என் மலர்
புதுச்சேரி
- போலீசில் புகார்
- 2007-ம் ஆண்டு புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் முறைப்படி திருமணம் செய்து வைத்தனர்.
புதுச்சேரி:
புதுவை கோரிமேடு காமராஜர் நகரை சேர்ந்தவர் விக்னேஷ்வரி (வயது 39) இவரது தந்தை புதுவை காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர் . விக்னேஷ்வரி சரவணன் என்ற வாலிபரை காதலித்து இருவரும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரது பெற்றோரும் பேசி 2007-ம் ஆண்டு புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் முறைப்படி திருமணம் செய்து வைத்தனர்.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். திருமணத்துக்கு முன்பே சரவணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. திருமணத்துக்கு பிறகும் சரவணன் மது குடித்து வந்ததால் இதனை விக்னே ஷ்வரி தட்டிக்கேட்கும் போதெல்லாம் அவரை சரவணன் அடித்து துண்புறுத்தி வந்தார். இதற்கிடையே திருமணத்தின் போது விக்னேஷ்வரிக்கு அவரது பெற்றோர் 35 பவுன் வரதட்சனையாக கொடுத்தனர். அந்த நகையில் வியாபாரம் செய்வதாக கூறி சரவணன் 25 பவுன் நகையை வாங்கி வீணாக செலவு செய்து விட்டார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சரவணனின் நடவடிக்கை யில் மாற்றம் தெரிந்ததால் அவரை செல்போனை விக்னேஷ்வரி ஆராய்ந்து பார்த்தார். அப்போது சரவணனுக்கும் வேறொரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதை கண்டு விக்னேஷ்வரி அதிர்ச்சி அடைந்தார்.
இதனை சரவணனிடம் தட்டிக்கேட்ட போது விக்னேஷ்வரியை அவர் அடித்து துண்புறுத்தினார். ஒருமுறை விக்னேஷ்வரியையும், குழந்தைகளையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார். அதன் பிறகு சமாதானம் அடைந்து விக்னேஷ்வரி குழந்தை களுடன் கணவருடனும் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை சரவணன் குளித்துக் கொண்டிருக்கும் போது அவரது செல்போனை விக்னேஷ்வரி ஆராய்ந்து பார்த்தார்.
இதனை பார்த்ததும் ஆத்திரமடைந்த சரவணன் செல்போனை பறித்து விக்னேஷ்வரியின் காலில் ஓங்கி அடித்தார்.
மேலும் இது பற்றி உனது தந்தையிடம் சொன்னால் இனிமேலும் அதிகமாக துன்புறுத்துவதோடு உன்னையும் உனது தந்தையையும் கொலை செய்து விடுவேன் என்று சரவணன் மிரட்டல் விடுத்தார். இது குறித்து விக்னேஷ்வரி கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் குற்றச்சாட்டு
- நில அபகரிப்பு பிரிவில் புகார் செய்தாலும் எந்த ஒரு தொடர் நடவடிக்கையும் எடுப்பது கிடையாது.
புதுச்சேரி:
புதுவை மக்கள் பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் பேனர் கலாச்சாரம் உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி அரசு ஆதரவுடன் பொதுமக்களின் உயிருக்கு மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அனைத்து இடங்களிலும் போக்குவரத்து சிக்னலை மறைத்து வைக்கப்பட்டுள்ளது மிகவும் கண்டனத்துக்குரியது. இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் தலைவர்கள் பிறந்த நாளின் பொழுது பேனர்கள் வைப்பதை வேடிக்கை பார்த்துவிட்டு பிறந்தநாள் முடிந்த பின்பு அவற்றை எடுக்க வேண்டும் என்று அறிக்கை விடுவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.
அதேபோல் புதுவை மாநிலத்தில் போலி பத்திரங்கள் பதிவது, அதன் மூலம் பொதுமக்கள் மற்றும் அரசிற்கு சொந்தமான இடங்களை அபகரிப்பது என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது தொடர்பான புகார்களை கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் நில அபகரிப்பு பிரிவில் புகார் செய்தாலும் எந்த ஒரு தொடர் நடவடிக்கையும் எடுப்பது கிடையாது.
இதனால் குற்றவாளிகள் எந்த ஒரு பயமும் இன்றி போலியாக ஆவணங்கள் தயாரித்து அப்பாவி மக்களின் இடங்கள், சாலைகள், கோவில் இடங்கள் ஆகியவற்றை தொடர்ந்து அபகரித்து வருகின்றனர்.
