என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இலவச கண் பரிசோதனை-பொது மருத்துவ முகாம்
    X

      இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாமை எம்.எல்.ஏ.க்கள் பிரகாஷ்குமார், சிவசங்கர் வணிகர் கூட்டமைப்பு தலைவர் பாபு தொடங்கி வைத்த காட்சி.

    இலவச கண் பரிசோதனை-பொது மருத்துவ முகாம்

    • எம்.எல்.ஏ.க்கள் பிரகாஷ்குமார், சிவசங்கர் தொடங்கி வைத்தனர்
    • புதுவை வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை பெருமாள் கோயில் வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புதுவை கண் கண்ணாடி உரிமையா ளர்கள் சங்கம் மற்றும் பிம்ஸ் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் நடத்தியது.

    முகாமை எம்.எல்.ஏ.க்கள் பிரகாஷ்குமார், சிவசங்கர் புதுவை வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இந்த முகாமில் முத்தியால்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் சுமார் 300 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    நிகழ்ச்சியில் புதுவை கண் கண்ணாடி உரிமையாளர்கள் சங்க தலைவர் பாலசுப்பி ரமணியன், செயலாளர் ஆனந்தன், பொருளாளர் மதிவாணன், துணை தலைவர்கள் முகமது அலி, நடராஜன், துணைச் செயலாளர்கள் அப்துல்ரசாத், சிவானந்தம் சங்க நிர்வாகிகள் ஜமால்மு கமது, ராஜேந்திரன், பிரகாஷ், குமார், செல்வம், நேரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் பங்கேற்ற பொது மக்களுக்கு இலவச மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×