என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • சீட்டு கட்டியவர்கள் இவரது வீட்டுக்கு சென்று பணம் கேட்டு வந்துள்ளனர்.
    • நான் வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகி விட்டார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் தருமபுரம் மடவிளாகம் பகுதியைச்சேர்ந்த வர் முத்துசாமி (வயது60). அரிசி கடை நடத்தி வந்தார். இந்நிலை யில், முத்துசாமி சீட்டு நடத்தி வந்தார். அதில் பலர் பணம் கட்டாமல் இவரை ஏமாற்றிவிட்டதாக கூறப்படு கிறது. இதனால் மற்ற சிலருக்கு பணம் தரமுடியாமல் முத்துசாமி அவதியுற்று வந்துள்ளார். சீட்டு கட்டியவர்கள் இவரது வீட்டுக்கு சென்று பணம் கேட்டு வந்துள்ளனர். இதனால் விரக்தியில் இருந்து வந்த முத்துசாமி, கடந்த 20-ந் தேதி, தான் சீட்டு நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. பலர் தனக்கு தரவேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றிவிட்டனர்.

    நானும் பலருக்கு பணம் தரமுடியாமல் மிகுந்த மனவேதனையில் உள்ளேன். பலர் என்னை நேரிலும், போனிலும் பணம் கேட்டு தொந்தரவு செய்வதால், நான் வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகிவிட்டார். இது குறித்து முத்துசாமிய்ன் அண்ணன் தட்சிணாமூர்த்தி, காரைக்கால் நகர போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான முத்துசாமியை தேடிவருன்றனர். அதேபோல், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் வேலை செய்யும், காரைக்கால் கோட்டுச்சேரியைச் சேர்ந்த ராஜவேல் (56) என்பவர், கடந்த 19-ந் தேதி காலை ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறி சென்றவர் இதுநாள்வரை வீடு திரும்பவில்லையென கூறப்படுகிறது. இது குறித்து அவரது மகள் நந்தினி காரைக்கால் நகர போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.

    • சரவணன் குடிபோதையில் அவரது தந்தையை தாக்கி வந்ததால் ராமலிங்கம் மகனுக்கு பயந்து வீட்டுக்கு சரியாக வருவதில்லை.
    • மின் விசிறியில் சரவணன் சேலையால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை சீனிவாசா நகரை சேர்ந்தவர் ராம லிங்கம். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்களும் சரவணன் (35) என்ற மகனும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. ராமலிங்கமும் அவரது மகன் சரவணனும் வேலைக்கு எதுவும் செல்லாமல் மது குடித்து வந்ததால் ஜெயலட்சுமி அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்த்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே ராமலிங்க மும் அவரது மகனும் அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம். மேலும் சரவணன் குடிபோதையில் அவரது தந்தையை தாக்கி வந்ததால் ராமலிங்கம் மகனுக்கு பயந்து வீட்டுக்கு சரியாக வருவதில்லை.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு சரவணன் மது குடித்து விட்டு வீட்டில் அவரது தாயாரிடம் தகராறு செய்தார். அப்போது ஜெயலட்சுமி காலையில் திருமணத்துக்கு செல்ல உள்ளதால் தூங்குமாறு சரவணனை அறிவுறுத்தினார்.

    அதற்கு சரவணன் நீ எப்படி திருமணத்துக்கு செல்வாய் என பார்த்துக்கொள்கிறேன் என கூறி ஜெயலட்சுமியை படுக்கை அறைக்கு உள்ளே தள்ளி வெளிபுறமாக பூட்டி விட்டார்.

    காலையில் வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாத தால் ஜெயலட்சுமி ஜன்னல் வழியாக பக்கத்து வீட்டினரை அழைத்தார்.

