search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரண்ஜித் சிங் சன்னி
    X
    சரண்ஜித் சிங் சன்னி

    பஞ்சாப் முதல்வர் அரசியலுக்கு வரும் முன் இதை தான் செய்தார் - வைரலாகும் புகைப்படம்

    பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அரசியலுக்கு வரும் முன் பாடகராக இருந்தார் என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் பதிவுகளுடன் பஞ்சாப் முதல்வர் மற்றும் இளைஞர் ஒருவரின் புகைப்படம் இணைக்கப்பட்டு இருக்கிறது. புகைப்படத்தில் இருக்கும் இளைஞர் முதல்வர் சரண்ஜித் சிங் தான் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில் புகைப்படத்தில் இருக்கும் இளைஞர் பாடகர் தான் என்றும் இவரின் பெயரும் சரண்ஜித் சிங் சன்னி என தெரியவந்தது. 2004 ஆம் ஆண்டு ஆனந்த் மியூசிக் பதிவு செய்த 'தேரே ஹோங்கி சந்த்ரியெ பெரி' எனும் பஞ்சாபி பாடல் தொகுப்பின் புகைப்படம் வைரல் பதிவுகளில் இணைக்கப்பட்டு இருக்கிறது.

     யூடியூப் ஸ்கிரீன்ஷாட்

    இதே பாடல் தொகுப்பை இணையத்தில் தேடிய போது யூடியூப் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதை காண முடிந்தது. உண்மையில் இந்த பாடல்களை சரண்ஜித் என்ற பாடகர் தான் பாடியிருக்கிறார். இவரின் நேர்காணல் வீடியோக்களும் இணையத்தில் கிடைக்கின்றன. அந்த வகையில், பஞ்சாப் முதல்வர் அரசியலுக்கு வரும் முன் பாடிகராக இல்லை என உறுதியாகிவிட்டது.

    Next Story
    ×