என் மலர்
புதுச்சேரி
- முன்னாள் அமைச்சர் சந்திரபிரியங்கா பேச்சு
- வாழ்க்கையில் ஆயிரம் இடர்பாடுகள் வந்தாலும் பெண்களுக்கு என தனி சுய சக்தியுடன் செயல்பட வேண்டும்.
புதுச்சேரி:
காரைக்கால் அரசு கலை கல்லூரியில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற தேசிய கருத்தரங்கம் நடந்தது. இதை தொடங்கி வைத்து முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா பேசியதாவது:-
பெண்கள் வாழ்வில் முன்னேறுவதற்கான தங்களின் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் ஆயிரம் இடர்பாடுகள் வந்தாலும் பெண்களுக்கு என தனி சுய சக்தியுடன் செயல்பட வேண்டும்.
பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து தங்கள் தனி திறமைகளை வளர்க்க வேண்டும்.
சமூகத்தில் ஒரு பெண் உயர்ந்த இடத்துக்கு வருவது மிக கடினம். ஆனால் வந்த பிறகு எத்தகைய பிரச்சி னைகள் வந்தாலும், தனது நிலைப்பாட்டில் தெளிவாக இருக்க வேண்டும். நான் இப்படித்தான் இருப்பேன் என தைரியத்து டன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கல்லூரி முதல்வர் ஆசாத்ராசா, பேராசிரியர் அருளழகன் மற்றும் பேராசி ரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ஏ.ஐ.டி.யூ.சி. கண்டனம்
- தன்னிச்சையாக தேர்தலை அறிவித்துவிட்டு, தேர்தலை ரத்து செய்வது கண்டனத்துக்குரியதாகும்.
புதுச்சேரி:
ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச் செயலாளர் சேது செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் நகர சாலையோர வியாபாரக் குழு தேர்தலை நடத்த நகராட்சி நிர்வாகம் 2-வது முறையாக அறிவித்துள்ளது இதற்கு முன் 21.7.2023 அன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படவில்லை. நகராட்சி ஆணையரும் நகராட்சி நிர்வாகமும் இப்பொழுதுள்ள வெண்டிங் கமிட்டி கூட்டத்தை கூட்டி தேர்தல் நடத்த ஆலோசனை நடத்தவில்லை.
தன்னிச்சையாக தேர்தலை அறிவித்துவிட்டு, தேர்தலை ரத்து செய்வது கண்டனத்துக்குரியதாகும்,
தேர்தல் தேதி முடிவு செய்வதற்கு முன்பு எதிர்வரும் பண்டிகை காலங்கள் போன்றவற்றை முன்கூட்டியே சிந்தித்து இருக்க வேண்டும். இந்த தேர்தலை நடத்துவதற்கு விருப்பம் இல்லாமல் ஆணையர் பல்வேறு குளறுபடிகளை செய்து வருகிறார்.
எனவே உடனடியாக ஆணையரை மாற்றி, புதிய ஆணையரை நியமித்து, தற்பொழுது உள்ள வெண்டிங் கமிட்டியை கூட்டி தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும்
இவ்வாறு சேதுசெல்வம் அறிக்கை யில் கூறியுள்ளார்.
- ஆசிரியர்களை அலுவல் பணிக்கு அனுப்ப எதிர்ப்பு
- அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும்போது ஆசிரியர்களை வேறு பணிக்கு மாற்றுவது மாணவர்களின் கல்வியை பாதிக்கும்.
புதுச்சேரி:
புதுவை அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் சர்வீஸ் பிளேஸ்மென்ட் அடிப்படையில் கல்வித்துறையில் அலுவல் பணி செய்யவும், சட்டசபையில் அமைச்சர், எம்.எல்.ஏ.க் கள் அலுவலகத்தில் பணிபுரியவும் அனுப்பப்படுவார்கள்.
