என் மலர்tooltip icon

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக 751 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 9 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 17 ஆயிரத்து 21 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

    751 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் பாதிப்புக்கு மேலும் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 237 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர் அருகே வேன்-கார் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த கர்ப்பிணி உள்பட 5 பேர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள சென்னல்குடியைச் சேர்ந்தவர் மணிமேகலை (வயது 22). கர்ப்பிணியான இவருக்கு கணவர் வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி முடிந்து மணிமேகலை தனது உறவினர்களுடன் சாத்தூரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு வேனில் புறப்பட்டார்.

    சென்னல்குடி ரோட்டில் வேன் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் வேன் மீது மோதியது. இதில் வேனில் இருந்த மணிமேகலை, ராமச்சந்திரன் (50), மாரீஸ்வரி (40), கருப்பசாமி (32) மற்றும் கார் டிரைவர் சூர்யா (23) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அனைவரும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது பற்றிய புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 863 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 863 ஆக உயர்ந்துள்ளது. இது வரை 17 ஆயிரத்து 2 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 663 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஒருவர் நோய்க்கு பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது.
    ரெயில் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் மேல் பக்கம் தெற்கு தெருவில் வசித்து வந்தவர் மாரியப்பன் (வயது 60). கூலித் தொழிலாளியான இவர் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வேண்டுராயபுரம் பகுதியில் உள்ள ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ரெயில் அவர் மீது மோதியது. இதில் அவர் பரிதாபமாக பலியானார். இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று மாரியப்பனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாளை முதல் தடுப்பூசிகள் தொடர்ந்து போடப்படும் என கலெக்டர் கண்ணன் தெரிவித்தார்.

    விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 60 சதவீத முன் கள பணியாளர்களுக்கும், 61 சதவீத சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும் மற்றும் 90 சதவீத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டதால் தற்போது தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதற்காக 95 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 35 முகாம்கள் நிரந்தர முகாம்களாகும்.

    கலெக்டர் கண்ணன்


    தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து கேட்டபோது கலெக்டர் கண்ணன் கூறியதாவது:-

    தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு குறித்து ஏற்கனவே மாநில சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று தடுப்பூசி மருந்து வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே இன்று மதியம் அல்லது நாளை முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். மேலும் மாவட்டத்தில் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் உயிர் காக்கும் மருந்தான ரெம்டெவிசிர் போதிய அளவில் இருப்பு உள்ளது. தனியார் ஆஸ்பத்திரிகளில் மருந்து இல்லாத நிலையில் அவர்கள் இதுபற்றி தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நோயாளிகளை உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

    அரசு ஆஸ்பத்திரிகளில் 780 படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்கு தயார் நிலையில் உள்ளது. இது போக 7 கொரோனா சிகிச்சை மையங்களும் தயார் நிலையில் உள்ளன. இம்மாவட்டத்தில் தினசரி 1,500 மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பரிசோதனை மையத்தில் 2 நவீன பரிசோதனை கருவிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பரிசோதனை மையத்தில் செயல் திறனை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த மையத்தில் தினசரி 2,000 மருத்துவ பரிசோதனை செய்வதற்கு வாய்ப்பு ஏற்படும்.

    தற்போதுள்ள நிலையில் நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களை கண்காணிக்க முடியாத நிலை உள்ளது. நோய் பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் அவர்கள் வசிக்கும் பகுதியில் சென்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் தான் நோய் பாதிப்பை தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் நோய்த்தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

    கொரோனா நோயாளிகளுக்கு வேண்டிய ஆக்சிஜன் கிடைப்பதில் தட்டுப்பாடு இல்லை. அரசு ஆஸ்பத்திரியிலேயே ஆக்சிஜனை உற்பத்தி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் நோய் பாதிப்பை தவிர்க்க மாவட்ட மக்கள் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதுடன் அரசு அறிவித்துள்ள நோய் தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றவும் வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    வத்திராயிருப்பு பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது.
    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 31 அடியில் இருந்து 2 அடி உயர்ந்து 33.73 அடியாக உள்ளது.

    அதேபோல கோவிலாறு அணையின் நீர்மட்டம் 26.25 அடியாக உயர்ந்து உள்ளது. தற்போது பிளவக்கல் பெரியாறு அணைக்கு 0.08 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

    வத்திராயிருப்பு சுற்றி உள்ள 40 கண்மாய்களில் 15 கண்மாய்களில் 75 சதவீதம் நீர் இருப்பு உள்ளதாகவும், 15 கண்மாய்களில் 50 சதவீதம் நீர் இருப்பு உள்ளதாகவும், மீதமுள்ள 10 கண்மாய்களில் 20 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகள் மூலம் வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் 8 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் தங்களது சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர்.
    வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது.

    வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 31 அடியில் இருந்து 2 அடி உயர்ந்து 33.73 அடியாக உள்ளது.

    அதேபோல கோவிலாறு அணையின் நீர்மட்டம் 26.25 அடியாக உயர்ந்து உள்ளது. தற்போது பிளவக்கல் பெரியாறு அணைக்கு 0.08 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

    வத்திராயிருப்பு சுற்றி உள்ள 40 கண்மாய்களில் 15 கண்மாய்களில் 75 சதவீதம் நீர் இருப்பு உள்ளதாகவும், 15 கண்மாய்களில் 50 சதவீதம் நீர் இருப்பு உள்ளதாகவும், மீதமுள்ள 10 கண்மாய்களில் 20 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகள் மூலம் வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் 8 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் தங்களது சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 500 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    விருதுநகர்:

    மாவட்டத்தில் மேலும் 112 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 17,615 ஆக உயர்ந்துள்ளது. 16,880 பேர் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பியுள்ளனர். 500 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது வரை நோய் பாதிப்புக்கு 235 பேர் பலியாகியுள்ளனர்.
    வெம்பக்கோட்டை பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்கவும், மழைநீர் சாலையில் தேங்காதவாறு வடிய வைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தாயில்பட்டி:

    வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் தாயில்பட்டி அருகே உள்ள இறவார்பட்டி கிராமத்தில் இருந்து சாத்தூர் செல்லும் மெயின் ரோடு சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்த சாரல் மழையால் தார்ச்சாலை சேதமடைந்து விட்டது.

    இதனால் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

    பள்ளம் இருப்பது தெரியாமல் வாகனங்களில் வருபவர்கள் தவறி கீழே விழுந்து விடுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகளும், அந்த வழியாக செல்பவர்களும் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

    எனவே உடனடியாக சேதமடைந்த சாலையை சீரமைக்கவும், மழைநீர் சாலையில் தேங்காதவாறு வடிய வைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் இன்று 112 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,615-ஆக உள்ளது.
    விருதுநகர்:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9,80,728 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 9,02,022 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,071-ஆக அதிகரித்துள்ளது. 
     
    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,80,184 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் இன்று 112 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,615-ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 16,880 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 235 பேர் உயிரிழந்துள்ளனர். 
    ராஜபாளையத்தில் பெண் பஞ்சாலை தொழிலாளி மீது தாக்குதல் நடத்தியதாக மேற்பார்வையாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம்-மதுரை சாலையில் தனியார் நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலையில் எலக்ட்ரிகல் சூப்பர்வைசராக கருப்பசாமி என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இதே ஆலையில் பெண் தொழிலாளியாக ராஜபாளையம் சோழராஜபுரம் தெருவை சேர்ந்த சுப்புலட்சுமி (வயது 55) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

    சுப்புலட்சுமி வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று கருப்புசாமி, அவரை நோக்கி வந்து தன் மீது களங்கம் கூறியதாக கூறி திடீரென்று காலில் கிடந்த செருப்பை எடுத்து சுப்புலட்சுமியை சரமாரியாக அடித்தாராம்.

    இதுகுறித்து ஆலை நிர்வாகத்திடம் சுப்புலட்சுமி புகார் கூறியபோது ஆலை நிர்வாகத்திற்கு கருப்பசாமி கட்டுப்பட மறுத்து விட்டாராம்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் மாரியப்பன், மாவட்டக் குழு உறுப்பினர் சுப்பிரமணியன், இந்திய ஜனநாயக மாதர் சங்க நகர தலைவர் மேரி உள்பட ஏராளமான தொழிலாளர்கள் கூட்டமாக கூடினர். ஆலை நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற போது, அவர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் காவல் நிலையத்தில் புகார் செய்து தீர்வு காணலாம் என ஆலை நிர்வாகம் கூறியது.

    அதன் பேரில் அனைவரும் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு இன்ஸ்பெக்டர் தெய்வம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    சாத்தூர் பகுதியில் நேற்று 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
    சாத்தூர்:

    சாத்தூர், லட்சுமியாபுரம், கண்மாய்சூரன்குடி, ஒத்தையால், மேட்டமலை, சின்னகமன்பட்டி, சிந்தப்பள்ளி, இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி, சத்திரப்பட்டி, சடையம்பட்டி, படந்தால் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

    தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

    இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் சாத்தூர் பகுதி முழுவதும் நிலவியது. இந்த மழை விவசாயத்திற்கு பெரிதும் உதவும் என விவசாயிகள் கூறினர்.
    ×