என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் பரவலாக மழை
    X

    அரியூர் பகுதியில் 4 வழிசாலை பணியால் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ள காட்சி.

    புதுவையில் பரவலாக மழை

    • வில்லியனூர், மண்ணாடிப் பட்டு பாகூர் உள்ளிட்ட கிராம பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.
    • வேலைக்கு செல்வோர் என அனைவரும் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    புதுச்சேரி:

    தமிழக வடக்கு கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் கன மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.

    புதுவையில் கடந்த 12-ந் தேதி இரவு 3 மணி நேரம் கனமழை பெய்தது.

    அதன் பிறகு மழையில்லை. கடும் வெயில் காரணமாக காலை முதல் மாலை வரை வெப்பம் மக்களை வாட்டி வதைத்தது.

    புதுவையை சுற்றியுள்ள கடலூர், விழுப்புரம், திண்டிவனம் ஆகிய பகுதி களில் மழை பெய்தாலும் புதுவையில் மழை இல்லை.

    இந்நிலையில் முதல் லேசான தூறல் இருந்தது. காலை 6 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு பலத்த இடியுடன் மழை பெய்தது.

    புதுவை நகர பகுதிகளான ராஜ்பவன், முத்தியால் பேட்டை, நெல்லித்தோப்பு, காலாப்பட்டு, லாஸ்பேட்டை பகுதிகளிலும் திருபுவனை, வில்லியனூர், மண்ணாடிப் பட்டு பாகூர் உள்ளிட்ட கிராம பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.

    இந்த மழையினால் வானிலை மாறியது. நகர பகுதி குளிர்ச்சியான சூழ்நிலைக்கு மாறியுள்ளது. கிராம புறங்களில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலைக்காக மேம்பாலம் கட்டும் பணி அரியூர் பகுதியில் நடை பெற்று வருகிறது.

    மழைநீர் வடிகால் வசதி சரியான முறையில் செயல்படுத்தாத காரணத்தால் காலை முதல் கன மழை பெய்ததால் அப்பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் போக்கு வரத்து பாதிக்கப் பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் என அனைவரும் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    Next Story
    ×