என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பா.ஜனதாவுக்கு ஓ.பி.எஸ். அணி ஆதரவு
    X

    புதிதாக நியமிக்கப்பட்ட பா.ஜனதா தலைவர் செல்வகணபதி எம்.பி.க்கு ஓம்சக்தி சேகர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த காட்சி.

    பா.ஜனதாவுக்கு ஓ.பி.எஸ். அணி ஆதரவு

    • புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநில தலைவர் செல்வகணபதிக்கு, ஓம்சக்தி சேகர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
    • பா.ஜனதாவுடன் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வெற்றி பெறுவதற்கு வழி வகுப்போம் என தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அ.தி.மு.க வெளியேறியுள்ளது.

    இந்த நிலையில் புதுவை முன்னாள் எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர் தலைமையில் ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள், புதிதாக தேர்வு செய்யப்பட்ட பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி.யை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் சந்தித்தனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநில தலைவர் செல்வகணபதிக்கு, ஓம்சக்தி சேகர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-

    ஓ.பி.எஸ். தலைமையி லான அணியே உண்மை யான அ.தி.மு.க. பா.ஜனதா- அ.தி.மு.க கூட்டணி இன்று வரை நல்ல முறையில் தொடர்ந்து வருகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வெற்றி பெறுவதற்கு வழி வகுப்போம் என தெரிவித்தார்.

    Next Story
    ×