வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

    அதுபோல் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மைக்கேல் அலெக்சாண்டர் (வயது 45) என்பவர் ஆரோவில்லில் வசித்து வந்தார். சம்பவத்தன்று இவர், புதுச்சேரிக்கு சென்று விட்டு ஆரோவில் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இடையஞ்சாவடி பகுதியில் வந்த போது எதிரே வந்த பள்ளி வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த மைக்கேல் அலெக்சாண்டரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×