என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு
    X

    தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு நடைபெற்ற காட்சி.

    தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு

    • தேசிய ஊட்டச்சத்து மாத விழா பாகூர் மாரியம்மன் கோவிலில் நடந்தது.
    • சிறுதானிய உணவுகள் மற்றும் காய்கறி பயிறு வகைகளும் முன்னதாக காட்சிப்படுத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அரியாங்குப்பம் திட்டம் 3 சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா பாகூர் மாரியம்மன் கோவிலில் நடந்தது.

    விழாவில் பாகூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் தமிழரசன், சுகாதார பணி செவிலியர் பாக்கியலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு ஊட்டச்சத்து பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் தாய்மார்கள் கேட்ட கேள்விகளுக்கும் விளக்கம் அளித்தனர். பின்னர் டாக்டர் கேட்ட ஊட்டச்சத்து குறித்த கேள்விக்கு சரியான பதில் அளித்தவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியை அங்கன்வாடி ஊழியர் தமிழரசி மற்றும் உதவியாளர் பாரதி ஆகியோர் ஏற்பாடு செய்தனர். மேலும் சிறுதானிய உணவுகள் மற்றும் காய்கறி பயிறு வகைகளும் முன்னதாக காட்சிப்படுத்தப்பட்டது.

    Next Story
    ×