search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பிரீபெய்டு திட்டத்தை அரசு கைவிட வேண்டும்
    X

    கோப்பு படம்.

    பிரீபெய்டு திட்டத்தை அரசு கைவிட வேண்டும்

    • கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • மாநிலத்தில் நிலவும்போதுஎப்படி மக்கள் முன்னதாகவே பணம் கட்டி மின்சாரத்தை உபயோகப்படுத்த முடியும் என்பதனை புதுச்சேரி அரசு எண்ணிப் பார்க்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. துணை அமைப்பாளரும், உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    புதுவை கவர்னர் மாநிலம் முழுவதும் இருக்கின்ற பழைய மின்மீட்டர்களை மாற்றி, புதிய கொள்கை முடிவாக மக்கள் முன்னதாகவே பணம் செலுத்தி மின்சாரத்தை பயன்படுத்தும் முறையினை கொண்டு வருவதாக சமீபத்தில் அறிவித்துள்ளார்.

    இந்த புதிய கொள்கை முடிவினை மக்களின் கருத்தை அறியமாலும், எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனைகளை கேட்காமலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று திட்டமிடும் கொள்கை முடிவினை புதுவை மாநில தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது. ஏறக்குறைய ரூ. 360 கோடியில் திட்ட செலவினங்கள் இருக்கின்ற இந்தத் திட்டத்தினை அமுல்படுத்தும்போது அது மக்களுக்கு பயன் அளிக்குமா? அதனால் மக்கள் பாதிக்கப்ப டுவார்களா? என்பதனை கூட அறியாமல் அரசு இம்மாதிரி மக்கள் விரோத கொள்கைகளை வெளியிடுவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    ஏற்கனவே புதுச்சேரி அரசு மின்துறையினை தனியார் மயமாக்க கடும் முயற்சி எடுத்து அமல்படுத்த முனைகின்றது. அந்த துறைக்கு இவ்வளவு பெரிய தொகை ஒதுக்க வேண்டும் என்பதில் எங்களை போன்ற எம்.எல்.ஏ.க்கள் அல்லாமல் மக்களுக்கும் சந்தேகம் எழுகின்றது.

    புதுச்சேரி மாநிலத்தில் ஏறக்குறைய 1.75 லட்சம் குடும்பங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதாக அரசு கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

    மேலும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளதாக -அரசின் திட்டங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக விண்ணப்பித்து நிலுவையில் காத்திருக்கின்றனர். வேலைவாய்ப்பின்மை பெருக்கம்- மக்களின் வாங்கும் சக்தி குறைவு போன்ற சூழல்கள் நமது மாநிலத்தில் நிலவும்போதுஎப்படி மக்கள் முன்னதாகவே பணம் கட்டி மின்சாரத்தை உபயோகப்படுத்த முடியும் என்பதனை புதுச்சேரி அரசு எண்ணிப் பார்க்க வேண்டும்.

    எனவே தொழில்நுட்பம் என்ற பெயரில் மக்களை வஞ்சிக்கும்' ப்ரீபெய்டு"போன்ற திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×