    அப்போது அவர்கள் வீட்டின் முன் பக்க கதவை திறந்து உள்ளே வந்த போது வீட்டின் வரண்டாவில் உள்ள மின் விசிறியில் சரவணன் சேலையால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பா.ஜனதா நிர்வாகிகளிடம் மாநில பொறுப்பாளர் அறிவுறுத்தல்
    • அக்கார்டு ஓட்டலில் புதுவை மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா தலைவராக செல்வகணபதி எம்.பி. நியமிக்கப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து புதுவை மாநில பா.ஜனதா வுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக அக்கார்டு ஓட்டலில் புதுவை மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    மாநில தலைவர் செல்வகணபதி எம்பி, முன்னாள் தலைவர் சாமிநாதன், அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் வி.பி. ராமலிங்கம், அசோக்பாபு, கல்யாணசுந்தரம், சிவசங்கரன், வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தீப்பாய்ந்தான், அருள்முருகன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் அனைத்து தொகுதிகளிலும் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். பழைய நிர்வாகி களுடன், நியமிக்கப்படும் புதிய நிர்வாகிகள் இணைந்து கட்சி பணியாற்ற வேண்டும் என நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார்.

    • கென்னடி எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்
    • அரவிந்தர் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரி சோதனை முகாம் நடந்தது.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி உட்பட்ட திப்புராய பேடையில் லசார் ஆலயம் அருகில் குளூனி கன்னியர் வளாகம் மற்றும் அரவிந்தர் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரி சோதனை முகாம் நடந்தது.

    முகாமை உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்தனர். நிகழ்ச்சியில் குளூனி கன்னியர் வளாக தலைவர் ரிஹென பேகம், செயலாளர் மர்கரெட் நிகோலஸ், பொருளாளர் ஸ்வர்ணலதா, சித்ரலேகா, தி.மு.க. நிர்வாகிகள் சக்திவேல், ராஜி, விநாயகமூர்த்தி, நோயல், செல்வம், முரளி, காளப்பன், மோரிஸ், ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் கண்டனம்
    • சமீபத்தில் நிலக்கரி இறக்குமதியில் செய்த ஊழலால் ரூ.12 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    மின் கட்டண உயர்வு மூலம் ஏழை, நடுத்தர மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் செயலில் புதுவை மின்துறை இறங்கியுள்ளது.

    அதானி சமீபத்தில் நிலக்கரி இறக்குமதியில் செய்த ஊழலால் ரூ.12 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    அதிக விலை கொடுத்து நிலக்கரியை அதானியிடம் இருந்து வாங்க வேண்டிய கட்டாயம் இருந்ததால் புதுவை மின்துறைக்கும் இழப்பு ஏற்பட்டது. இந்த இழப்பை சரிக்கட்ட புதுவை மக்களின் மின் கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கின்றனர்.

    இந்த ஊழல் பண இழப்பை புதுவை மக்களிடம் வசூலிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சியாளர்கள் இதை பற்றி கவலைப்படாமல் மதுக்கடைகளை திறப்பதிலேயே குறியாக உள்ளனர்.

    இந்த மின்கட்டண வசூலை உடனே நிறுத்த வேண்டும். மின்கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பது மக்களுக்கு இழைக்கும் துரோகம். இதை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • உலக தரநிர்ணய நாள் சிறப்பு கருத்தரங்கம் கல்லூரி கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது.
    • டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி(எம்.ஐ.டி.) இயந்திரவியல் துறை மற்றும் இந்திய பொறியாளர் அமைப்பு சார்பில் "உலக தரநிர்ணய நாள் சிறப்பு கருத்தரங்கம் கல்லூரி கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது.

    மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கல்லூரி முதல்வர் மலர்கண் வாழ்த்துரை வழங்கினார். இந்திய பொறியாளர் அமைப்பின் புதுவை மாநில தலைவர் மற்றும் இயந்திரவியல் துறைத் தலைவர் ராஜாராம் வரவேற்புரை நிகழ்த்தினார். புதுவை டி.வி.எஸ் சுந்தரம் பாஸ்டநர்ஸ் தரக்கட்டுப்பட்டு துறை பொறியாளர் சாயேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    கருத்தரங்கில் இயந்திரவியல் துறை மாணவர்கள் திரளாக பங்கேற்றனர். இயந்திரவியல் துறை உதவி பேராசிரியர் கணேஷ் குமார் நன்றி கூறினார்.

    கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி, இயந்திரவியல் துறை பேராசிரியர் மதியரசு மற்றும் உதவி பேராசிரி யர்கள் செய்திருந்தனர்.

    • மிதுன்குமாரை அவரது தாயார் பலமுறை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார்.
    • மிதுன்குமார் போனை எடுத்து பேசாததால் சந்தேகமடைந்து பக்கத்து வீட்டிற்கு போன் செய்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி, கொசப்பாளையம் திருமால் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் ரங்கசாமி (வயது53). பைனான்சியர். இவரது சொந்த ஊர் திருப்பூர் ஆகும்.

