என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • மூட்டையில் கட்டி வைத்திருந்த 50 காமாட்சி யம்மன் விளக்குகள் மற்றும் கட்டிங் மிஷின் ஆகியவை திருடப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டார்
    • கேமராக்களை ஆய்வு செய்து காமாட்சியம்மன் விளக்குகள் மற்றும் எந்திரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கீழ் அக்ரகாரம் தண்ணீ தொட்டி தெருவை சேர்ந்தவர் அய்யனார்(வயது43). இவர் வில்லியனூர் ஜி.என்.பாளையத்தில் பித்தளை பொருட்களுக்கு பாலிஷ் போடும் கடை வைத்து தொழில் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலையில் வழக்கம் போல் கடைக்கு வந்த போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார்.

    பின்னர் கடையின் உள்ளே சென்று பார்த்த போது அங்கு பாலிஷ் செய்து மூட்டையில் கட்டி வைத்திருந்த 50 காமாட்சி யம்மன் விளக்குகள் மற்றும் கட்டிங் மிஷின் ஆகியவை திருடப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டார். யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் கடையின் மேற்கூரையின் ஓட்டை பிரிந்து உள்ளே சென்று காமாட்சியம்மன் விளக்குகள் மற்றும் எந்திரத்தை திருடி சென்றி ருப்பது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து அய்யனார் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்வை யிட்டு விசாரணை நடத்தி னர். மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து காமாட்சியம்மன் விளக்குகள் மற்றும் எந்திரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • சாமிநாதனின் பதவிக்காலம் கடந்த 2018-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
    • பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜ.க. தலைவராக சாமிநாதன் கடந்த 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பா.ஜ.க. கட்சி விதிகளின்படி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார்.

    அந்த வகையில் சாமிநாதனின் பதவிக்காலம் கடந்த 2018-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

    அதன்பின் 2020-ம் ஆண்டு மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவரது பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் மாநில தலைவர் பதவியை பிடிக்க கட்சி நிர்வாகிகள் பலரும் முயற்சித்து வந்தனர்.

    இந்தநிலையில் பா.ஜ.க.வின் புதுவை மாநில தலைவராக செல்வகணபதி எம்.பி. நேற்று நியமிக்கப்பட்டார். இதனை பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    • நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க தொகுதி பங்கீடு செய்து போட்டியிட்டது.
    • அ.தி.மு.க போட்டியிட்ட 5 தொகுதியிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. இதனால் அ.தி.மு.க சட்டசபையில் இடம்பெறவில்லை.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அ.தி.மு.க தலைமை அலுவலகத்திலிருந்து இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை தமிழகத்தில் எடுக்கப்படும் முடிவுகள்தான் புதுவையில் பின்பற்றப்படும்.

    புதுவையில் மாநில கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரான ரங்கசாமிதான் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக உள்ளார்.

    நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க தொகுதி பங்கீடு செய்து போட்டியிட்டது. இதில் அ.தி.மு.க போட்டியிட்ட 5 தொகுதியிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. இதனால் அ.தி.மு.க சட்டசபையில் இடம்பெறவில்லை.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

    ஆட்சியில் அ.தி.மு.க இடம் பெறாவிட்டாலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்ததால் ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக புதுவை அ.தி.மு.க. செயல்பட்டு வந்தது.

    தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமிழகத்தில் அ.தி.மு.க விலகியிருப்பதால் புதுவையிலும் கூட்டணியில் இருந்து அ.தி.மு.க விலகியது. ஆனால் புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி தொடர்கிறது.

    என்.ஆர்.காங்கிரசுக்கு 10 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜனதாவுக்கு 6 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இதுதவிர பா.ஜனதாவை ஆதரிக்கும் 3 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும், 3 பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்களும் அரசுக்கு ஆதரவாக உள்ளனர்.

    என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இணைந்துள்ளதால்தான் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி புதுவையில் நடக்கிறது. இதனால் இந்த 2 கட்சிகளும் பிரிவதற்கு வாய்ப்பில்லை.

    புதுவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க வெளியேறுவதால் ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

    அதேநேரத்தில் எதிர்கட்சிகளாக தி.மு.க, காங்கிரஸ் உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் தி.மு.க, கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணியும் நேரடியாக மோதும் சூழ்நிலை இருந்து வந்தது.

    தற்போது அ.தி.மு.க தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறி இருப்பதால் புதுவை பாராளுமன்ற தொகுதியில் மும்முனைப்போட்டி உருவாகியுள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறும் கூட்டணி கட்சிகளோடு புதுவையிலும் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து தனியாக தேர்தலை சந்திக்க உள்ளது.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதி
    • அரசில் காலியாக உள்ள மருந்தாளுனர் பதவிகள் விரைவில் மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படும் என்றார்.

