search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.எஸ்.எஸ். - கோப்புப்படம்
    X
    ஆர்.எஸ்.எஸ். - கோப்புப்படம்

    பகீர் தகவலுடன் வைரலாகும் ஆர்.எஸ்.எஸ். புகைப்படம்

    ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் புகைப்படம் அப்போது எடுக்கப்பட்டது என கூறி வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் மற்றும் ராணி எலிசபெத் ஒரே பிரேமில் உள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாடு சுதந்திரத்திற்காக போராடி கொண்டிருக்கும் போது ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் ராணிக்கு வணக்கம் செலுத்துவதில் ஆர்வமாக இருந்தனர் எனும் தலைப்பில் இந்த புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.

    வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது இரண்டு புகைப்படங்களை இணைத்து உருவாக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இரண்டில் ஒரு புகைப்படம் 1952, பிப்ரவரி மாதத்தில் எலிசபெத் ராணியாக பொறுப்பேற்ற போது எடுக்கப்பட்டது ஆகும். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் 1925 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

     வைரலாகும் புகைப்படம்

    மற்றொரு புகைப்படம் 2013 ஆம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்ட வலைதள செய்தியில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த புகைப்படம் 2008 ஆம் ஆண்டு முதல் விக்கிப்பீடியா தளத்தில் இடம்பெற்று இருக்கிறது. 

    அந்த வகையில், வைரல் பதிவுகளில் உள்ளதை போன்று புகைப்படம் சுதந்திர போராட்டம் நடைபெற்ற காலக்கட்டத்தில் எடுக்கப்படவில்லை என்பது உறுதியாவிகிவிட்டது. மேலும் புகைப்படம் கணினியில் உருவாக்கப்பட்டது என்றும் தெளிவாகிவிட்டது. 
    Next Story
    ×