என் மலர்
புதுச்சேரி
- அண்ணாமலை ஈஸ்வரர், கடைத்தெரு மகாமாரியம்மன் உள்ளிட்ட 8 கோவில்கள் இயங்கிவருகிறது.
- ஏதாவது ஒன்றில் இந்த தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவில்களின் உண்டியல் எண்ணப்படுவது வழக்கம்.
புதுச்சேரி:
காரைக்கால் நகர் பகுதியில் கைலாசநாத சுவாமி, நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானத்திற்கு சொந்தமான காரைக்கால் அம்மையார், சித்தி விநாயகர், பொய்யாத மூர்த்தி விநாயகர், அண்ணாமலை ஈஸ்வரர், கடைத்தெரு மகாமாரியம்மன் உள்ளிட்ட 8 கோவில்கள் இயங்கிவருகிறது. ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒருமுறை அல்லது உற்சவம் நடைபெற்று முடிந்த காலம் இவற்றில் ஏதாவது ஒன்றில் இந்த தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவில்களின் உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். கடைசியாக கடந்த மே மாதம் உண்டியல் எண்ணப்பட்டது.
தொடர்ந்து, அனைத்து கோவில்களின் உண்டியல் எண்ணும் பணியை மேற்கொள்வது என அறங்காவலர் குழு முடிவு செய்து, மாவட்ட நிர்வாகத்திடமிருந்து இதற்கான பணி ஆணை பெற்று, உண்டியல் திறக்கப்பட்டு எண்ணும் பணி தொடங்கியது. சுமார் 30 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாலை உண்டியல் எண்ணும் பணி நிறைவு பெற்றது. உண்டியலில் ரூ.8 லட்சத்து 55 ஆயிரத்து 130 இருந்தது, அத்தொகை உடனடியாக வங்கியில் செலுத்தப்பட்டதாக, கோவில் அறங்காவல் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
- புதிய பா.ஜனதா தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
- பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
புதுச்சேரி:
புதுவை பா.ஜனதா தலை வராக நியமனம் செய்யப்பட்ட செல்வ கணபதி எம்.பி.க்கு சபா நாயகர்- எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
புதுவை பா.ஜனதா மாநிலத் தலைவராக செல்வ கணபதி எம்.பி. அறிவிக்கப் பட்டதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அவருக்கு மாலை, சால்வை அணி வித்து வாழ்த்து தெரிவித்தனர். பா.ஜனதாவிற்க்கு புதிய தலைவராக நியமிக்கப் பட்ட செல்வகணபதி
எம்.பி.க்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம், எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ரிச்சர்ட், ராமலிங்கம், அசோக்பாபு, சிவசங்கர், அங்காளன், பா.ஜனதா மாநில செயலாளர் ஜெயக்குமார் ரெட்டியார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் பிரமுகர்கள் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணி வித்தும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- புதுவை விவசாயிகளுக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வேண்டுகோள்
- விவசாயிகள் கறவை மாடுகளுக்கு அதிகபட்சமாக தொடர்ச்சியாக 2 முறை இந்த சேவையை தங்கள் வீடுகளிலேயே பெறலாம்.
புதுச்சேரி:
புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் ராஷ்டிரிய கோகுல் திட்டத்தின் கீழ் புதுவையில் துரித இன மேம்பாட்டு திட்டத்தின் மூலம் கறவை மாடுகளுக்கு பாலினம் பிரிக்கப்பட்ட செயற்கை முறை கருவூட்டல் புரியும் திட்டம் கடந்த மே மாதம் புதுவை, காரைக்காலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
மத்திய அரசு இத்திட்டத்திற்காக ரூ.7.22 கோடி 5 ஆண்டுக்கு திட்ட மதிப்பீடாக ஒதுக்கியுள்ளது. முதல் தவணையாக ரூ.1 கோடியே 40 லட்சம் பெறப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் கறவை மாடுகளுக்கு அதிகபட்சமாக தொடர்ச்சியாக 2 முறை இந்த சேவையை தங்கள் வீடுகளிலேயே பெறலாம்.