    புதுச்சேரி:

    உலக மருந்தாளுநர்கள் தினம் புதுவை பார்மசி கவுன்சில் சார்பில் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரியில் கொண்டாடப்பட்டது.

    உலக மருந்தாளுநர் தினத்தையொட்டி நடந்த பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பரிசுகளை வழங்கி பேசினார்.

    அவர்பேசியதாவது:-

    சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதில் மருந்தாளுனர்களின பங்கு இன்றியமையாதது. அவர்களின் சேவை மகத்தானது. புதுவை அரசில் காலியாக உள்ள மருந்தாளுனர் பதவிகள் விரைவில் மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்ப ப்படும் என்றார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் பொது சுகாதார இணை இயக்குனர் டாக்டர் முரளி, அன்னை தெரசா கல்வி நிறுவன முதல்வர் டாக்டர் ரவிச்சந்திரன், பார்மசி கவுன்சில் தலைவர் ஜெகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவுன்சில் உறுப்பினர்கள் சத்தியமூர்த்தி, விமல்ராஜ், ஜெயபிரகாஷ், பதிவாளர் பாலமுருகன் செய்தி ருந்தனர். சிறந்த ஆசிரியர் விருது பெற்ற பார்மசி கவுன்சில் உறுப்பினர் கவிமணிக்கு வாழ்த்து தெரி விக்கப்பட்டது. துணைத் தலைவர் வினோத்குமார் நன்றி கூறினார்.

    • போலீசாருடன் தள்ளு முள்ளு-பரபரப்பு
    • ஊழியர்கள் மிஷன் வீதி, லப்போர்த் வீதி வழியாக ஆம்பூர் சாலைக்கு ஊர்வலமாக வந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித் துறையில் 2015-ம் ஆண்டு நூற்றுக்கணக்கான ஊழி–யர்கள் பணியில் அமர்த்தப் பட்டனர்.

    2016-ம் ஆண்டு சட்ட–மன்ற தேர்தல் அறிவிக்கப் பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளின்கீழ் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். தேர்தலுக்கு பின் தங்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    ஆனால் அரசு அவர் களை பணியில் அமர்த்த–வில்லை. இந்த நிலையில் பொதுப்பணித்துறையில் பணி–நீக்கம் செய்யப்பட்ட ஊழி–யர்கள் போராட்டக் குழுவை உருவாக்கி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

    ஆனால் 6 மாதங்களை கடந்தும் இன்னும் வேலை வழங்கவில்லை. இதை–யடுத்து தங்களுக்கு வேலை வழங்கக்கோரி சட்ட–சபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்த–னர். இதற்காக ஆம்பூர் சாலை செயின்ட்பால் வீதியில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் தெய்வீகன் தலைமையில் இன்று திரண்டனர்.

    ஒருங்கிணைப்பாளர் கள் வினோத், சத்தியவதி, மணி–வண்ணன், புண்ணியகோடி, புகழேந்தி, ஆனந்தபாபு, பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவர்களை சட்டசபை நோக்கி செல்ல விடாமல் போலீசார் பேரிகார்டுகளை அமைத்து தடுத்து நிறுத்தி னர். இதனால் ஊழியர்கள் மிஷன் வீதி, லப்போர்த் வீதி வழியாக ஆம்பூர் சாலைக்கு ஊர்வலமாக வந்தனர்.

    அவர்களை போலீசார் மீண்டும் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போலீசாரு டன் அவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் செயிண்ட் தாழ் வீதி - ஆம்பூர் சாலை சந்திப்புக்கு அனுப்பி வைத்தனர். அங்கு போராட்டக் காரர்கள் பேரிகார்டுகளை தள்ளி முன்னேறிச் செல்ல முயன்ற னர்.

    இதனால் ஒருபுறம் போலீசாரும், மறுபுறும் போராட்டக்குழுவினரும் பேரிகார்டுகளை தள்ளிய தால் பரபரப்பு, பதட்டம், வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதையடுத்து போராட்டக்குழுவினர் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் முதல்-அமைச் சரை சந்திக்க அவர்கள் காத்திருந்தனர்.

    • விலை உயர்ந்த பைக்குகள் பறிமுதல்
    • பெரியமுதலியார்சாவடி வீரமணி, லாஸ்பேட்டை குமரன் நகர் நிர்மல்குமார் ஆகியோர் என்பது தெரிய வந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான பொம்மையர்பாளையம் கடற்கரை பகுதியில் ஒரு கும்பல் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கில் பணம் வைத்து சூதாடுவதாக கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து நேற்று சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் பொம்மை யார்பாளையம் கடற்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்ேபாது அங்கு புதருக்குள் பதுங்கி சூதாடிய கும்பலை போலீ சார் சுற்றி வளைத்தனர்.

