என் மலர்tooltip icon

    விருதுநகர்

    கடம்பன்குளம் கண்மாய் அருகே 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி கடம்பன்குளம் கண்மாய் அருகே 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் காயங்களுடன் இறந்து கிடப்பதாக அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பிணத்தை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இவரை யாரேனும் கொலை செய்தார்களா? அல்லது உடல்நிலை சரியில்லாமல் இறந்தாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசியில் அடித்து கொலை செய்யப்பட்ட கட்டிட தொழிலாளி நவநீதகிருஷ்ணன் கொலை வழக்கு தொடர்பாக சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி கண்மாயில் பதுங்கி இருந்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    சிவகாசி:

    சிவகாசி ரிசர்வ்லைன் வசந்தம் நகரை சேர்ந்த கணேசன் மகன் நவநீதகிருஷ்ணன் (வயது 31). கட்டிட தொழிலாளியான இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், யுவராஜ், ஆதவ் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    குடிபழக்கம் உள்ள நவநீத கிருஷ்ணன் அவ்வப்போது நண்பர்களுடன் மதுபான கூடத்துக்கு சென்று மது அருந்துவது வழக்கம். கடந்த சில நாட்களுக்குமுன் ஒரு மதுபான கூடத்தில் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டு இருந்தபோது அங்கு வந்த சிவகாசியை சேர்ந்த அரவிந்த் என்கிற பார்த்திபனுடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் நவநீத கிருஷ்ணன் அவரது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அரவிந்த், கருப்பசாமி, வைர முத்து, முத்துபாண்டி ஆகியோர் நவநீதகிருஷ்ணனை கடுமையாக தாக்கி அவரை ரத்தம் சொட்ட, சொட்ட இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று மல்லி போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட காட்டுபகுதியில் வீசிவிட்டு சென்று விட்டனர்.

    இது குறித்து தகவல்அறிந்த சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது மதுபான கூடத்தில் நடந்த தகராறில் காரணமாக கட்டிட தொழிலாளி நவநீதகிருஷ்ணன் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடிவந்தனர். இதற்கிடையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் வாலிபர்கள் அரவிந்த் என்கிற பார்த்திபன் (வயது 27), கருப்பசாமி (27), வைரமுத்து (22), முத்துப்பாண்டி (27) ஆகியோர் சிவகாசி சிறுகுளம் கண்மாய் பகுதியில் பதுங்கி இருப்பதாக இன்ஸ் பெக்டர் வெங்கடாஜலபதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர் போலீஸ் படையுடன் சென்று 4 வாலிபர்களையும் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தார். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மதுபான கூடத்தில் நடந்த தகராறில் நவநீதகிருஷ்ணன் ஆத்திரத்தில் அரவிந்த் என்கிற பார்த்திபனை தாக்கியதால் அவரை கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.

    கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டும் மற்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இந்த முறை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமி, பிரதோ‌ஷம் நாள்களில் பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்து வருகிறது.

    அதன்படி பிரதோ‌ஷம் மற்றும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி செல்ல நாளை (24-ந் தேதி) முதல் 26-ந் தேதி வரை பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்திருந்தது.

    மேலும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலில் சிறப்பு வழிபாடுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

    இந்த நிலையில் கொரோனா மற்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இந்த முறை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது

    இதன் காரணமாகவும், கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டும் இந்த முறை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. அதே நேரம் சுந்தர சந்தன மகா லிங்கம் கோயில்களில் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
    மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி 95 மையங்கள் மூலம் போடப்பட்டு வருகிறது. இதில் 35 மையங்கள் நிரந்தர மையங்கள் ஆகும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்திற்கு 10,500 டோஸ் கோவி ஷீல்டு தடுப்பூசி மருந்து வந்துள்ள நிலையில் அடுத்த 2 நாட் களுக்கு மட்டுமே இந்த மருந்து பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளதல் மாவட்ட நிர்வாகம் கூடுதல் டோஸ் தடுப்பூசி மருந்துகளை பெறு வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.


    மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி 95 மையங்கள் மூலம் போடப்பட்டு வருகிறது. இதில் 35 மையங்கள் நிரந்தர மையங்கள் ஆகும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. தனியார் ஆஸ்பத்திரிகளிலும் தடுப்பூசி போடப்படுகிறது. தினசரி 4000 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    அதில் 2-வது டோஸ்போட வேண்டியவர்களுக்கும் தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 2-வது டோஸ் குறிப்பிட்ட கால கெடுவிற்குள் போடாவிட்டால் முதலாவது டோஸ் போட்ட பலன் இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் மாவட்ட மக்களிடையே உள்ளது. 10,500 டோஸ் மாவட்டத்திற்கு மாநில சுகாதாரத் துறையால் 10,500 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து அனுப்பப்பட்டு உள்ளது.

