search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பேனர் அகற்றம் விவகாரத்தில் அரசு அதிகாரிகள் அலட்சியம்
    X

    கோப்பு படம்.

    பேனர் அகற்றம் விவகாரத்தில் அரசு அதிகாரிகள் அலட்சியம்

    • மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் குற்றச்சாட்டு
    • நில அபகரிப்பு பிரிவில் புகார் செய்தாலும் எந்த ஒரு தொடர் நடவடிக்கையும் எடுப்பது கிடையாது.

    புதுச்சேரி:

    புதுவை மக்கள் பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் பேனர் கலாச்சாரம் உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி அரசு ஆதரவுடன் பொதுமக்களின் உயிருக்கு மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அனைத்து இடங்களிலும் போக்குவரத்து சிக்னலை மறைத்து வைக்கப்பட்டுள்ளது மிகவும் கண்டனத்துக்குரியது. இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் தலைவர்கள் பிறந்த நாளின் பொழுது பேனர்கள் வைப்பதை வேடிக்கை பார்த்துவிட்டு பிறந்தநாள் முடிந்த பின்பு அவற்றை எடுக்க வேண்டும் என்று அறிக்கை விடுவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

    அதேபோல் புதுவை மாநிலத்தில் போலி பத்திரங்கள் பதிவது, அதன் மூலம் பொதுமக்கள் மற்றும் அரசிற்கு சொந்தமான இடங்களை அபகரிப்பது என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இது தொடர்பான புகார்களை கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் நில அபகரிப்பு பிரிவில் புகார் செய்தாலும் எந்த ஒரு தொடர் நடவடிக்கையும் எடுப்பது கிடையாது.

    இதனால் குற்றவாளிகள் எந்த ஒரு பயமும் இன்றி போலியாக ஆவணங்கள் தயாரித்து அப்பாவி மக்களின் இடங்கள், சாலைகள், கோவில் இடங்கள் ஆகியவற்றை தொடர்ந்து அபகரித்து வருகின்றனர்.

    இதற்கு எடுத்துக்காட்டாக கிருஷ்ணா நகரில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடமும் அபகரிக்கப்பட்டுள்ளது.

    இவற்றுக்கு உடந்தையாக உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் மீது எந்தவித நடவடிக்கையும் முறையாக புதுவை அரசு எடுக்காமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் புதுவை மாநிலத்தில் கட்டப்பஞ்சாயத்து மற்றும் போதைப்பொருட்கள் சரளமாக அனைத்து இடங்க ளிலும் கிடைப்பதாகவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் சீரழிவதாகவும் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து புகார்கள் கூறினாலும் அவற்றை ஒடுக்கவும் சரியான நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே புதுவை கவர்னர் தமிழிசை இதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Next Story
    ×