    இவரது மகன் மிதுன்குமார் (17). இவர் புதுவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரங்கசாமியின் தாயார், திருப்பூரில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் அவரை பார்க்க ரங்கசாமி தனது மனைவியுடன் திருப்பூர் சென்றார்.

    மிதுன்குமார் மட்டும் வீட்டில் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனிடையே மிதுன்குமாரை அவரது தாயார் பலமுறை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் மிதுன்குமார் போனை எடுத்து பேசாததால் சந்தேகமடைந்து பக்கத்து வீட்டிற்கு போன் செய்தார்.

    அவர்கள் வந்து பார்த்த போது உள்ளே மின்விசிறியில் மிதுன்குமார் தூக்குப்போட்டு தொங்குவதை கண்டு திடுக்கிட்டனர். உடனே இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மிதுன்குமார் தூக்கில் பிணமாக தொங்குவது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மிதுன்குமார் தன்னுடன் படிக்கும் சக மாணவி ஒருவரை காதலித்து வந்ததும் சில நாட்களாக அந்த மாணவி மிதுன்குமாரிடம் பேசாமல் இருந்ததும் இதனால் மனஉளைச்சல் அடைந்த மிதுன்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

    • ராஜ்யசபா எம்.பி. தேர்தலுக்கு பிறகு வாரிய தலைவர் பதவி வழங்கப்படும் என பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சி மேலிடம் உறுதியளித்திருந்தது.
    • புதுவை மாநில பா.ஜனதா பொறுப்பாளரும், மேலிட பார்வையாளருமான நிர்மல்குமார் சுரானா புதுவைக்கு வந்திருந்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.

    முதலமைச்சர் ரங்கசாமியோடு என்ஆர்.காங்கிரசுக்கு 4 அமைச்சர்கள், துணை சபாநாயகர், பா.ஜனதாவுக்கு சபாநாயகர், 2 அமைச்சர்கள் உள்ளனர்.

    அரசு பதவியில் இல்லாத என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு வாரிய தலைவர் பதவி வேண்டும் எனக் கேட்டு ஆட்சி அமைந்தது முதல் கடந்த 2 ½ ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

    ராஜ்யசபா எம்.பி. தேர்தலுக்கு பிறகு வாரிய தலைவர் பதவி வழங்கப்படும் என பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சி மேலிடம் உறுதியளித்திருந்தது. ஆனால் இதுவரை வாரிய பதவி வழங்கப்படவில்லை.

    இதனால் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். அதோடு தங்கள் தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டி வருகின்றனர். பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும் 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் தங்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்க வேண்டும் என பா.ஜனதா மேலிடத்திடம் கேட்டு வருகின்றனர்.

    பா.ஜனதா ஆதரவு எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி சீனிவாச அசோக், தன்னைவிட தனது தொகுதியை சேர்ந்த முன்னாள் அமைச்சருக்கு அரசு முக்கியத்துவம் அளிப்பதாக புகார் செய்தார். தனது தொகுதி பணிகளை நிறைவேற்றாததை கண்டித்து சட்டசபை படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டமும் நடத்தினார்.

    முதலமைச்சர் ரங்கசாமியுடன் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு அவ்வப்போது மோதல் ஏற்படுவதும், பின்னர் அடங்குவதுமாக இருந்து வந்தது.

    இந்த நிலையில் புதுவை மாநில பா.ஜனதா பொறுப்பாளரும், மேலிட பார்வையாளருமான நிர்மல்குமார் சுரானா புதுவைக்கு வந்திருந்தார்.

    நேற்று மாலை புதுவையில் உள்ள தனியார் ஓட்டலில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்களின் அதிருப்தியை மேலிட பொறுப்பாளரிடம் மனக்குமுறலாக வெளிப்படுத்தினர்.

    வாரிய பதவி இல்லாமல் மக்களை எப்படி சந்திப்பது? வாரிய பதவி இருந்தால் தொகுதியை சேர்ந்த கட்சியினருக்கும், தேர்தல் பணியாற்றியவர்களுக்கும் சலுகைகள் அளிக்க முடியும். இப்போது ஒன்றுமே செய்ய முடியவில்லை.

