search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தூதரக அதிகாரிகளுடன் அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆலோசனை
    X

    உலக சுற்றுலா திருவிழாவில் புதுவை அரங்கத்தை இந்திய தூதரக அதிகாரிகள் பார்வையிட்ட காட்சி. அருகில் அமைச்சர் லட்சுமி நாராயணன் உள்ளார்.

    தூதரக அதிகாரிகளுடன் அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆலோசனை

    • புதுவை கைவினை பொருட்களை வர்த்தக ரீதியாக மேம்படுத்த
    • உலக சுற்றுலா பயனீட்டா ளர்கள் சந்தைபடுத்துதல் மாநாடு சிங்கப்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    புதுச்சேரி:

    உலக சுற்றுலா பயனீட்டா ளர்கள் சந்தைபடுத்துதல் மாநாடு சிங்கப்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    மாநாட்டில் புதுவை அரங்கினை திறந்து வைத்து அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆசிய நாட்டு பிரதிநிதிகளுடன் புதுவையின் சுற்றுலா திட்டங்களை மேம்படுத்து வது குறித்து கலந்துரையாடல் நடத்தினார்.

    நேற்று நடைபெற்ற 2- ம் நாள் கண்காட்சியில் சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்தின் முதன்மை வர்த்தக செயலாளர் பிரபாகர், பொருளாதார வர்த்தக செயலாளர் ஜோஷி ஆகியோர் புதுவை அரங்கினை பார்வையிட்டனர். அவர்களிடம் அமைச்சர் லட்சுமிநாராயணன் கலந்துரையாடினார்.

    அப்போது புதுவையில் செயல்படுத்தப்பட்டு வரும் சுற்றுலா திட்டங்கள், கலை, கலாச்சாரம் மற்றும் கைவினை பொருட்களை வர்த்தக ரீதியாக மேம்படுத்துவதற்கான விரைவு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விவாதித்தார். மேலும் அடுத்த ஆண்டு மே மாதம் சிங்கப்பூரில் புதுவை சுற்றுலா திட்டங்கள் குறித்து கலைநிகழ்ச்சிகள் நடத்துவது ஆகஸ்டு மாதம் நடைபெறும் சிங்கப்பூர் தேசிய தினத்தில் பார்வையாளர்களுக்கு புதுவை சுற்றுலா கையேட்டினை விநியோ கிப்பது தொடர்பாகவும் ஆலோசனை வழங்கினார்.

    Next Story
    ×