இந்த கருவூட்டல் மூலம் ஆண் கன்றுகள் தவிர்த்து 90 சதவீதம் பெண் கன்றுகள் பெற வாய்ப்புகள் ஏற்படும். இதனால் பால்வளம் பெருகும். ஒரு உறை விந்து குச்சியின் விலை ரூ.675. இதில் மத்திய அரசு மானியம் ரூ.425. மீதமுள்ள தொகை ரூ.250 விவசாயிகள் செலுத்த வேண்டும். கால்நடை வளர்க்கும் விவ சாயிகளின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு விவசாயிகள் செலுத்த வேண்டிய தொகையை அரசே செலுத்தும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்படுத்தி, கவர்னர் ஒப்புதல் பெறப்பட்டு தற்போது புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயிகள் இந்த பாலினம் பிரித்த செயற்கை கருவூட்டல் சேவையை இலவசமாக பெறலாம். கால்நடை விவசாயிகள் இத்திட்டத்தை பயன்படுத்தி பால் உற்பத்தியை பெருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்
- மாதர் சங்கம் தீர்மானம்
- பேரவை கூட்டம் வினோபா நகர் தமிழன்னை நகர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தட்டாஞ்சாவடி தொகுதி பேரவை கூட்டம் வினோபா நகர் தமிழன்னை நகர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சுமதி, பிரேமா ஆகியோர் தலைமை வகித்தனர். ரேவதி, சந்தியா காந்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தியகம்யூனிஸ்டு மாநில துணை செயலாளர் சேதுசெல்வம், அமுதா, தசரதா சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் விதவை, கணவ ரால் கைவிடப்பட்ட வர்களுக்கு உதவித் ெதாகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். ரேஷன்கடைகளை திறந்து மளிகை பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- வரும் பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.
- கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் புறக்கணிக்கப்படுவதில்லை.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ஜனதா தலைவராக சாமிநாதன் கடந்த 2015-ம் ஆண்டு (டிசம்பர்) மாதம் நியமிக்கப்பட்டார்.
பா.ஜனதா தலைவர் பதவி 3 ஆண்டு காலமாகும். 2019 பாராளுமன்ற தேர்தல், கொரோனா பரவல் காரணமாக சாமிநாதன் தொடர்ந்து பதவியில் நீடித்து வந்தார்.
2021-ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலுக்கு பிறகு சாமிநாதன் மாற்றப்படுவார் என்ற பேச்சு எழுந்தது. ஆனாலும், கடந்த 2 ஆண்டு காலமாக சாமிநாதனே பதவியில் நீடித்தார்.
இந்த நிலையில் கடந்த 8 ஆண்டு காலம் பா.ஜனதா தலைவராக இருந்த சாமிநாதன் மாற்றப்பட்டார். புதிய தலைவராக செல்வகணபதி எம்.பி. தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் அருண்சிங் வெளியிட்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், புதுவை மாநில பா.ஜனதா தலைவராக செல்வகணபதி எம்.பி.யை தேசிய தலைவர் நட்டா நியமித்துள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என குறிப்பிட்டுள்ளார். புதிய தலைவராக பொறுப்பேற்ற பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி கூறியதாவது:-
பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் புதுவை நல்ல வளர்ச்சியை நோக்கி செல்கிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். பா.ஜனதா சார்பில் வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம். கூட்டணி கட்சி வேட்பாளரை நிறுத்தினாலும் அவர் வெற்றிக்கு பாடுபடுவோம்.
கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் புறக்கணிக்கப்படுவதில்லை. அவர்களின் ஆலோசனையை பயன்படுத்துவோம். கூட்டணி முடிவுகளை தேசிய தலைவர்கள் எடுப்பார்கள். அவர்களின் முடிவை செயல்படுத்துவது எங்கள் கடமை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செல்வகணபதி எம்.பி. 19.4.1957-ல் பிறந்தவர். எம்.ஏ. எம்.எட். படித்துள்ளார். விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் நிறுவனர். விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் விழா குழு தலைவர் பொறுப்பு வகித்து பல நிகழ்ச்சிகளை நடத்தினார். கலைமாமணி விருது வழங்கும் குழு உறுப்பினர், கைப்பந்து சங்க தலைவர், கம்பன் கழக பொருளாளர், லாஸ்பேட்டை திரவுபதி யம்மன் கோவில் செயலாளர், நரேந்திரா ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் உட்பட பல பொறுப்புகளில் உள்ளார்.
- புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநில தலைவர் செல்வகணபதிக்கு, ஓம்சக்தி சேகர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
- பா.ஜனதாவுடன் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வெற்றி பெறுவதற்கு வழி வகுப்போம் என தெரிவித்தார்.
புதுச்சேரி:
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அ.தி.மு.க வெளியேறியுள்ளது.
