என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் முன்கூட்டியே  களத்தில் குதித்த பா.ஜனதா
    X

    கூட்டத்தில் தேசிய செயலாளர் சத்திய குமார் பேசிய காட்சி.அருகில் மாநில தலைவர் சாமிநாதன் உள்பட பலர் உள்ளனர்.

    புதுவையில் முன்கூட்டியே களத்தில் குதித்த பா.ஜனதா

    • சட்டசபை தொகுதி வாரியாக ஆலோசனை
    • அப்பகுதியில் உள்ள நண்பர்கள் உறவினர்களுக்கு பிரதமர் திட்டத்தினால் பலன் அடைய உதவி செய்ய கேட்டுக் கொள்ள வேண்டும்.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் புதுச்சேரியில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசார பணியிலும் வேட்பாளர் தேர்விலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதுச்சேரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. பா.ஜனதாவினர் சட்டசபை தொகுதி வாரியாக நிாவாகிகளை சந்திந்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பான நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி உழவர்கரை தொகுதியில் மாவட்டத் தலைவர் நாகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய செயலாளர் சத்திய குமார் புதுச்சேரி மாநில தலைவர் சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தேசிய செயலாளர் சத்யகுமார் பேசுகையில் உழவர்கரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளையும் வலிமை படுத்த வேண்டும். அனைத்து கிளைகளில் உள்ள மக்களை நேரடியாக சந்தித்து பிரதமரின் திட்டங்களை தெரிவிக்க வேண்டும். பிரதமர் திட்டத்தினால் பலன் அடைந்தவர்களை சந்தித்து அவர்களை அப்பகுதியில் உள்ள நண்பர்கள் உறவினர்களுக்கு பிரதமர் திட்டத்தினால் பலன் அடைய உதவி செய்ய கேட்டுக் கொள்ள வேண்டும்.

    நிர்வாகிகள் அனைவரும் அவரவர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான அரசு சார்ந்த உதவிகளை செய்ய முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் பாராளுமன்ற தேர்தல் பிரவாஸ் மாநில அமைப்பாளர் பாஜக மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் பாராளுமன்ற தேர்தல் பிரவாஸ் மாநில இணை அமைப்பாளர்கள் பட்டியலினி மாநில தலைவர் தமிழ்மாறன் மகளிர் அணி மாநில தலைவி ஜெயலட்சுமி மற்றும் மாநில செயலாளர்கள் அகிலன், லதா உள்பட நூற்றிற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×