search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆழ்துளை கிணறு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
    X

    பனையடிக்குப்பம் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்த காட்சி.

    ஆழ்துளை கிணறு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

    • பணியை தடுத்து நிறுத்தினர்
    • , புதுவைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக போர்வெல் அமைக்கப் படுவதாக கருதி எதிர்ப்பு தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே ஆழ்துளை கிணறு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்திய தால் பரபரப்பு ஏற்பட்டது

    நெட்டப்பாக்கம் அருகே பனையடிக்குப்பம் கிராமத்தில் அரசு பள்ளி அருகே ரூ. 19 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்க புதுவை அரசு பொதுப்பணித்துறை மூலம் முடிவு செய்யப்பட்டது.

    இன்று காலை அதற்காக பூமி பூஜை விழா நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்தது. பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பீனாராணி, இளநிலை பொறியாளர் ஜீவானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைக்க வந்தனர்.

    இந்த நிலையில் பனை யடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்கள் ஊரில் ஏற்கனவே போர்வெல் இருப்பதாகவும், தற்பொழுது கூடுதல் போர்வேல் வேண்டாம் என்றும், புதுவைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக போர்வெல் அமைக்கப் படுவதாக கருதி எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் பூமி பூஜையை பணி தடுத்து நிறுத்தினர். இதனால் பொது மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    கரையாம்புத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீ சார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    பின்னர் பொதுமக்கள் அனைவரும் போர்வெல் வேண்டாம் என்று எழுத்து பூர்வமாக அதிகாரியிடம் எழுதிக் கொடுத்ததின் பேரில் அதிகாரிகள் கலைந்து சென்றனர். இதனால் பனையடிக்குப்பம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×