என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dheeni Jayakumar"

    • புதுவை விவசாயிகளுக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வேண்டுகோள்
    • விவசாயிகள் கறவை மாடுகளுக்கு அதிகபட்சமாக தொடர்ச்சியாக 2 முறை இந்த சேவையை தங்கள் வீடுகளிலேயே பெறலாம்.

    புதுச்சேரி:

    புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் ராஷ்டிரிய கோகுல் திட்டத்தின் கீழ் புதுவையில் துரித இன மேம்பாட்டு திட்டத்தின் மூலம் கறவை மாடுகளுக்கு பாலினம் பிரிக்கப்பட்ட செயற்கை முறை கருவூட்டல் புரியும் திட்டம் கடந்த மே மாதம் புதுவை, காரைக்காலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    மத்திய அரசு இத்திட்டத்திற்காக ரூ.7.22 கோடி 5 ஆண்டுக்கு திட்ட மதிப்பீடாக ஒதுக்கியுள்ளது. முதல் தவணையாக ரூ.1 கோடியே 40 லட்சம் பெறப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் கறவை மாடுகளுக்கு அதிகபட்சமாக தொடர்ச்சியாக 2 முறை இந்த சேவையை தங்கள் வீடுகளிலேயே பெறலாம்.

    இந்த கருவூட்டல் மூலம் ஆண் கன்றுகள் தவிர்த்து 90 சதவீதம் பெண் கன்றுகள் பெற வாய்ப்புகள் ஏற்படும். இதனால் பால்வளம் பெருகும். ஒரு உறை விந்து குச்சியின் விலை ரூ.675. இதில் மத்திய அரசு மானியம் ரூ.425. மீதமுள்ள தொகை ரூ.250 விவசாயிகள் செலுத்த வேண்டும். கால்நடை வளர்க்கும் விவ சாயிகளின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு விவசாயிகள் செலுத்த வேண்டிய தொகையை அரசே செலுத்தும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

    இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்படுத்தி, கவர்னர் ஒப்புதல் பெறப்பட்டு தற்போது புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயிகள் இந்த பாலினம் பிரித்த செயற்கை கருவூட்டல் சேவையை இலவசமாக பெறலாம். கால்நடை விவசாயிகள் இத்திட்டத்தை பயன்படுத்தி பால் உற்பத்தியை பெருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்

    ×