    விசாரணையில் பெரிய முதலியார்சாவடி பஜனை கோவில் வீதியைச் சேர்ந்த ஸ்ரீராம், சின்னமுதலியார் சாவடி ஜெயமுத்து மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த செந்தில், பெரியமுதலியார்சாவடி வீரமணி, லாஸ்பேட்டை குமரன் நகர் நிர்மல்குமார் ஆகியோர் என்பது தெரிய வந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4120 ரொக்கபணம், விலை உயர்ந்த 2 பைக்குகள், மற்றும் சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்
    • அரசு மிக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்த மீன வர்களை தனியாக பிரித்து ஈ.பி.சி. என்ற பிரிவை உருவாக்கியது.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தங்களை ஈ.பி.சி. பிரிவிலிருந்து மாற்றி எம்.பி.சி. எனப்படும் மிக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த கோரிக்கை மிகவும் நியாயமானது. 2005-ம் ஆண்டு வரை மிக பிற்படுத்தப்பட்டோர் என்ற சமூக பிரிவே புதுவையில் கிடையாது. பல போராட்டத் துக்கு பின் எம்.பி.சி. பிரிவு உருவாக்கப்பட்டது.

    இதன்பின் ஓ.பி.சி.யில் இருந்த 12 சமுதாயங்கள் எம்.பி.சி. பட்டியலில் சேர்க்கப்பட்டன. அதில், புதுவை, காரைக்கால், மாகி, ஏனம் மீனவர்களும் சேர்க்கப் பட்டனர். இவர்க ளுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு அளித்து அர சாணை பிறப்பிக்கப்பட்டது.

    இந்த ஒதுக்கீடு 2010-ம் ஆண்டுவரை தொடர்ந்தது. 2010-ல் புதுவை அரசு மிக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்த மீன வர்களை தனியாக பிரித்து ஈ.பி.சி. என்ற பிரிவை உருவாக்கியது.

    அதற்கு எம்.பி.சி. இட ஒதுக்கீடான 20 சதவீதத்தில் 2 சதவீதத்தை ஒதுக்கியது. இந்த பிரிவு புதுவை, காரைக்காலுக்கு மட்டும் செயல்படுத்தப்பட்டது.

    இந்த நடைமுறையால், மீனவர் பிள்ளைகளுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் உரிமைகள் பறிக்கப்பட்டு வஞ்சிக்கப் படுகின்றனர். அவர்களுக்கு எந்த சலுகையும் கிடைக்க வில்லை. எனவே காரைக்கால் மீனவர்களை மீண்டும் எம்.பி.சி.யில் சேர்க்கவேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • காய்கறி மாலையுடன் திரண்டனர்
    • அனைத்து குடும்ப தலைவி களுக்கும் ரூ.ஆயிரம் உரிமைத்தொகை வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்த நேருவீதி-மிஷன்வீதி சந்திப்பிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.

    ஊர்வலத்துக்கு மாதர்சங்க மாநில தலைவி முனியம்மாள் தலைமை தாங்கினார். துணை செயலாளர் உமாசாந்தி, மாநிலக்குழு உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் இளவரசி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    ஊர்வலத்தில் மாநிலக்குழு உறுப்பினர்கள் தாட்சாயிணி, பரிமளா, பிரியா, ஜானகி, சிவசங்கரி, கோமதி, மாலதி, சந்திர வதனி, மலர்விழி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ஊர்வலம் மிஷன்வீதி வழியாக கவர்னர் மாளிகை நோக்கி வந்தது. செயின்ட் தாழ் வீதியில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    ஊர்வலத்தில் வந்தவர்கள் பால் பாக்கெட், காய்கறி, மளிகை பொருட்களை நூலில் கட்டி தூக்கி வந்தனர். ரேஷன்கடைகளை திறந்து அரிசி, அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் மீதான விலைவாசி உயர்வை தடுக்க வேண்டும்.

    ரெஸ்டோபார்களை இழுத்து மூட வேண்டும். அனைத்து குடும்ப தலைவி களுக்கும் ரூ.ஆயிரம் உரிமைத்தொகை வழங்க வேண்டும்.

    மகளிருக்கு இலவச பஸ் இயக்க வேண்டும். வேலை உறுதி திட்டத்தை 100 நாட்கள் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கோரிக்கை களை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    பின்னர் அவர்கள் களைந்து சென்றனர்.