இந்த நிலையில் புதுவை முன்னாள் எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர் தலைமையில் ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள், புதிதாக தேர்வு செய்யப்பட்ட பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி.யை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் சந்தித்தனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநில தலைவர் செல்வகணபதிக்கு, ஓம்சக்தி சேகர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-
ஓ.பி.எஸ். தலைமையி லான அணியே உண்மை யான அ.தி.மு.க. பா.ஜனதா- அ.தி.மு.க கூட்டணி இன்று வரை நல்ல முறையில் தொடர்ந்து வருகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வெற்றி பெறுவதற்கு வழி வகுப்போம் என தெரிவித்தார்.
- வில்லியனூர், மண்ணாடிப் பட்டு பாகூர் உள்ளிட்ட கிராம பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.
- வேலைக்கு செல்வோர் என அனைவரும் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
புதுச்சேரி:
தமிழக வடக்கு கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் கன மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.
புதுவையில் கடந்த 12-ந் தேதி இரவு 3 மணி நேரம் கனமழை பெய்தது.
அதன் பிறகு மழையில்லை. கடும் வெயில் காரணமாக காலை முதல் மாலை வரை வெப்பம் மக்களை வாட்டி வதைத்தது.
புதுவையை சுற்றியுள்ள கடலூர், விழுப்புரம், திண்டிவனம் ஆகிய பகுதி களில் மழை பெய்தாலும் புதுவையில் மழை இல்லை.
இந்நிலையில் முதல் லேசான தூறல் இருந்தது. காலை 6 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு பலத்த இடியுடன் மழை பெய்தது.
புதுவை நகர பகுதிகளான ராஜ்பவன், முத்தியால் பேட்டை, நெல்லித்தோப்பு, காலாப்பட்டு, லாஸ்பேட்டை பகுதிகளிலும் திருபுவனை, வில்லியனூர், மண்ணாடிப் பட்டு பாகூர் உள்ளிட்ட கிராம பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.
இந்த மழையினால் வானிலை மாறியது. நகர பகுதி குளிர்ச்சியான சூழ்நிலைக்கு மாறியுள்ளது. கிராம புறங்களில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலைக்காக மேம்பாலம் கட்டும் பணி அரியூர் பகுதியில் நடை பெற்று வருகிறது.
மழைநீர் வடிகால் வசதி சரியான முறையில் செயல்படுத்தாத காரணத்தால் காலை முதல் கன மழை பெய்ததால் அப்பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் போக்கு வரத்து பாதிக்கப் பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் என அனைவரும் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
- அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
- தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைய தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஐ.ஐ.டி. குழுவினர் பார்வையிட்டனர்.
புதுச்சேரி:
சென்னை ஐ.ஐ.டி. முதன்மை அதிகாரி சங்கர்ராமன், புதிய ஆய்வு பிரிவு தலைவர் ராஜேந்திரமேத்தா, கட்டிடக்கலை பிரிவு முதன்மை அதிகாரி ராபின்சன், பேராசிரியர் ரமேஷ்சிங், ஆலோசகர் சரவணசுந்தரம் அடங்கிய குழுவினர் கடந்த 23-ந் தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமியை
சந்தித்தனர். அப்போது சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி மையத்தை புதுவையில் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. சேதராப்பட்டில் இதற்காக மையம் அமைத்தால் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சேதராப்பட்டில் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைய தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஐ.ஐ.டி. குழுவினர் பார்வையிட்டனர். பின்னர், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனுடன் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறுகையில், புதுவையில் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைக்க ஆலோசனை நடத்தினர்.
அதன்படி முதல்-அமைச்சர் ரங்கசாமி ஓரிருநாளில் சென்னைக்கு சென்று ஐ.ஐ.டி. ஆராய்ச்சி மையத்தை பார்வையிட உள்ளார். புதுவையில் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டால் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார்.
- தொழிலை கவனிக்காமல் அடிக்கடி மது குடித்து வந்ததால் அவரது மனைவி ஆனந்தியே இந்த தொழிலை நடத்தி வந்தார்.
- குடிபோதையில் வாய்க்காலில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
புதுச்சேரி:
வில்லியனூர் வி.சி.பி. குடியிருப்பை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி ஆனந்தி. இவர்கள் 3 மகள் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. 3-வது மகள் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
ஏழுமலை விழுப்புரம்- வில்லியனூர் பைபாஸ் ரோட்டில் ஜல்லி, மணல் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.
இதற்கிடையே ஏழுமலைக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவர் தொழிலை கவனிக்காமல் அடிக்கடி மது குடித்து வந்ததால் அவரது மனைவி ஆனந்தியே இந்த தொழிலை நடத்தி வந்தார்.