    பா.ஜனதா அமைச்சர்கள் வகிக்கும் துறைகளில் வாரியங்கள் உள்ளது. அந்த வாரிய பதவியை அளிப்பதில் என்ன பிரச்சினை? பா.ஜனதா அமைச்சர்களே வாரியம் தராவிட்டால் வேறு யார் தருவார்கள்? பாராளுமன்ற தேர்தலில் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் வாக்குகள் பிரதான அங்கமாக இருக்கும். அப்படியிருக்க கட்சியில் உள்ள அந்த சமூக எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய பதவி வழங்கினால்தான் அப்பிரிவு மக்கள் ஓட்டுக்களை நாம் பெற முடியும்.

    நாங்கள் கேட்கும் போதெல்லாம் முதலமைச்சர் தரவில்லை என தொடர்ந்து கூறி வருகிறீர்கள். அப்படியானால் அமைச்சரவையிலிருந்து விலகி வெளியிலிருந்து ஆதரவு தரலாம். அப்போதுதான் எம்.எல்.ஏ.க்களின் வலியும், சூழ்நிலையும் புரியும் என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

    கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜனதா ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கைக்கு அரசு முக்கியத்துவம் அளித்து நிறைவேற்றுகிறது. அவர்களுக்கு கார் வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால் நாங்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு தருவதால் எங்களுக்கு எந்த சலுகையும் தர மறுக்கின்றனர்.

    தொகுதியில் உள்ள கோவில் கமிட்டிக்கு கூட நிர்வாகிகளை நியமிக்க போராட வேண்டியுள்ளது. இதேநிலை தொடர்ந்தால் தொகுதியில் செல்வாக்கை இழக்க நேரிடும் என தெரிவித்தனர்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் தற்போது நெருக்கடி அளித்தால் வாரிய பதவி கிடைக்கும் என பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கருதுகின்றனர். இதனால பா.ஜனதா மேலிடம் எம்எல்ஏ.க்களுக்கு வாரிய பதவி வழங்க முதலமைச்சர் ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • திருநள்ளாறில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 செல்போன், ரூ.250 பணத்தை பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பேட்டை அரக்குக்கடை அருகில், மர்ம நபர் ஒருவர் புதுச்சேரி அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக, திருநள்ளாறு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற, பேட்டை மெயின்சாலையைச்சேர்ந்த ராஜசேகரன் (வயது 42) என்பவரை பிடித்து சோத னைச் செய்தனர். அப்போது, சிலருக்கு செல்போன் மூலம் 3 எண் லாட்டரி விற்றது தெரிய வந்தது. விசாரணையில், அதனை அவர் ஒப்புகொண்டதால், போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 செல்போன், ரூ.250 பணத்தை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல், திருநள்ளாறு சுரக்குடி சந்திப்பில், மர்ம நபர் ஒருவர் புதுச்சேரி அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக, திருநள்ளாறு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற, சுரக்குடி சித்ரா காலனியைச்சேர்ந்த குமார் (48) என்பவரை பிடித்து சோதனை செய்தபோது, சிலருக்கு செல்போன் மூலம் லாட்டரி விற்றது தெரிய வந்தது. விசாரணை யில், அதனை அவர் ஒப்புகொ ண்டதால், போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 செல்போன், ரூ.250 பணத்தை பறிமுதல் செய்தனர்.

    • ஆட்டோவில் மோதுவது போலவும் சென்று சாலையில் உள்ள பேரிக்காட்டில் மோதி நின்றது.
    • தமிழக அரசு போக்குவரத்து கழக டெப்போவிற்கு அனுப்பி வைத்து ஆஜராக அறிவுறுத்தினர்.

    புதுச்சேரி:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து, காரைக்கால் வழியாக சென்னை செல்லும் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ், காரைக்கால் எல்லைக்கு வந்த பொழுது, சாலையில் அங்குமிங்கும் அலைந்த வாரும், ஆட்டோவில் மோதுவது போலவும் சென்று சாலையில் உள்ள பேரிக்காட்டில் மோதி நின்றது. தொடர்ந்து காரைக்கால் புதிய பஸ் நிலையம் வந்ததும் பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரும் அலறி அடித்து கீழே இறங்கி ஓடினர்.