சமீபத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் 72 ஆசிரியர்களை கல்வித்துறையில் அலுவல் பணி செய்ய அழைக்கப்பட்டிருந்தனர். இதற்கு அரசியல் கட்சிகள் பல்வேறு சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும்போது ஆசிரியர்களை வேறு பணிக்கு மாற்றுவது மாணவர்களின் கல்வியை பாதிக்கும். மற்ற ஆசிரியர்கள் பணி சுமையால் பாதிக்கப்படுவர் என குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் இதனை கண்டித்து கல்வித்துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.
திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு அய்யப்பன் தலைமை தாங்கினார்.
மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் வீரமோகன். மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகநாதன், திராவிடர் கழகம் சிவ வீரமணி, இளங்கோ, தமிழர் களம் அழகர்,தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், ராஜா, பெரியார் சிந்தனையாளர் இயக்கம் தீனா, அம்பேத்கர் தொண்டர் படை பாவாடைராயன், சிந்தனையாளர் ேபரவை கோ. செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
போராட்ட த்தினால் கல்வித்துறை அலுவ லகத்தின் 2 நுழைவு வாயிலும் பூட்டப்பட்டி ருந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் திடீரென கேட்டின் மீது ஏறி உள்ளே குதித்தனர். வாயில் கதவை அவர்களே திறந்து விட்டனர்.
போராட்ட த்தில் ஈடுபட்ட அனைவரும் கல்வித்துறை வளாகத்தி ற்குள் நுழைந்து படிக்கட்டு களில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமாதா னப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு, பதட்டமும் ஏற்பட்டது.
- செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- இளநிலை பொறியாளர் புனிதவதி மற்றும் தி.மு.க. கம்யூ., உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.11 லட்சத்து 80 ஆயிரம்மதிப்பீட்டில் பாகூர் கிழக்கு வீதி சந்திப்பு தெய்வ சகுந்தலா நகரில் தார் சாலையும் மற்றும் பங்களா வீதி சந்திப்பு அன்னை நகரில் ரூ. 24 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கப்படுகிறது.
இப்பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், மேலாளர் ரவி, உதவி பொறியாளர் சுப்ரமணியன், இளநிலை பொறியாளர் புனிதவதி மற்றும் தி.மு.க. கம்யூ., உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
- இயக்கத்தின் ஆன்மா மறைந்துவிட்டது என கடிதம்
- எனக்கு அவர்கள் பணித்த அறிவார்ந்த செயல்கள் அனைத்தையும் அவரது திருப்திக் கேற்ப செய்து முடித்தேன்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. இணை செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான பேராசிரியர் ராமதாஸ் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பதவி விலகல் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் மற்றும் எனக்கு சமீபத்தில் அளித்த இணைச் செயலா ளர் பதவியில் இருந்து விலகிக் கொள்கி றேன்.
இதனை எனது ராஜி னாமா கடிதமாக ஏற்றுக் கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
முன்னாள் தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலி தாவின் சொந்த அழைப்பி னாலும் என் மீது அவர் காட்டிய அன்பினால் அவரது சமூக நீதி மற்றும் மக்கள் நல கொள்கைகளாலும் அவரது தலைமையை ஏற்று கட்சியில் சேர்ந்து பணியாற்றினேன். எனக்கு அவர்கள் பணித்த அறிவார்ந்த செயல்கள் அனைத்தையும் அவரது திருப்திக் கேற்ப செய்து முடித்தேன்.
அவரது மறைவு எனக்கு பெருத்த அதிர்ச்சியை அளித்தது. இயக்கத்தின் ஆன்மாவே மறைந்து விட்டதாக நான் உணர்கிறேன். இந்த நிலையில் புதுவையையும் அதன் மக்களையும் சார்ந்துள்ள பிரச்சினை களைத் தீர்ப்பதற்கு வாய்ப்பில்லை என்று எனக்குத் தோன்றுகிறது.
எனவே இந்த ராஜினாமா கடிதத்தை தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். நான் கட்சியில் இருந்த போது என்னோடு பணியாற்றிய தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், ஆகிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு பேராசிரியர் ராமதாஸ் கூறியுள்ளார்.
- கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
- பேனர்களை முறைப்படுத்து வது குறித்து அதிகாரிகள் ஆலோசித்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் பேனர்களை முறைப்படுத்துவது தொடர்பான ஆலோச னைக்கூட்டம் கலெக்டர் வல்லவன் தலைமையில் நடந்தது.
உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல், போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன், நகராட்சி, கொம்யூன் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், முக்கிய சிக்னல்களில் உள்ள பேனர்களை முறைப்படுத்து வது குறித்து அதிகாரிகள் ஆலோசித்தனர்.
இந்திரகாந்தி, ராஜீவ்காந்தி சிக்னல், அண்ணாசாலை உட்பட முக்கிய சிக்னல்கள், பள்ளிகள், கோவில்கள், மருத்துவ மனைகள் அருகில் பேனர்கள் வைக்க நிரந்தர தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. எங்கு பேனர் வைக்க அனுமதிக்கலாம்? எவ்வளவு கட்டணம் வசூலிப்பது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டு, பரிந்துரை களை அரசுக்கு அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது.
- ரூ.9 1/2 லட்சம் செலவில் யூ வடிவ வாய்க்காலுடன் சிமெண்டு குழாய் பதிக்கும் பணி நடைபெறுகிறது.
- இப்பணியை கென்னடி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி வம்பாகீரப்பாளையம் கிழக்கு கடற்கரை சாலையில் புதுவை நகராட்சி சார்பில் ரூ.9 1/2 லட்சம் செலவில் யூ வடிவ வாய்க்காலுடன் சிமெண்டு குழாய் பதிக்கும் பணி நடைபெறுகிறது.
இப்பணியை கென்னடி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் போது நகராட்சி ஆணையர் சிவக்குமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் யுவராஜ், பரமானந்தம், ஒப்பந்ததாரர் அழகேசன், தொகுதி செயலாளர் சக்திவேல், கட்சி நிர்வாகிகள் ராஜி, விநாயகமூர்த்தி, நோயல், முரளி, கோபி, காளப்பன், மோரீஸ், ரகுமான், பாஸ்கல் ஆகியோர் உடனிருந்தனர்.
- புதுவை கைவினை பொருட்களை வர்த்தக ரீதியாக மேம்படுத்த
- உலக சுற்றுலா பயனீட்டா ளர்கள் சந்தைபடுத்துதல் மாநாடு சிங்கப்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது.
புதுச்சேரி:
உலக சுற்றுலா பயனீட்டா ளர்கள் சந்தைபடுத்துதல் மாநாடு சிங்கப்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது.
மாநாட்டில் புதுவை அரங்கினை திறந்து வைத்து அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆசிய நாட்டு பிரதிநிதிகளுடன் புதுவையின் சுற்றுலா திட்டங்களை மேம்படுத்து வது குறித்து கலந்துரையாடல் நடத்தினார்.
நேற்று நடைபெற்ற 2- ம் நாள் கண்காட்சியில் சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்தின் முதன்மை வர்த்தக செயலாளர் பிரபாகர், பொருளாதார வர்த்தக செயலாளர் ஜோஷி ஆகியோர் புதுவை அரங்கினை பார்வையிட்டனர். அவர்களிடம் அமைச்சர் லட்சுமிநாராயணன் கலந்துரையாடினார்.
அப்போது புதுவையில் செயல்படுத்தப்பட்டு வரும் சுற்றுலா திட்டங்கள், கலை, கலாச்சாரம் மற்றும் கைவினை பொருட்களை வர்த்தக ரீதியாக மேம்படுத்துவதற்கான விரைவு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விவாதித்தார். மேலும் அடுத்த ஆண்டு மே மாதம் சிங்கப்பூரில் புதுவை சுற்றுலா திட்டங்கள் குறித்து கலைநிகழ்ச்சிகள் நடத்துவது ஆகஸ்டு மாதம் நடைபெறும் சிங்கப்பூர் தேசிய தினத்தில் பார்வையாளர்களுக்கு புதுவை சுற்றுலா கையேட்டினை விநியோ கிப்பது தொடர்பாகவும் ஆலோசனை வழங்கினார்.
- சிறப்பு வகுப்புக்கு மாணவர்கள் தவறாது வருகின்றனர்.