    • பணியை தடுத்து நிறுத்தினர்
    • , புதுவைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக போர்வெல் அமைக்கப் படுவதாக கருதி எதிர்ப்பு தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே ஆழ்துளை கிணறு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்திய தால் பரபரப்பு ஏற்பட்டது

    நெட்டப்பாக்கம் அருகே பனையடிக்குப்பம் கிராமத்தில் அரசு பள்ளி அருகே ரூ. 19 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்க புதுவை அரசு பொதுப்பணித்துறை மூலம் முடிவு செய்யப்பட்டது.

    இன்று காலை அதற்காக பூமி பூஜை விழா நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்தது. பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பீனாராணி, இளநிலை பொறியாளர் ஜீவானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைக்க வந்தனர்.

    இந்த நிலையில் பனை யடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்கள் ஊரில் ஏற்கனவே போர்வெல் இருப்பதாகவும், தற்பொழுது கூடுதல் போர்வேல் வேண்டாம் என்றும், புதுவைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக போர்வெல் அமைக்கப் படுவதாக கருதி எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் பூமி பூஜையை பணி தடுத்து நிறுத்தினர். இதனால் பொது மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    கரையாம்புத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீ சார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    பின்னர் பொதுமக்கள் அனைவரும் போர்வெல் வேண்டாம் என்று எழுத்து பூர்வமாக அதிகாரியிடம் எழுதிக் கொடுத்ததின் பேரில் அதிகாரிகள் கலைந்து சென்றனர். இதனால் பனையடிக்குப்பம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி சான்றிதழ் வழங்கினார்
    • ஜோதி கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ். 7 நாள் சிறப்பு முகாமில்

    என்.எஸ்.எஸ். உதய தினத்தையொட்டி பள்ளி நாட்டு நலப் பணித்திட்டமும் மற்றும் ஜிப்மர் ரத்த வங்கியும் இணைந்து ரத்ததான முகாம் மற்றும் ஜோதி கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி, உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வும் மற்றும் மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தின் தலைவருமான நேரு ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். மேலும் ரத்த தானம் செய்த தன்னார்வலர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தனர். மாநில அளவிலான நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கி ணைப்பாளர் சதீஷ்குமார், பள்ளி அளவிலான நாட்டு நல பணித்திட்ட ஒருங்கி ணைப்பாளர் மதிவாணன், ஜிப்மர் ரத்த வங்கி டாக்டர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுவை மாநில கோஜுரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

    பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியின் ஏற்பாடு களை பள்ளியின் நாட்டு நல பணித்திட்ட அலுவலர் ஜெயந்தி, பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும் செய்திருந்தனர்.

    • ரஜகுலத்தோர் நலச்சங்கம் அறிவிப்பு
    • சலவைதுறை அருகே அரசு இடத்தில் இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை பிரதேச ரஜகுலத்தோர் நலச்சங்க கூட்டம் பாரதி பூங்காவில் நடந்தது.

    மாநில தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். செயலாளர் முத்தா பலராமன், பொருளாளர் பார்த்த சாரதி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    பாகூர் சலவைதுறை அருகே அரசு இடத்தில் இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். திருபுவனை, கூனிச்சம்பட்டு, காட்டேரிக்குப்பம் சலவை துறைகளை புனரமைக்க வேண்டும். சலவை துறைகளின் வாடகை, மின் கட்டணத்தை இலவசமாக வழங்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    இந்த தீர்மானங்களை வலியுறுத்தி வரும் அக்டோபர் 17-ந் தேதி உள்ளாட்சி துறை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. 

    • சி.டி.சி டீன் - 1, தொழில் நுட்ப அலுவலர் - 1, ஆராய்ச்சி உதவியாளர் -4. உள்ளிட்ட 28 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
    • ஆன்லைன் மூலம் வருகிற 7-ந் தேதி வரை தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக் கழகத்தில் காலி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.

    உடற்கல்வி இயக்குனர், சிஸ்டம் மேலாளர், வேலைவாய்ப்பு அலுவலர், மக்கள் தொடர்பு அலுவலர், தணிக்கை அலுவலர், தோட்டக்கலை நிபுணர் ஆகிய தலா ஒரு பதவியும், மருத்துவ அதிகாரி-2, டேட்டா என்டரி ஆப்ரேட்டர்- 5, டிரைவர் 14, எம்.டி.எஸ் ஊழியர்கள் 49 உட்பட மொத்தம் 109 பணிகள் நேரடி ஆட்சேர்ப்பு முறையில் நிரப்பப்பட உள்ளன. சி.டி.சி டீன் - 1, தொழில் நுட்ப அலுவலர் - 1, ஆராய்ச்சி உதவியாளர் -4. உள்ளிட்ட 28 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இந்த காலி பணியிடங்கள் குறித்த விபரம் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    ஆன்லைன் மூலம் வருகிற 7-ந் தேதி வரை தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை இணையதளத்தில் பார்வையிடலாம் என பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

    ×