இதற்கு எடுத்துக்காட்டாக கிருஷ்ணா நகரில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடமும் அபகரிக்கப்பட்டுள்ளது.
இவற்றுக்கு உடந்தையாக உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் மீது எந்தவித நடவடிக்கையும் முறையாக புதுவை அரசு எடுக்காமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் புதுவை மாநிலத்தில் கட்டப்பஞ்சாயத்து மற்றும் போதைப்பொருட்கள் சரளமாக அனைத்து இடங்க ளிலும் கிடைப்பதாகவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் சீரழிவதாகவும் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து புகார்கள் கூறினாலும் அவற்றை ஒடுக்கவும் சரியான நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே புதுவை கவர்னர் தமிழிசை இதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அண்ணாநகரில் உள்ள ஒரு சுவிட் கடையில் சுவிட் மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
பாகூர் அருகே தமிழக பகுதியான செல்லஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் வயது 29) இவர் தவளகுப்பம் அண்ணாநகரில் உள்ள ஒரு சுவிட் கடையில் சுவிட் மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று வழக்கம் போல் சதீஷ் தனது மோட்டார் சைக்கிளை கடை முன்பு நிறுத்தி விட்டு சுவிட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் சதீஷ் திடுக்கிட்டார். யாரோ மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து சதீஷ் தவள குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 2 வாலிபர்கள் நின்று கொண்டு அவ்வழியே செல்லும் பெண்களை கேலி செய்து ரகளை செய்து கொண்டிருந்தனர்.
- முதலியார் பேட்டை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் 2 வாலிபர்கள் நின்று கொண்டு அவ்வழியே செல்லும் பெண்களை கேலி செய்து ரகளை செய்து கொண்டிருந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்து விரைந்து சென்று அந்த வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முத்திரையர் பாளையம் காந்தி திருநல்லூரை சேர்ந்த வேங்கடேசன் வயது 35) மற்றும் அதே பகுதியை சேர்ந்த துரைராஜ் (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இது போல் முதலியார் பேட்டை ஆலை ரோடு பகுதியில் மது குடித்து விட்டு ரகளை செய்த பக்கிரி பாளையத்தை சேர்ந்த வசந்த் (21) என்பவரை முதலியார் பேட்டை போலீசார் கைது செய்தனர்.
- தட்டாஞ்சாவடி தொகுதி பொய்யாகுளம் பகுதியில் நடந்தது.
- நிதி உதவி பெற்று தரக் கோரியும் வேண்டுகோள் விடுத்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பில் பஸ்தி சம்பர்க் அபியான் நிகழ்ச்சி தட்டாஞ்சாவடி தொகுதி பொய்யாகுளம் பகுதியில் நடந்தது.
இந்நிகழ்ச்சியின் போது அப்பகுதி மக்கள் தாங்கள் செய்து வரும் வியாபாரத்திற்கு போதிய நிதி உதவி இன்றி சிரமப்படுவதாகவும், வியாபார அபிவிருத்திக்கு நிதி உதவி பெற்று தரக் கோரியும் வேண்டுகோள் விடுத்தனர் .
இதனைத் தொடர்ந்து பட்டியல் அணியின் தீவிர முயற்சியில், தெருவோர வியாபாரிகள் 25 நபருக்கு பிரதமரின் ஸ்சுவநிதி திட்டத்தின் கீழ் வங்கி மூலம் நபர் ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் பெற்றுத் தரப்பட்டது.
அதற்கான வங்கியின் அனுமதி கடிதம் வழங்கும் நிகழ்ச்சி பா.ஜனதா கட்சி மாநில தலைமை அலுவலகத்தில் நடந்தது.
பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் பயனாளிகளுக்கு வழங்கினர். நிகழ்ச்சியில், வெங்கடேசன் எம்.எல்.ஏ. மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் , விவசாய அணி தேசிய செயற்குழு உறுப்பினர் பாரதிமோகன், அலுவலக பொறுப்பாளர் மகேஷ், சிவபெருமான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.24.26 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.
- அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
சேதராப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள குடியிருப்புகள் சுமார் 10 வருடமாக சீரமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையாக இருந்த வந்தது.
இந்நிலையில் இந்த குடியிருப்புகளை சீரமைக்க ரூ.24.26 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. சேதராப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் குடிமைப் பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் முரளி, செயற்பொறியாளர் வள்ளவன், உதவி பொறியாளர் பாவாடை, இளநிலை பொறியாளர் ஜோதி, பா.ஜனதா ஊசுடு தொகுதி தலைவர் தியாக ராஜன், துணைத்தலைவர் சதாசிவம், கிளை தலைவர்கள் தேவா, பிரதீப், நரேஷ், மதன், கட்சி நிர்வாகிகள் புருஷோத்த ம்மன், ஏழுமலை, பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- குளம், ஏரி தூய்மை பணியும் நடத்தப்பட்டு வருகிறது.
- நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் அகற்றினர்.
புதுச்சேரி:
புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதுபோல் ஒவ்வொரு சனிக்கிழமையும் குளம், ஏரி தூய்மை பணியும் நடத்தப்பட்டு வருகிறது.
தூய்மை பணியின் 12-வது வாரமாகவும் என்.எஸ்.எஸ். முகாமின் 4-ம் நாளாக இன்று காலை புதுவை கடற்கரை சாலை காந்தி சிலை அருகிலும் மற்றும் கடற்கரை பகுதியிலும் தூய்மைப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக புதுவை போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் மற்றும் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரி மாநில கோஜுரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் அவர்கள் கலந்துகொண்டு நாட்டு நலப்படுத்திட்ட மாணவர்களை ஊக்கப்படு த்தினார். இதில் 2 டன் அளவிற்கு பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி கழிவுகள் மேலும் மரக்கட்டைகள் போன்றவற்றை நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் அகற்றினர்.
புதுச்சேரி நகராட்சி அதிகாரி துளசிராமனிடம் சேகரித்த குப்பைகளை நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் ஒப்படைத்தனர். இந்தத் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளிடமும் பார்வையாளர்களிடமும் பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.
பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் பள்ளியின் துணை முதல்வர் வினோலியா முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியின் ஏற்பாடு களை பள்ளியின் நாட்டு நல பணித்திட்ட அலுவலர் ஜெயந்தி பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் செய்திருந்தனர்.
- கூடோ தற்காப்பு கலை சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது.
- மாநில தலைவர் வளவன் தலைமை தாங்கினார்
புதுச்சேரி:
கூடோ தற்காப்பு கலை சங்கத்தின் மாநில பொதுக் குழு கூட்டம் நடந்தது.
புதுச்சேரி சங்க தலைமை அலுவலகத் தில் நடந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் வளவன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சந்தோஷ்குமார், துணைத் தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர்.
பொருளாளர் செந்தில் வேல் வரவேற்றார். கூட்டத்தில் வருகிற நவம்பர் 22-ம் தேதி, குஜராத் மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கூடோ போட்டிக்கு புதுச்சேரி வீரர் களை தேர்வு செய்வது. மத்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அங்கீகரிக்கப்பட்ட கூடோ விளையாட்டில் மத்திய அரசின் விளையாட்டு சட்ட திட்டங்களை முழுமையாக பின்பற்று வது உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் செல்வம், அசோக், பாலச்சந்தர், வெங்கடாஜலபதி, ரமேஷ், சுரேஷ், சுப்ரமணியன், வெங்கடேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பாலச்சந்தர் நன்றி கூறினார்.
- மதகடிப்பட்டு கிராமத்தில் டெங்கு விழிப்புணர்வு நிகழச்சி நடத்தப்பட்டது.
- பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சுத்தம் செய்தனர்
புதுச்சேரி:
மணக்குள விநாயகர் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் மதகடிப்பட்டு பகுதியில் நடைபெற்ற வாரசந்தை மற்றும் மதகடிப்பட்டு கிராமத்தில் டெங்கு விழிப்புணர்வு நிகழச்சி நடத்தப்பட்டது.
டெங்கு காய்ச்சலை தடுக்கவும், டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்துவது குறித்தும் டெங்குவை வருமுன் தடுப்பது மிக எளிது என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் வீடு வீடாக சென்றும் மற்றும் சந்தையில் கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழச்சியில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எவ்வாறு மூலிகை புகை போடுவது, கொசு உற்பத்தியை தடுப்பது என்பதை பற்றிய குறிப்புகளை கூறியதோடு டயர், உடைந்த பானைகள், தேங்காய் ஓடுகளில் உள்ள தேங்கிய தண்ணீரை பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சுத்தம் செய்தனர். இதில் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் வேலழகன், என்.எஸ்.எஸ். மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- பள்ளி தலைமை ஆசிரியை சகாயமேரி பாத்திமா தலைமை தாங்கினார்.
- ஆசிரியை பானுமதி வரவேற்றார்.
