என் மலர்
புதுச்சேரி

வினாடி-வினா போட்டியில் பங்கேற்ற மாணவிகளுக்கு வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. சான்றிதழ் வழங்கிய காட்சி.
சந்திராயன் குறித்து வினாடி-வினா போட்டி
- வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்
- பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான தாமரைச்செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
புதுச்சேரி:
பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்த நாளையொட்டி சந்திராயன் விண்கலம் வெற்றி விழா விற்கான வினாடி-வினா போட்டி ராஜ்பவன் தொகு திக்குட்பட்ட நியூ மாடர்ன் வித்யா மந்திரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வி.பி. ராம லிங்கம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். சந்திராயன் விண்கலம் பற்றிய கேள்விகளை மாணவ- மாணவியரிடம் எழுப்பி பதில் அளித்த மாணவ-மாணவிகளை பாராட்டி னார். மேலும் வினாடி-வினா போட்டிக்கான மாநில பொறுப்பாளரும் பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான தாமரைச்செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு நியூ மாடர்ன் வித்யா மந்திர் பள்ளியின் தாளாளர் கஸ்தூரி, துணை முதல்வர் குலசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். ராஜ்பவன் தொகுதியின் பா.ஜனதா தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். ஒ.பி.சி. அணியை சேர்ந்த ரஞ்சித் மற்றும் ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த நிர்வாகிகள் கதிரவன், உமா மகேஸ்வரி மற்றும் மாணவ-மாணவி யர் கலந்து கொண்டனர்
முடிவில் சரியான பதில் அளித்த மாணவ-மாணவி யருக்கு வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.






