என் மலர்
புதுச்சேரி

இலவச கண் பரிசோதனை முகாமை கென்னடி எம்.எல்.ஏ.தொடங்கி வைத்த காட்சி.
இலவச கண் பரிசோதனை முகாம்
- கென்னடி எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்
- அரவிந்தர் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரி சோதனை முகாம் நடந்தது.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி உட்பட்ட திப்புராய பேடையில் லசார் ஆலயம் அருகில் குளூனி கன்னியர் வளாகம் மற்றும் அரவிந்தர் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரி சோதனை முகாம் நடந்தது.
முகாமை உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்தனர். நிகழ்ச்சியில் குளூனி கன்னியர் வளாக தலைவர் ரிஹென பேகம், செயலாளர் மர்கரெட் நிகோலஸ், பொருளாளர் ஸ்வர்ணலதா, சித்ரலேகா, தி.மு.க. நிர்வாகிகள் சக்திவேல், ராஜி, விநாயகமூர்த்தி, நோயல், செல்வம், முரளி, காளப்பன், மோரிஸ், ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story






