search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரேபிஸ் நோய் இல்லாத பகுதியாக 4 ஆண்டில் புதுவை மாறும்
    X

    மராத்தானை அரசு கால்நடை கல்லூரி முதல்வர் செழியன் கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.

    ரேபிஸ் நோய் இல்லாத பகுதியாக 4 ஆண்டில் புதுவை மாறும்

    • அரசு கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வர் தகவல்
    • பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டால் 4 ஆண்டிற்குள் ரேபிஸ் நோய் இல்லாத பகுதியாக புதுவையை மாற்றி விடலாம்.

    புதுச்சேரி:

    புதுவை பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு ரேபிஸ் நோய் ஒழிப்பு விழிப்புணர்வு மினி மராத்தான் கடற்கரை சாலையில் இன்று நடந்தது.

    பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கத் தலைவர் டாக்டர் செல்வமுத்து தலைமை தாங்கினார். புதுவை அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் செழியன் மராத்தானை தொடங்கி வைத்து பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    ரேபிஸ் என்பது உயிர் கொல்லி நோய். விலங்குகளிடம் இருந்து மனிதர்களை தாக்ககூடியது. இதற்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு. இதனால் வீடுகளில் வளர்க்கப்படும் விலங்குகளுக்கு தடுப்பூசி அவசியம் போட வேண்டும்.

    தவிர்க்க கூடிய இந்த நோய் மனிதர்களுக்கு ஏற்பட்டால் தடுப்பூசியால் மட்டுமே தடுக்க முடியும். தெரு நாய்கள் பாதிக்கப்பட்டி ருந்தால் பொது மக்கள் பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கத்தி னருக்கு தெரிவிக்க வேண்டும். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஒருங்கிணைந்த வகையில் தடுப்பூசி போடப்பட்டு ரேபிஸ் நோய் இல்லாத மாநிலமாக கோவா மாற்றப்பட்டுள்ளது. அந்த மாதிரி இலக்கை நோக்கிதான் புதுவையும் செல்கிறது. நாய்களுக்கு தடுப்பூசி போட பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டால் 4 ஆண்டிற்குள் ரேபிஸ் நோய் இல்லாத பகுதியாக புதுவையை மாற்றி விடலாம்.

    புதுவையில் ரேபிஸ் நோயால் மனிதர்கள் பாதிப்பு என்பது இல்லை.இருப்பினும் நாய்களுக்கு ரேபிஸ் நோய் அதிக அளவில் உள்ளது.இதனை தடுக்க அரசு போதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இவ்வாறு டாக்டர் செழியன் தெரிவித்தார்.

    மராத்தான் நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்களும் தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர்.

    கடற்கரை சாலை சீகல்ஸ் ஒட்டல் அருகே தொடங்கிய மராத்தான் பழைய வடிசாலை அருகே முடிந்தது.

    Next Story
    ×