என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பால் வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை
    X

    கோப்பு படம்.

    பால் வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை

    • கிருமாம்பாக்கம் அருகே பரிதாபம்
    • மூத்த மகளுக்கு கடந்த மாதம் வெங்கடேசனுக்கு தெரியாமலேயே மங்கையர்கரசி திருமணம் செய்து வைத்தார்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் அருகே நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 55). இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக புதுவை கிருமாம்பாக்கத்தை அடுத்த சுள்ளியாங்குப்பம், குறிஞ்சி நகர் பகுதியில் வசித்து வந்தார்.

    இவருக்கு மங்கை யர்க்கரசி என்ற மனைவியும் 2 மகள் ஒரு மகன் உள்ளனர். வெங்க டேசன் வீட்டிலேயே மாடு வைத்து பண்ணை நடத்தி பால் வியாபாரம் செய்து வந்தார்.

    இவரது மனைவி மங்கைக்கரசி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தமிழகப் பகுதியில் வசித்து வருகிறார். மேலும் இவர்களது மகள் மற்றும் மகனும் தாயுடனே இருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மூத்த மகளுக்கு கடந்த மாதம் வெங்கடேசனுக்கு தெரியாமலேயே மங்கையர்கரசி திருமணம் செய்து வைத்தார். இதனால் வெங்கடேசன் மனவேதனை யில் இருந்து வந்துள்ளார்.

    மேலும் கடந்த 6 மாதமாக வெங்கடேசன் வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில் அந்தப் பெண்ணும் இவரை தனியாக விட்டு சென்று விட்டார்.

    இதனால் தொடர்ந்து மன உளைச்சல் அடைத்த வெங்கடேசன் இன்று காலை வீட்டில் சிமெண்ட் சீட்டு போட்ட கொட்டகையின் கம்பியில் தனது வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த வுடன் கிருமாம்பாக்கம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×