- பள்ளிக்கு வரும் மாணவர்கள் தலையில் அதிக முடியுடன் வந்தால் அவர்களை முடி திருத்துவர்களை கொண்டு சிகை அலங்காரம் செய்தார்.
புதுச்சேரி:
புதுவை சூரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. கல் மண்டபம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இப்பள்ளி மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக இவர் சிறப்பு வகுப்புகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த சிறப்பு வகுப்புகளுக்கு வரும் மாணவர்களுக்கு வாழை இலை போட்டு முட்டையுடன் சிக்கன் பிரியாணி வழங்கியுள்ளார். இது மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் சிறப்பு வகுப்புக்கு மாணவர்கள் தவறாது வருகின்றனர். மாணவர்கள் பசியுடன் சிறப்பு வகுப்புக்கு வரக்கூடாது என்பதற்காகவும் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுக்க ஊக்குவிக்கும் விதமாகவும் ஆசிரியர் செய்துள்ளார்.
மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் தலையில் அதிக முடியுடன் வந்தால் அவர்களை முடி திருத்துவர்களை கொண்டு சிகை அலங்காரம் செய்தார்.
பள்ளியில் பயிலும் மாணவியர் கலை நிகழ்ச்சிகள் பங்கேற்க சென்றபோது அவர்களின் ஏழ்மை கருதி அனைவருக்கும் ஒரே வண்ணத்தில் கலாச்சார உடையையும் ஆசிரியர் கிருஷ்ணசாமி வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- புதுவையில் கடந்த சில மாதங்களாக வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பொதுமக்களிடம் மோசடி கும்பல் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மோசடி கும்பலிடம் இருந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று பலமுறை போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரவிந்தர் வீதியை சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது 61). இவர் புதுவையில் உள்ள தனியார் வங்கியில் கணக்கு வைத்திருந்தார்.
இந்த நிலையில் வைத்தியநாதன் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர், வங்கியில் இருந்து மேலாளர் பேசுவதாக தன்னை அறிமுகம் செய்து கொண்டு பேசினார்.
தங்களது வங்கிக்கணக்கு காலாவதி ஆகிறது. எனவே இதை தவிர்க்க வேண்டும் என்றால் உங்கள் செல்போன் எண்ணுக்கு ஒரு ரகசிய எண் (ஓ.டி.பி.) வரும். அதை சொன்னால் வங்கி கணக்கை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்க உதவி செய்வதாக தெரிவித்தார். இதனை உண்மை என்று நம்பிய வைத்தியநாதன் செல்போன் எண்ணுக்கு வந்த ரகசிய எண், ஆதார், பான் கார்டு, வங்கி விவரங்களை தெரிவித்தார்.
இதையடுத்து அவர் இணைப்பை துண்டித்தார். அடுத்த சில நிமிடங்களில் வைத்தியநாதன் வங்கி கணக்கில் இருந்த ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வைத்திய நாதன் தன்னுடன் பேசிய வங்கி மேலாளரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேச முயன்றார்.
ஆனால் அந்த எண் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. வங்கி மேலாளர் போல் மர்மநபர் பேசி பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வைத்தியநாதன், இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுவையில் கடந்த சில மாதங்களாக வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பொதுமக்களிடம் மோசடி கும்பல் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோசடி கும்பலிடம் இருந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று பலமுறை போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனாலும், பொதுமக்கள் இதனை கருத்தில் கொள்ளாமல் பணத்தை இழந்து வருகின்றனர்.
- முதல்- அமைச்சர் ரங்கசாமி பெருமிதம்
- நம் நாட்டை வளர்ச்சி பெற்ற நாடாக மாற்ற பிரதமர் வழிநடத்தி செல்கிறார்.
