search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் புகைப்படம்
    X
    வைரல் புகைப்படம்

    விமானம் கடத்தப்படுவதாக வைரலாகும் புகைப்படம்

    ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு விமானம் கடத்தப்படுவதாக கூறி புகைப்படம் வைரலாகி வருகிறது.


    தலிபான்கள் காபூலை கைப்பற்றியது முதல் ஆப்கானிஸ்தானில் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், விமானம் ஒன்று லாரியில் எடுத்து செல்லப்படும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    வைரல் பதிவுகளில் விமானம் இப்படித்தான் ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்படுகிறது என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 'பாகிஸ்தானுக்கு விமானம் லாரியில் கடத்தப்படுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு வரவேற்கிறோம்,' எனும் தலைப்பில் இந்த புகைப்படம் பகிரப்படுகிறது.

     ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது வெடித்து தரையிறங்கிய ஆப்கன் நாட்டு ராணுவ விமானம் என தெரியவந்தது. இந்த விமானம் ஆப்கானிஸ்தானின் மத்திய பகுதியில் உள்ள டைகுந்தி பகுதியில் விழுந்தது. மேலும் இந்த சம்பவம் 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது செயலிழந்த விமானம் விபத்து பகுதியில் இருந்து கொண்டு செல்லப்பட்ட போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.

    இந்த சம்பவம் பற்றிய செய்தி குறிப்புகளும் இணையத்தில் கிடைக்கின்றன. அந்த வகையில் ஆப்கானிஸ்தான் விமானம் பாகிஸ்தானுக்கு கடத்தப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
    Next Story
    ×