    ஏற்கனவே தடுப்பூசி மையங்களுக்கு வந்து தடுப்பூசி போட முடியாமல் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளவர்களே 10 ஆயிரத்துக்கும்மேல் உள்ள நிலையில் இந்த தடுப்பூசி மருந்தை கொண்டு அடுத்த இரண்டு நாட்கள் மட்டுமே தடுப்பூசி போட வாய்ப்பு ஏற்படும். அதன் பின்னர் பதிவு செய்தவர்களுக்கும் 2-வது தவணை தடுப்பூசி போடவேண்டியவர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு வாய்ப்பு இல்லாதநிலை ஏற்படும். மேலும் கோவாக்சின் மருந்து தட்டுப்பாடு உள்ள நிலையில் 2-வது தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.


    எனவே மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தில் உள்ள 95 தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி போடுவதற்கு தேவையான தடுப்பூசி மருந்துகளை பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது. ஏற்கனவே மாநிலத்திற்கு 6 லட்சம் கோவிஷீல்டு மருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்திற்கு கூடுதலாக தடுப்பூசி மருந்து டோஸ்களை அனுப்பி வைக்க மாநில சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
    விருதுநகர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பள்ளி மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் மருத்துவ பரிசோதனை செய்ய ஏற்பாடு.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே சத்திரரெட்டிய பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த மேல்நிலைப் பள்ளியில் தற்போது பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான செய்முறை தேர்வு நடந்து வருகிறது.

    இந்த தேர்வு இன்றுடன் முடிவடைய உள்ளது. இந்தபள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் முதுகலை ஆசிரியர்கள், அலுவலர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளும் செய்முறை தேர்வுக்காக பள்ளிக்கு வந்து செல்லும் நிலை உள்ளது.

    இந்த நிலையில் பள்ளியில் பணியாற்றும் 34வயது முதுகலை ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறையால் சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அரசு வழிகாட்டு நெறி முறைப்படி பள்ளியில் பணியாற்றும் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டால் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் பணியாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியது அவசியமாகும்.

    ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் பள்ளி நிர்வாகத்தாலோ அல்லது மாவட்ட பள்ளிக் கல்வித் துறையாலோ எடுக்கப்படாத நிலை நீடிக்கிறது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது ஆசிரியைக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டது பற்றிய தகவலை மாவட்ட பள்ளிக் கல்வித்துறைக்கு தெரிவித்த போதிலும் பள்ளிக் கல்வித் துறையிடம் இருந்து மருத்துவ பரிசோதனை செய்ய அறிவுறுத்தல் வழங்கப் படாத நிலையில் மருத்துவ பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்ய முடியாத நிலை உள்ளதாக தெரிவித்தார்.

    இந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி உள்ளனர். எனவே இன்றுடன் செய்முறை தேர்வு முடிவடையும் நிலையில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும், தலைமை ஆசிரியை உள்ளிட்ட ஆசிரியர்களுக்கும் அலுவலர் களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது.

    மேலும் அரசு வழிகாட்டு நெறி முறைப்படி நோய் தொற்று ஏற்பட்டு உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யாத மாவட்ட பள்ளிக் கல்வித்துறையிடம் விசாரணை நடத்தி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மீதும் பள்ளித்தலைமை ஆசிரியர் மீதும் மாவட்ட நிர்வாகம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியமாகும்.
    கொரோனா பரிசோதனை மையங்களை அதிகரித்திட வேண்டும் என்று வலியுறுத்தி ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    ராஜபாளையம்:

    மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி தடையின்றி போடப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், கபசுர குடிநீர் வழங்கிட வேண்டும், கொரோனா பரிசோதனை மையங்களை அதிகரித்திட வேண்டும் என்று வலியுறுத்தி ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நகர செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் கணேசன், பிரசாந்த், நகர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், சிவஞானம், பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ரத வீதி, கீழரத வீதி சந்திப்பு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழுவைச் சேர்ந்த திருமலை தலைமை தாங்கினார். இதில் நகர செயலாளர் ஜெயக்குமார், ஒன்றியச் செயலாளர் சசிகுமார், மாதர் சங்கத்தைச் சேர்ந்த ரேணுகா தேவி, மாநில குழுவைச் சேர்ந்த மகாலட்சுமி மற்றும் பிச்சைக்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    சிவகாசியில் கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசியில் முன் விரோத தகராறில் கட்டிட தொழிலாளியை அடித்து கொலை செய்த கும்பல் அவரது உடலை காட்டு பகுதியில் வீசி சென்றுவிட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி ரிசர்வ் லைன் வசந்தம் நகரை சேர்ந்தவர் கணேசன் மகன் நவநீதகிருஷ்ணன் (வயது 31). கட்டிட தொழிலாளியான இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், யுவராஜ், ஆதவ் என்ற 2 மகன்களும் உள்ளனர். மாரியம்மாள் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மானகசேரியில் வசித்து வருகிறார். நவநீத கிருஷ்ணன் தனது தாய் பேச்சியம்மாளுடன் ரிசர்வ்லைனில் வசித்து வந்தார்.