புதுச்சேரி:
என் மண், என் தேசம் நிகழ்ச்சியில் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டு அமுத பெருவிழாவை சிறப்பாக கொண்டாடி வருகிறோம். நாம் அனைவரும் இந்தியர்கள். நம் நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் பாடுபட வேண்டும் என்பதற்காக என் மண், என் தேசம் என்ற விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
என் மண், என் தேசம் என்ற வார்த்தையை சொல்லும்போதே தேசப்பற்று வர வேண்டும். புனித கலசம் மூலம் நாட்டின் அனைத்து பகுதி மண்ணும் கலக்கப்பட்டு டெல்லியில் நிறுவப்படுகிறது.
நாட்டின் அனைத்து மண்ணும் கலந்த பூங்கா அமைக்கும்போது நாட்டின் ஒற்றுமை வெளிப் படும். பல மொழி, இனம், அதிக மக்கள் தொகை கொண்டது இந்திய நாடு. எத்தனை வித்தியாசம் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்ற உணர்வுதான் நம் நாட்டின் வலிமையை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது. பிரதமரின் உணர்வு நாடு சிறந்து விளங்க வேண்டும் என்ற வகையில் உள்ளது.
இன்று இந்தியநாடு உலகில் சிறந்த நாடாக திகழ்கிறது. பிரதமர் சிறந்த தலைவராக திகழ்கிறார். உலகில் எந்த நிகழ்வாக இரு ந்தாலும் நம் பிரதமர் ஆலோசனை வழங்கும் நிலையில் உள்ளார். நம் நாட்டை வளர்ச்சி பெற்ற நாடாக மாற்ற பிரதமர் வழிநடத்தி செல்கிறார்.
புதுவை சிறிய மாநிலமாக இருந்தாலும் சிறந்த மாநிலமாக விளங்குகிறது. கல்வியில் 100 சதவீத தன்னிறைவு பெற்ற மாநிலமாககொண்டு வந்துள்ளோம். சுகாதார வசதிகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க செய்துள்ளோம்.
ஆன்மிகம், கல்வி, மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்தியுள்ளோம். நம் நாட்டின் இந்திய குடிமகன்கள் அனைவரும் ஒற்றுமையோடு வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கவர்னர் தமிழிசை பேச்சு
- காலனி ஆதிக்கத்தின் பெயரில் இருந்ததை மாற்ற வேண்டும் என பிரதமர் விரும்புகிறார்.
புதுச்சேரி:
புதுவையில் என் மண், என் தேசம் இயக்கம் 3 நிகழ்வாக நடந்தது.
முதல் நிகழ்வாக கடந்த ஆகஸ்டு 9-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை 108 கிராம பஞ்சாயத்து அளவிலும், 2-ம் கட்டமாக ஆகஸ்டு 16 முதல் 20-ந் தேதி வரை 5 நகராட்சிகள், 3 வட்டார அளவிலும் நிகழ்வுகள் நடத்தப்பட்டது.
3-வது கட்டமாக ஆகஸ்டு 18-ந் தேதி 108 கிராம பஞ்சாயத்துகள், 5 நகராட்சி களில் சேகரிக்கப்பட்ட புனித மண் அமிர்த கலசங்கள், மரக்கன்றுகள், செடி ஆகியவை எடுத்து வரப்பட்டு அவற்றை ஒன்றாக கலந்து அதில் மரக்கன்றுகள் நட்டு மாநில அளவில் அமிர்த பூங்கா வனம் பாரதி பூங்காவில் அமைக்கப்பட்டது.
2-ம் நிகழ்வாக இல்லம்தோறும் ஒரு பிடி மண், ஒரு பிடி அரிசி தானமாக பெறப்படும் நிகழ்ச்சி 139 கிராமத்திலும், 108 கிராம பஞ்சாயத்திலும், 5 நகராட்சியிலும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடந்தது.
தற்போது 3-ம் நிகழ்வாக மாநில அளவிலான அமிர்த கலச யாத்திரை ஒருங்கி ணைக்கும் நிகழ்வு இன்று காமராஜர் மணிமண்ட பத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமை வகித்தார். கவர்னர் தமிழிசை 5 உறுதி மொழிகளை வாசித்தார். விழாவில் பங்கேற்றவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-
என் மண் என் தேசம் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன். பிரதமர் நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டை முழு ஆண்டும் கொண்டாடப்பட வேண்டும் என சுதந்திர அமிர்த பெருவிழாவை தொடங்கி வைத்தார்.
