என் மலர்
உண்மை எது
இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையேயான கலாச்சார தூதராக அவர் நியமிக்கப்பட்டு உள்ளதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் வைரலான மானிகே மகே ஹித்தே பாடலை பாடிய யோஹானி டி சில்வா இந்தியா மற்றும் இலங்கை இடையிலான கலாச்சார தூதராக நியமிக்கப்பட்டு இருப்பதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், இலங்கையில் உள்ள இந்திய உயர் ஆணையம் யோஹானியை புதிய கலாச்சார தூதர் என பாராட்டி இருந்தது. இந்த பதிவு தவறான தகவல்களுடன் பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் இந்திய உயர் ஆணையம், யோஹானியை பாராட்டியது, ஆனால் தூதராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கவில்லை என உறுதியாகிவிட்டது.

யூடியூபில் யோஹானி பாடிய மானிகே மகே ஹித்தே பாடல் சுமார் ஒரு கோடிக்கும் அதிக பார்வைகளை கடந்துள்ளது. இதற்கு கொலம்போவில் உள்ள இந்திய உயர் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், யோஹானியை பாராட்டியது.
பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தும் ஏர் இந்தியா ஒன் விமானத்தின் உள்புறம் என கூறி வைரலாகும் புகைப்படங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தும் ஏர் இந்தியா ஒன் விமானத்தின் உள்புறம் இப்படித் தான் இருக்கும் என கூறி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படங்களில் விமானத்தின் உள்புறம் ஆடம்பர சொகுசு வசதிகள் நிறைந்த வடிவமைப்பு கொண்டிருக்கிறது.
பிரதமர் மோடி விமானத்தில் இருக்கும் புகைப்படத்துடன், நீண்ட நேர பயணங்களின் போது தான் அலுவல் பணிகளை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார். சமீபத்தில் பிரதமர் மோடியின் புகைப்படம் வெளியானதை தொடர்ந்து இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

'ஏர் இந்தியா போயிங் 777-300 உள்புறம், அவர் தனது உதவியாளர் இடத்தில் அமர்ந்து கொண்டு பக்த்களை ஏமாற்றி வருகிறார். இந்த விமானத்தின் அளவு ஆக்கி மைதானத்திற்கு இணையானது,' எனும் தலைப்பில் விமானத்தின் உள்புற புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இதுகுறித்த இணைய தேடல்களில், போயிங் நிறுவனத்தின் பி.பி.ஜெ. 777எக்ஸ் விமானம் பற்றிய செய்தி தொகுப்பு டிசம்பர் 2018 இல் வெளியாகி இருப்பது தெரியவந்தது. இந்த செய்தி குறிப்பிலும், தற்போது வைரலாகும் புகைப்படங்கள் இடம்பெற்று இருக்கின்றன. உண்மையில், இது தனியார் நிறுவனம் வெளியிட்ட கான்செப்ட் படங்கள் ஆகும்.
மேலும் வைரல் பதிவுகளில் உள்ள படங்கள் ஏர் இந்தியா ஒன் விமானத்தில் எடுக்கப்பட்டது இல்லை. உண்மையில் இவை போயிங் 777 300 இ.ஆர். விமானத்தின் கான்செப்ட் படங்கள் ஆகும்.
தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டதாக கூறி பிரதமர் மோடி அடங்கிய செய்தி குறிப்பு வைரலாகி வருகிறது.
அமெரிக்க செய்தி நிறுவனமான நியூ யார்க் டைம்ஸ் முதல் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் அவரின் சமீபத்திய அமெரிக்க பயணத்தை குறிக்கும் தலைப்பு கொண்ட செய்தி குறிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
'உலகின் கடைசி, சிறந்த நம்பிக்கை. உலகின் மிகவும் விரும்பப்படும் மற்றும் மிகவும் சக்திவாய்ந்த தலைவர், இங்கு நம்மை ஆசிர்வதிக்க வந்திருக்கிறார்,' எனும் தலைப்பு கொண்ட செய்தி தொகுப்பு வைரலாகும் பதிவுகளில் இணைக்கப்பட்டு இருக்கிறது.