    நவநீதகிருஷ்ணன் அவ்வப்போது நண்பர்களுடன் மதுபான கூடத்துக்கு சென்று மது அருந்துவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள ஒரு மதுபான கூடத்தில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டு இருந்த போது அங்கு வந்த சிவகாசியை சேர்ந்த அரவிந்த் என்கிற பார்த்திபனுடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் நவநீதகிருஷ்ணன், அரவிந்தனை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இதை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று மதியம் நவநீதகிருஷ்ணன் தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கி பின்னர் அவரை இரு சக்கர வாகனத்தில் ஏற்றி கடத்திச் சென்றனர். இதனை அப்பகுதியை சேர்ந்த சிலர் நேரில் பார்த்துள்ளனர்.

    இந்த நிலையில் நவநீதகிருஷ்ணனின் தாய் பேச்சியம்மாள் வீடு திரும்பிய போது வீட்டில் ரத்தம் வழிந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அப்பகுதியை சேர்ந்த சிலர் உதவியுடன் நவநீதகிருஷ்ணனை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் சிவகாசி அருகே மல்லி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட எஸ்.புதுப்பட்டி காட்டுப்பகுதியில் நவநீத கிருஷ்ணன் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்ததும் சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி மற்றும் போலீசார் எஸ்.புதுப்பட்டிக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வீட்டில் இருந்த நவநீதகிருஷ்ணனை சரமாரியாக தாக்கி கடத்திச் சென்று கொலை செய்து உடலை காட்டுப்பகுதியில் வீசிச் சென்ற கும்பலை சிவகாசி டவுன் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நவநீதகிருஷ்ணனின் தாய் பேச்சியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் அரவிந்த் என்கிற பார்த்திபன் உள்பட 4 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் தேடி வருகிறார்கள்.

    கட்டிட தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சாத்தூர் அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தூர்:

    சாத்தூர் அருகே உள்ள கத்தாளம்பட்டியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (வயது 38). இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இந்த நிலையில் பன்னீர்செல்வம் கடந்த 15-ந்தேதி தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொண்டார். பின்னர் அவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இச்சம்பவம் தொடர்பாக அம்மாபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் கேபிள் டி.வி. அதிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் பி.பி.வையாபுரி தெருவைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 44). விருதுநகரில் கேபிள் டி.வி. நடத்தி வந்தார். இவர் கடந்த மாதம் தொழிலதிபர் ஒருவரின் மனைவியை மிரட்டி தொடர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவரது ஆபாச படங்களை அவரது கணவரான ெதாழிலதிபருக்கு செல்போன் மூலம் அனுப்பியதுடன், அந்த படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடாமலிருக்க ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும் புகார் அளிக்கப்பட்டது.

    அந்த புகாரின் பேரில் பிரேம்குமார் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் பிரேம்குமார் தொடர் சைபர் குற்றங்களை மேற்கொண்டதாக அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார். அதன் பேரில் கலெக்டர் கண்ணன் கேபிள் டி.வி. அதிபர் பிரேம்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    இதனைத்தொடர்ந்து விருதுநகர் கிழக்கு போலீசார் பிரேம்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
    தளவாய்புரம் அருகே நகைக்கடை மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தளவாய்புரம்:

    தளவாய்புரம் அருகே உள்ள முகவூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் ஜெகன் (வயது 40). இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர் ராஜபாளையத்தில் உள்ள பிரபல நகைக் கடையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் குடும்பத்தகராறு காரணமாக ஜெகன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலைகளில் ஓடும் அவல நிலை உள்ளதால் இதனை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பால் மாவட்ட மக்கள் தவித்து வரும் நிலையில் பல்வேறு நகர்ப் பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதால் நோய் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இது குறித்து உள்ளாட்சி அமைப்புகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையே தொடர்கிறது. இந்த நிலையில் விருதுநகரில் பாதாள சாக்கடைகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலைகளில் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையில் நகராட்சி நிர்வாகத்திடம் இதுபற்றி முறையிடப்பட்டுள்ளது.

    இதனிடையே விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கழிவுநீர் வெளியேறி அரசு ஆஸ்பத்திரியின் கிழக்கு பகுதியில் உள்ள கால்வாய் வழியாக மல்லாங்கிணறு ரோட்டில் சாலையின் ஓரத்தில் தேங்கி நிற்கும் அவல நிலை உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடம், அரசு அலுவலகங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசு ஆஸ்பத்திரி மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே தற்போது நோய் பாதிப்பின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறும் கழிவு நீரை முறையாக அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் சாலை ஓரத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நகராட்சி நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக 729 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 116 ஆக உயர்ந்துள்ளது. இது வரை 17 ஆயிரத்து 48 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 729 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை நோய் பாதிப்புக்கு 237 பேர் பலியாகி உள்ளனர்.

    இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சில பகுதிகளை நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவித்துள்ளது. அதன்படி வீரசோழன் தெற்கு தெரு, மானூர் வடக்கு தெரு, தம்மநாயக்கன்பட்டி, மூளிப்பட்டி, பெரியவள்ளிக்குளம் மற்றும் சூலக்கரை மேடு, வ.உ.சி.நகர் பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் அரசு அறிவித்துள்ள நோய் கட்டுப்பாட்டு விதிகள் அமலில் இருக்கும்.
    ×