2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்று வோம் என உறுதி யேற்றுள்ளோம்.
பிரதமர் 2047-க்குள் வல்லரசு நாடாக மாற வேண்டும் என விருப் பத்தை தெரிவித்து அதற்காக உழைத்துக் கொண்டிருக்கி றார்.
எந்த நாட்டில் போர் நடந்தாலும், இந்திய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என அவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுத்தார்.
உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இந்திய மக்கள் பாதிக்கப்படக்கூடாது, தேசம் அவர்களுக்கு துணை நிற்கும் என பிரதமர் செயல்படுகிறார்.
புதுவைக்கு சுதந்திர போராட்ட வரலாறு உள்ளது. நாம் நாட்டுப்பற்றா ளர்களாக விளங்க வேண்டும்.
இந்திய சுதந்திர போராட்டத்துக்கு பல வகையில் புதுவை உதவி செய்துள்ளது. இதில் பல ரகசியங்கள், சரித்திரம் உள்ளது. இந்த ரகசியங்கள் அனைவருக்கும் தெரிய வேண்டும். வீரசாவர்க்கர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அவரின் தியாகத்தைக்கூட கேள்வி எழுப்பும் சிலர் உள்ளனர்.
அவர் எழுதிய புத்தகத்தை ஆங்கில அரசு தடை செய்கிறது. ஒரே ஒரு புத்தகம் புதுவையில் இருந்தது. அந்த புத்தகம்தான் மொழி பெயர்ப்பு செய்ய ப்பட்டு சுதந்திரத்துக்கு முதன்முதலில் வித்திட்டது. புதுவையில் உண்மையான சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்டது எது? என்ற விபரங்களை அரசு ஆவணப்படுத்த வேண்டும்.
பாரதம் என்ற சொல் நாட்டில் 7 ஆயிரம் ஆண்டுக்கு முன் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாரத மாதா என்றுதான் அழைக்கிறோம். அதற்காகத்தான் தேசிய கல்வி கொள்கையில் இந்தியாவை பாரதம் என அழைக்கலாமா? என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியா அல்லது பாரதம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. பாரதியாரே, பாரத தேசம் என தோள் கொட்டுவோம் என கூறியுள்ளார். இந்தியாவை பாரதம் என அழைப்பதில் தவறில்லை என்பதே என் கருத்து. சென்னை மாகாணம் தமிழ் நாடு என மாற்றப்பட்டபோது ஏற்பட்ட உணர்ச்சி, இந்தியாவை பாரதம் என கூறும்போது தேசப்பற்று ஏற்படும்.
இதை ஆரோக்கியமான விஷயமாக கருத வேண்டும். இதை எதிர்த்துத்தான் பேசுவோம் என நினைக்கக்கூடாது. காலனி ஆதிக்கத்தின் பெயரில் இருந்ததை மாற்ற வேண்டும் என பிரதமர் விரும்புகிறார். நாட்டைப்பற்றிய உணர்வு மாணவர்களுக்கு இருக்க வேண்டும்.
சினிமா நட்சத்திரங்களை பற்றி தெரிந்தவர்களுக்கு நாட்டின் சுதந்திர நட்சத்திரங்களை பற்றி தெரியவில்லை என்பது வேதனை தருகிறது. சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி மாணவர்கள் அதிகமாக படிக்கவேண்டும். என் மண், என் தேசம் என்றால் சுதந்திரம் பெற நாடு என்ன பாடுபட்டது? என தெரிந்து கொள்ள வேண்டும். தெரியப்படாத சுதந்திர வீரர்களை தெரிந்துகொள்ள வேண்டும். புதுவையில் ஆதாரத்துடன் சுதந்திர கனலை ஊட்டியது தொடர்பான முழுமையான புத்தகம் வெளியிடப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சபாநாயகர் செல்வம், கலைபண்பாட்டுத்துறை செயலர் நெடுஞ்செழியன், இயக்குனர் கலியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.






