என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சிவகாசி கட்டிட தொழிலாளி கொலை: 4 வாலிபர்கள் கைது

    சிவகாசியில் அடித்து கொலை செய்யப்பட்ட கட்டிட தொழிலாளி நவநீதகிருஷ்ணன் கொலை வழக்கு தொடர்பாக சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி கண்மாயில் பதுங்கி இருந்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    சிவகாசி:

    சிவகாசி ரிசர்வ்லைன் வசந்தம் நகரை சேர்ந்த கணேசன் மகன் நவநீதகிருஷ்ணன் (வயது 31). கட்டிட தொழிலாளியான இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், யுவராஜ், ஆதவ் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    குடிபழக்கம் உள்ள நவநீத கிருஷ்ணன் அவ்வப்போது நண்பர்களுடன் மதுபான கூடத்துக்கு சென்று மது அருந்துவது வழக்கம். கடந்த சில நாட்களுக்குமுன் ஒரு மதுபான கூடத்தில் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டு இருந்தபோது அங்கு வந்த சிவகாசியை சேர்ந்த அரவிந்த் என்கிற பார்த்திபனுடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் நவநீத கிருஷ்ணன் அவரது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அரவிந்த், கருப்பசாமி, வைர முத்து, முத்துபாண்டி ஆகியோர் நவநீதகிருஷ்ணனை கடுமையாக தாக்கி அவரை ரத்தம் சொட்ட, சொட்ட இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று மல்லி போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட காட்டுபகுதியில் வீசிவிட்டு சென்று விட்டனர்.

    இது குறித்து தகவல்அறிந்த சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது மதுபான கூடத்தில் நடந்த தகராறில் காரணமாக கட்டிட தொழிலாளி நவநீதகிருஷ்ணன் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடிவந்தனர். இதற்கிடையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் வாலிபர்கள் அரவிந்த் என்கிற பார்த்திபன் (வயது 27), கருப்பசாமி (27), வைரமுத்து (22), முத்துப்பாண்டி (27) ஆகியோர் சிவகாசி சிறுகுளம் கண்மாய் பகுதியில் பதுங்கி இருப்பதாக இன்ஸ் பெக்டர் வெங்கடாஜலபதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர் போலீஸ் படையுடன் சென்று 4 வாலிபர்களையும் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தார். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மதுபான கூடத்தில் நடந்த தகராறில் நவநீதகிருஷ்ணன் ஆத்திரத்தில் அரவிந்த் என்கிற பார்த்திபனை தாக்கியதால் அவரை கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.

    Next Story
    ×