    ஒரு சில பயணிகள் காரைக்கால் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சேர்ந்த செல்வராஜ் சில மாதங்களில் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் அவரை 300கி.மீ தூரம் பயணம் செல்லும் பஸ் டிரைவராக நாகை டெப்போ அதிகாரிகள் அனுப்பி வைத்தனர் என்பதும் அவரை காரைக்கால் நகர போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் மேற்கொண்ட சோதனையில் அவர் மது போதையில் இருந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வேறு பஸ்சில் பயணிகளை அனுப்பி வைத்து டிரைவர் செல்வராஜை காரைக்காலில் உள்ள தமிழக அரசு போக்குவரத்து கழக டெப்போவிற்கு அனுப்பி வைத்து ஆஜராக அறிவுறுத்தினர்.

    • காரைக்கால் நகர் பகுதியான திருநள்ளாறு சாலை, நகராட்சி வாரச்சந்தை அருகே, பஸ் அதிவேகமாக வந்தது.
    • இதில், மாற்றுத்திறனாளி, அருகில் இருந்த வாய்க்காலில் விழுந்து காயம் அடைந்தார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் பகுதியில் இருந்து, காரைக்கால் பஸ் நிலையம் நோக்கி, 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு, தனியார் பஸ் ஒன்று, அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. காரைக்கால் நகர் பகுதியான திருநள்ளாறு சாலை, நகராட்சி வாரச்சந்தை அருகே, பஸ் அதிவேகமாக வந்தது. அப்போது, பஸ்சின் முன்புறம் ஸ்டேரிங் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் அங்கும்மிங்கும் அலைந்து, சாலையில் சென்ற காரைக்கால் பச்சூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவரது 3 சக்கர வாகனத்தில் மோதி, தொடர்ந்து, சாலையோரம் உள்ள மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில், மாற்றுத்திறனாளி, அருகில் இருந்த வாய்க்காலில் விழுந்து காயம் அடைந்தார். அதேபோல், பஸ்சில் இருந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக சேர்த்தனர். தொடர்ந்து, இது குறித்து, காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் பஸ் டிரைவர் காரைக்காலை அடுத்த அண்டூர் கிராமத்தை சேர்ந்த விஜய் (வயது 26) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீக்கல் மற்றும் திருத்தம் செய்யும் பணி இன்று முதல் டிசம்பர் 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    • 127 மாற்றுப் பாலினத்தவரும் என மொத்தம் 8 லட்சத்து 47 ஆயிரத்து 310 வாக்காளர்கள் உள்ளனர்.

    புதுச்சேரி:

    இந்திய தேர்தல் ஆணை யத்தின் அறிவுறுத்தலின்படி 1.1.2024 ஐ தகுதி நாளாக கொண்டு புதுவை மாவட்டத் தில் உள்ள சட்டமன்ற தொகுதி களின் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்யும் பணி இன்று முதல் டிசம்பர் 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை புதுவை பேட்டையன் சத்திரம் வழுதாவூர் சாலையில் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டது. மாவட்ட கலெக்டர் வல்லவன் பட்டி யலை அரசியல் கட்சியி னருக்கு வழங்கினார். இதில் என்ஆர் காங், கட்சியை சேர்ந்த ராஜாராம், பா.ஜனதா வெற்றிச் செல்வன், தி.மு.க. நடராஜன், காங். வாஞ்சிநாதன், அ.தி.மு.க. கமல்தாஸ், இந்திய கம்யூனிஸ்டு சம்பத், ஆம் ஆத்மி முருகன் உள்ளிட்டோர் பெற்றனர்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் வல்லவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வரைவு வாக்காளர் பட்டியலின்படி மாகி, ஏனாம் உள்பட புதுவை மாவட்டத்தில் 3 லட்சத்து 97 ஆயிரத்து 429 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 45 ஆயிரத்தி 759 பெண் வாக்காளர்களும், மற்றும் 127 மாற்றுப் பாலினத்தவரும் என மொத்தம் 8 லட்சத்து 47 ஆயிரத்து 310 வாக்காளர்கள் உள்ளனர்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் திருத்தம், உரிமை கோரல், ஆட்சேபனை தாக்கல் செய்வதற்கு பணி டிசம்பர். 9 ந்தேதி வரை நடைபெறு கிறது. நவம்பர் 4,5 மற்றும் 18, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×