ஏழுமலை வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் சந்தேகமடைந்த ஆனந்தி நள்ளிரவில் கணவரை தேடி சென்றார். அப்போது வீட்டின் அருகே உள்ள பெரிய வாய்க்காலில் ஏழுமலை தலைகுப்புற தண்ணீரில் விழுந்து கிடப்பதை கண்டு ஆனந்தி அதிர்ச்சியடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரைமீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஏழுமலை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மதுகுடித்து விட்டு ஏழுமலை வீடு திரும்பிய போது குடிபோதையில் வாய்க்காலில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது மனைவி ஆனந்தி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புதிதாக சேர்ந்த மாணவ -மாணவிகளுக்கான வரவேற்பு விழா கல்லூரி கலையரங்கில் நடை பெற்றது.
- மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர். முத்தமிழ்செல்வி வரவேற்புரை வழங்கினார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரியின் எம்.எஸ்.சி., செவிலிய படிப்பிற்கான முதலா மாண்டு வகுப்புகள் தொடக்கவிழா மற்றும் புதிதாக சேர்ந்த மாணவ -மாணவிகளுக்கான வரவேற்பு விழா கல்லூரி கலையரங்கில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் கல்வி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் விழாவை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தனர்.
பொருளாளர் டாக்டர் ராஜராஜன், மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ராஜகோவிந்தன், துணை இயக்குனர் டாக்டர். காக்னே, மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை டீன் அகடாமிக் டாக்டர். கார்த்திகேயன், டீன் கலைச்செல்வன் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். பிரகாஷ், பதிவாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர். முத்தமிழ்செல்வி வரவேற்புரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், செவிலியர் கல்லூரியின் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள், மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் துணை பேராசிரியர் நித்யா நன்றி கூறினார்.
- பரமேஸ்வரி தட்டிக் கேட்ட போது நாகராஜன் தகாத வார்த்தைகளால் திட்டி பரமேஸ்வரியை தாக்கினார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை உருளையன் பேட்டை அருந்ததி நகரை சேர்ந்தவர் நாகலிங்கம் (வயது38). இவரது மனைவி பரமேஸ்வரி. நாகலிங்கத் துக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்து வந்தது.
இதனை பரமேஸ்வரி தட்டிக் கேட்கும் போதெல்லாம் அவரை நாகராஜன் குடித்து விட்டு அடித்து துன்புறுத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குயவர் பாளையம் அய்யனார் கோவில் வீதியில் நாகராஜன் ஒரு பெண் வீட்டில் இருப்பதாக பரமேஸ்வரிக்கு தகவல் வந்தது.
இதையடுத்து பரமேஸ்வரி தனது சகோதரர் முருகனை அழைத்து கொண்டு சம்பவ இடத்துக்கு சென்றார். அப்போது அந்த வீட்டில் இருந்து நாகராஜன் ஒரு பெண்ணுடன் வெளியே வந்தார். இதனை பரமேஸ்வரி தட்டிக் கேட்ட போது நாகராஜன் தகாத வார்த்தைகளால் திட்டி பரமேஸ்வரியை தாக்கினார்.
இதனை தடுக்க முயன்ற பரமேஸ்வரியின் சகோதரர் முருகனையும் சிமெண்டு ஓட்டால் தாக்கி இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இந்த தாக்குதலில் காயமடைந்த பரமேஸ்வரி மற்றும் அவரது சகோதரர் முருகன் ஆகிய இருவரும் புதுவை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்றனர். பின்னர் இதுகுறித்து பரமேஸ்வரி உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தேசிய ஊட்டச்சத்து மாத விழா பாகூர் மாரியம்மன் கோவிலில் நடந்தது.
- சிறுதானிய உணவுகள் மற்றும் காய்கறி பயிறு வகைகளும் முன்னதாக காட்சிப்படுத்தப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அரியாங்குப்பம் திட்டம் 3 சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா பாகூர் மாரியம்மன் கோவிலில் நடந்தது.
விழாவில் பாகூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் தமிழரசன், சுகாதார பணி செவிலியர் பாக்கியலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு ஊட்டச்சத்து பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் தாய்மார்கள் கேட்ட கேள்விகளுக்கும் விளக்கம் அளித்தனர். பின்னர் டாக்டர் கேட்ட ஊட்டச்சத்து குறித்த கேள்விக்கு சரியான பதில் அளித்தவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை அங்கன்வாடி ஊழியர் தமிழரசி மற்றும் உதவியாளர் பாரதி ஆகியோர் ஏற்பாடு செய்தனர். மேலும் சிறுதானிய உணவுகள் மற்றும் காய்கறி பயிறு வகைகளும் முன்னதாக காட்சிப்படுத்தப்பட்டது.