வைரல் படத்தை ஆய்வு செய்ததில், அது போலியாக உருவாக்கப்பட்ட ஒன்று என தெரியவந்தது. வைரல் பதிவுகளிடையே பலர் இந்த படம் போலியானது என கருத்து தெரிவித்து இருக்கின்றனர். மேலும் சிலர், இந்த படத்தில் எழுத்துப்பிழை இருப்பதை சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.
அந்த வகையில் பிரதமர் மோடி குறித்து வெளியானதாக வைரலாகும் செய்தி குறிப்பு போலியான ஒன்று என உறுதியாகிவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க சுற்று பயணத்தை முடித்து கொண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி இந்தியா வந்தடைந்தார்.
பாகிஸ்தான் அரசு சார்பில் நியூசிலாந்து அணிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு இது என கூறி வைரலாகும் புகைப்படம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
பாகிஸ்தானில் சுற்று பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிகெட் அணி பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி செப்டம்பர் 17 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடனான கிரிகெட் தொடரில் விளையாட மறுத்து நாடு திரும்பியது. இதற்கு பாகிஸ்தான் கிரிகெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா நியூசிலாந்து அணியின் நடவடிக்கையை கடுமையாக சாடினார்.
இந்த நிலையில், பாதுகாப்பு அதிகாரிகளின் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது இலங்கை கிரிகெட் அணிக்கு பாகிஸ்தான் அரசாங்கம் கொடுத்த பாதுகாப்பு எனும் தலைப்பில் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.

வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது 2019 வாக்கில் எடுக்கப்பட்டது என தெரியவந்தது. உண்மையில் இந்த புகைப்படம் இலங்கை கிரிகெட் அணிக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பாதுகாப்பு நடவடிக்கை என்றும் தெரியவந்துள்ளது. இதே புகைப்படம் அடங்கிய செய்தி குறிப்புகள் செப்டம்பர் 30, 2019 அன்று பதிவிடப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில், இலங்கை அணிக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பு என கூறி வைரலாகும் புகைப்படம் தற்போது எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த புகைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது ஆகும்.
பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறி புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.
வைரல் புகைப்படத்தில் அமரிந்தர் சிங் மற்றும் அமித் ஷா கை குலுக்குகின்றனர். அமரிந்தர் சிங் செப்டம்பர் 18 ஆம் தேதி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இவரை தொடர்ந்து சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக செப்டம்பர் 20 ஆம் தேதி பதவியேற்றார்.
இந்த நிலையில், 'அமரிந்தர் சிங் அமித் ஷாவை சந்தித்தார். விரைவில் பா.ஜ.க.வில் இணைவார்,' எனும் தலைப்பில் வைரல் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

புகைப்படத்தை இணையத்தில் தேடிய போது, இந்த படம் ஜூன் 2019 ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்தது. இந்த புகைப்படம் அமரிந்தர் சிங் பஞ்சாப் முதல்வராக இருந்த போது உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்த போது எடுக்கப்பட்டது ஆகும். சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அமரிந்தர் சிங் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
அந்த வகையில் தற்போது வைரலாகும் புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது. முன்னதாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தான் இன்னமும் காங்கிரஸ் கட்சியில் இருப்பதாகவே பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு விமானம் கடத்தப்படுவதாக கூறி புகைப்படம் வைரலாகி வருகிறது.
தலிபான்கள் காபூலை கைப்பற்றியது முதல் ஆப்கானிஸ்தானில் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், விமானம் ஒன்று லாரியில் எடுத்து செல்லப்படும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் பதிவுகளில் விமானம் இப்படித்தான் ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்படுகிறது என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 'பாகிஸ்தானுக்கு விமானம் லாரியில் கடத்தப்படுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு வரவேற்கிறோம்,' எனும் தலைப்பில் இந்த புகைப்படம் பகிரப்படுகிறது.

வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது வெடித்து தரையிறங்கிய ஆப்கன் நாட்டு ராணுவ விமானம் என தெரியவந்தது. இந்த விமானம் ஆப்கானிஸ்தானின் மத்திய பகுதியில் உள்ள டைகுந்தி பகுதியில் விழுந்தது. மேலும் இந்த சம்பவம் 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது செயலிழந்த விமானம் விபத்து பகுதியில் இருந்து கொண்டு செல்லப்பட்ட போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் பற்றிய செய்தி குறிப்புகளும் இணையத்தில் கிடைக்கின்றன. அந்த வகையில் ஆப்கானிஸ்தான் விமானம் பாகிஸ்தானுக்கு கடத்தப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அரசியலுக்கு வரும் முன் பாடகராக இருந்தார் என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் பதிவுகளுடன் பஞ்சாப் முதல்வர் மற்றும் இளைஞர் ஒருவரின் புகைப்படம் இணைக்கப்பட்டு இருக்கிறது. புகைப்படத்தில் இருக்கும் இளைஞர் முதல்வர் சரண்ஜித் சிங் தான் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில் புகைப்படத்தில் இருக்கும் இளைஞர் பாடகர் தான் என்றும் இவரின் பெயரும் சரண்ஜித் சிங் சன்னி என தெரியவந்தது. 2004 ஆம் ஆண்டு ஆனந்த் மியூசிக் பதிவு செய்த 'தேரே ஹோங்கி சந்த்ரியெ பெரி' எனும் பஞ்சாபி பாடல் தொகுப்பின் புகைப்படம் வைரல் பதிவுகளில் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இதே பாடல் தொகுப்பை இணையத்தில் தேடிய போது யூடியூப் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதை காண முடிந்தது. உண்மையில் இந்த பாடல்களை சரண்ஜித் என்ற பாடகர் தான் பாடியிருக்கிறார். இவரின் நேர்காணல் வீடியோக்களும் இணையத்தில் கிடைக்கின்றன. அந்த வகையில், பஞ்சாப் முதல்வர் அரசியலுக்கு வரும் முன் பாடிகராக இல்லை என உறுதியாகிவிட்டது.
ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் புகைப்படம் அப்போது எடுக்கப்பட்டது என கூறி வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் மற்றும் ராணி எலிசபெத் ஒரே பிரேமில் உள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாடு சுதந்திரத்திற்காக போராடி கொண்டிருக்கும் போது ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் ராணிக்கு வணக்கம் செலுத்துவதில் ஆர்வமாக இருந்தனர் எனும் தலைப்பில் இந்த புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.
வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது இரண்டு புகைப்படங்களை இணைத்து உருவாக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இரண்டில் ஒரு புகைப்படம் 1952, பிப்ரவரி மாதத்தில் எலிசபெத் ராணியாக பொறுப்பேற்ற போது எடுக்கப்பட்டது ஆகும். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் 1925 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

மற்றொரு புகைப்படம் 2013 ஆம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்ட வலைதள செய்தியில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த புகைப்படம் 2008 ஆம் ஆண்டு முதல் விக்கிப்பீடியா தளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
அந்த வகையில், வைரல் பதிவுகளில் உள்ளதை போன்று புகைப்படம் சுதந்திர போராட்டம் நடைபெற்ற காலக்கட்டத்தில் எடுக்கப்படவில்லை என்பது உறுதியாவிகிவிட்டது. மேலும் புகைப்படம் கணினியில் உருவாக்கப்பட்டது என்றும் தெளிவாகிவிட்டது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு துருக்கி அரசாங்கம் அஞ்சல் தலை வெளியிட்டுள்ளதாக கூறி வைரலாகும் தகவல் குறித்து தொடர்ந்து பார்ப்போம்.
பிரதமர் நரேந்திர மோடி தனது 71-வது பிறந்தநாளை செப்டம்பர் 17 ஆம் தேதி கொண்டாடினார். சமூக வலைதளங்களில் பிரதமர் மோடிக்கு பலத்தரப்பட்டோர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதற்கிடையே சிலர் பிரதமர் மோடி புகைப்படம் அடங்கிய அஞ்சல் தலை புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் இந்த அஞ்சல் தலை துருக்கி அரசாங்கம் பிரதமர் மோடியை பாராட்டி பரிசளித்ததாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அஞ்சல் தலை மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் வைரல் பதிவுகளில் இணைக்கப்பட்டுள்ளன.

வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், துருக்கி அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு இந்த அஞ்சல் தலையை வெளியிட்டது என தெரியவந்துள்ளது. மேலும் அந்த ஆண்டு நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களுக்கும் இதேபோன்ற அஞ்சல் தலையை அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டது.
அந்த வகையில் வைரல் பதிவுகளில் உள்ள அஞ்சல் தலை பிரதமர் மோடிக்காக பிரத்யேகமாக வெளியிடப்படவில்லை என உறுதியாகிவிட்டது. மேலும் இது சமீபத்தில் வெளியிடப்பட்ட அஞ்சல் தலை இல்லை என்பதும் தெளிவாகிவிட்டது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனியார் வங்கியை கையகப்படுத்த இருப்பதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பெடரல் வங்கியை சுமார் ஆயிரம் கோடி டாலர்கள் கொடுத்து கையகப்படுத்த இருப்பதாக கூறும் செய்தி குறிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வங்கிய கையகப்படுத்தி வங்கி துறையில் ஜியோ களமிறங்க இருக்கிறது என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
தற்போது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பெடரல் வங்கி, வைரல் பதிவுகளில் உண்மையில்லை என தெரிவித்துள்ளன. வங்கியை கையகப்படுத்துவது குறித்து எந்த தகவலையும் இதுவரை வெளியிடவிலலை என ஜியோ தனியார் நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறது.

வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் 1949-படி மத்திய ரிசர்வ் வங்கி கார்ப்பரேட் அல்லது தொழில்துறை நிறுவனங்கள் வங்கியை துவங்க அனுமதிக்காது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வங்கிகளை துவங்குவதற்கான விதிமுறைகளில் ரிசர்வ் வங்கி குழு பல்வேறு மாற்றங்களை செய்தது. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ பெடரல் வங்கியை கையகப்படுத்துவதாக வைரலான தகவல் பொய் என உறுதியாகிவிட்டது.
தி.மு.க.வின் நீட் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என நளினி சிதம்பரம் கூறியதாக வைரலாகும் தகவல்.
நீட் விவகாரத்தில் தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக நளினி சிதம்பரம் கூறியதாக தந்தி டிவி செய்தி அடங்கிய புகைப்படம் வைரலாகி வருகிறது. வைரல் பதிவில் தி.மு.க.-வை எதிர்க்கும் கருத்துக்கள் இடம்பெற்று இருக்கின்றன.
இந்த தகவல் உண்மையென நம்பி ட்விட்டரில் பலர் இதனை ரீட்வீட் செய்து இருக்கின்றனர். செய்தி அடங்கிய படம் மட்டுமின்றி வீடியோவும் வைரலாகி வருகிறது.

இதுகுறித்த இணைய தேடல்களில், தமிழக அரசின் அவசர சட்டம் குறித்து நளினி சிதம்பரம் எந்த கருத்தும் தெரிவித்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகவில்லை. வைரல் செய்தி அடங்கிய புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது 2017-இல் வெளியான செய்தி என தெரியவந்தது.
2017-இல் தமிழக அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என நளினி சிதம்பரம் பேசினார். அந்த வகையில் வைரலாகும் தகவல் சமீபத்தில் நளினி சிதம்பரம் தெரிவித்தது இல்லை என உறுதியாகிவிட்டது.
தமிழ் நாட்டில் உள்ள கோயில் இடிக்கப்படுவதாக கூறும் தகவல் அடங்கிய பதிவுகள் வைரலாகி வருகின்றன.
கோயில் கட்டிடம் இடிக்கப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தமிழ் நாட்டில் எடுக்கப்பட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும், மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"தலிபான் ஆளும் தமிழகத்தில் மற்றொரு இந்து கோயில் இடிக்கப்பட்டது. வழக்கம் போல் எந்த எதிர்ப்பும் இல்லை. தொடர்ந்து உறங்குங்கள்," என்பது போன்ற தலைப்பில் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது தமிழ் நாட்டில் எடுக்கப்படவில்லை என தெரியவந்தது. உண்மையில் இந்த வீடியோ கர்நாடக மாநிலத்தின் நஞ்சிகுட் பகுதியில் உள்ள மகாதேவம்மா கோயில் இடிக்கப்படும் போது எடுக்கப்பட்டது ஆகும்.
வலைதளங்களிலும் பலர், இந்த வீடியோ கர்நாடக மாநிலத்தில் எடுக்கப்பட்டது என கருத்து தெரிவித்து இருக்கின்றனர். அந்த வகையில் வைரல் வீடியோ தமிழ் நாட்டில் எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது.