புதுச்சேரி:
பூரணாங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளி மாணர்வகளுக்கு தனியார் பள்ளிகளுக்கு நிகராக தொடர்ந்து 6-வது ஆண்டாக மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி பூரணாங்குப்பம் தனசுந்த ராம்பாள் சாரிடெபிள் சொசைட்டி சார்பில் வழங்கப்பட்டது.
முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியை சகாயமேரி பாத்திமா தலைமை தாங்கினார். ஆசிரியை பானுமதி வரவேற்றார். அறக்கட்ட ளையின் தலைவர் பூரணாங்குப்பம் ஆனந்தன், விவசாய சங்க தலைவர் குமரசாமி, தன்னார்வலர் கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கினர்.
முடிவில் ஆசிரியர் ஆனந்தன் நன்றி கூறினார். இதில் 200 மாணவர்கள் அடையாள அட்டை பெற்றனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரி யர்கள் செய்திருந்தனர்.
- தமிழக அரசு சொகுசு விரைவு பஸ் நேற்று இரவு புறப்பட்டு வந்தது.
- கண்டக்டராக மேகநாதன் இருந்து வந்தார்.
புதுச்சேரி:
சென்னையில் இருந்து கும்பகோணத்துக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தமிழக அரசு சொகுசு விரைவு பஸ் நேற்று இரவு புறப்பட்டு வந்தது. பஸ்சை அரியலூரைச் சேர்ந்த ராஜராஜன் என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக மேகநாதன் இருந்து வந்தார்.
புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் காலாப்பட்டு அருகே தமிழக பகுதியான பிள்ளைச்சாவடி பகுதியில் இன்று அதிகாலை வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை தடுப்பு கட்டையில் அதிவேகமாக மோதியது. இதில் டிரைவரின் அருகில் அமர்ந்து வந்த கண்டக்டர் மேகநாதன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
பஸ்சில் இருந்த பயணிகளும் இடிபாடுகளில் சிக்கினர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்க அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.
பின்னர் இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த விபத்தில் காயமடைந்த பஸ் டிரைவர் ராஜராஜன், கண்டக்டர் மேகநாதன் மற்றும் பஸ்சில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த தினகர், மயிலாடு துறை இளையராஜா, சீர்காழி ஜெயராஜ், நாகப்பட்டினம் முத்தரசன், பாபநாசம் சவுமியா, ரகுநாத் உள்ளிட்ட 8 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பஸ்சை ஓட்டி வந்த ராஜராஜன் புதுச்சேரி எல்லையான காலாப்பட்டு பகுதியை கடந்த போது முன்னால் சென்ற காரை முந்தி செல்ல முயன்றதால் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து பஸ் சாலையின் தடுப்பு கட்டையில் மோதியது தெரியவந்தது.
விபத்தில் பஸ்சின் முன் பகுதி முற்றிலுமாக சேதமடைந்ததால் கிரேன் மூலம் பஸ்சை போலீசார் அப்புறபடுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- மதுபோதையில் வாகனம் ஓட்டாமல் இருக்க, போக்குவரத்து போலீசார், தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
- போலீசார் காரைக்காலின் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்ட னர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் அண்மைக் காலமாக, இரவு 7 மணி முதல் 11 மணி வரை மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால், சாலை விபத்துகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அதனால், மதுபோதையில் வாகனம் ஓட்டாமல் இருக்க, போக்குவரத்து போலீசார், தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சாலையில் செல்லும் சந்தேகப்படும் படியான நபர்களை சுவாச பரிசோ தனை கருவி (பிரீத் அனலை சர்) மூலம் பரிசோதனை செய்து, மது அருந்தி வாகனம் ஓட்டினால், அவரது புகைப்படத்துடன், கோர்ட்டுக்கு சார்ஜ்சீட் அனுப்பி வைத்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வருகின்றனர்.
இத்திட்டம் ஏற்கனவே இருந்தாலும், இரவுநேர விபத்தை தடுக்கும் பொருட்டு தீவிரப்படுத் தப்பட்டுள்ளது. அதன்படி, சீனியர் போலீஸ் சூப்பி ரண்டு (பொறுப்பு) நிதின் கவ்ஹால்ரமேஷ் உத்தர வின் பேரில், காரைக்கால் போக்குவரத்து இன்ஸ் பெக்டர் மரிகிறிஸ்டியன் பால் மற்றும் போக்குவரத்து போலீசார் காரைக்காலின் பல்வேறு இடங்களில் சோதனை மேற் கொண்டனர். இந்த பரிசோதனை இனி அடிக்கடி நடைபெறும் என்பதால், வாகன ஓட்டி கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது. அதிவேக மாக வும் வாக னம் ஓட்டக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ள னர்.






