என் மலர்tooltip icon

    விருதுநகர்

    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல்ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் மாரிசாமி (வயது24). இவர்அந்த பகுதியில் உள்ள தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இங்கு தூத்துக்குடி மாவட்டம் விளாத்தி குளத்தைச் சேர்ந்த மணிமுத்து (21) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். இருவரும் அடிக்கடி சந்திக்க நேர்ந்த நிலையில் 2 பேருக்கும் காதல் மலர்ந்தது.

    இந்தநிலையில் இவர்களது பெற்றோர் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2 பேரும் பாதுகாப்பு கோரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் பாலமுருகன், மாவட்டக்குழு உறுப்பினர் முருகேசன் ஆகியோர் இவர்களை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    ஆனால் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக செயல்பாடு முடங்கியுள்ள நிலையில் வச்சக்காரப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி இருவரின் பெற்றோரையும் அழைத்து சமரசம் பேசினர். இதனைத் தொடர்ந்து அவர்களது பெற்றோர் திருமணத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
    தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:


    ராஜபாளையம்
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    தங்கப்பாண்டியன்திமுக74158
    கே.டி.ராஜேந்திரபாலாஜிஅதிமுக70260
    காளிமுத்துஅமமுக7660
    விவேகானந்தன்சமக4059
    ஜெயராஜ்நாம் தமிழர்15593
    ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    மான்ராஜ்அதிமுக70475
    மாதவராவ்காங்கிரஸ்57737
    சங்கீதபிரியாஅமமுக23682
    குருவையாமநீம3512
    அபிநயாநாம் தமிழர்20348
    சாத்தூர்
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    ஏ.ஆர்.ஆர். ரகுராமன்மதிமுக74174
    ஆர்.கே.ரவிச்சந்திரன்அதிமுக62995
    எம்.எஸ்.ஆர். ராஜவர்மன்அமமுக32916
    கி.பாண்டிநாம் தமிழர்12626
     சிவகாசி
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    அசோகன்காங்கிரஸ்78947
    லட்சுமிகணேசன்அதிமுக61628
    சாமிக்காளைஅமமுக9893
    முகுந்தன்மநீம6090
    கனகபிரியாநாம் தமிழர்20865
    விருதுநகர்
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்திமுக73297
    பாண்டுரங்கன்பாஜக51958
    கோகுலம் தங்கராஜ்அமமுக10783
    மணிமாறன்சமக5054
    செல்வகுமார்நாம் தமிழர்14311
    அருப்புக்கோட்டை
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்திமுக91040
    வைகைசெல்வன்அதிமுக52006
    ஆர்.ரமேஷ்தேமுதிக2532
    வி.உமாதேவிமநீம7638
    அ.உமா நாம் தமிழர்12392
    திருச்சுழி
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    தங்கம் தென்னரசுதிமுக102225
    ராஜசேகர்மூமுக41233
    கே.கே.சிவசாமிஅமமுக6441
    முருகன் மநீம1356
    ஆனந்தஜோதிநாம் தமிழர்13787
    வத்திராயிருப்பு பகுதியில் அறுவடை செய்யப்படும் நெற்பயிர்களை நெற்களம் இல்லாததால் சாலைகளில் கொட்டும் சூழ்நிலை உள்ளது.
    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு, கான்சாபுரம், கூமாபட்டி, மகாராஜபுரம், தம்பிபட்டி, இலந்தைகுளம், கோட்டையூர் உள்பட வத்திராயிருப்பு தாலுகாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல்சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் விளைந்து ஒரு சில வாரங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.

    வத்திராயிருப்பு பகுதியில் அறுவடை செய்யப்படும் நெற்பயிர்களை நெற்களம் இல்லாததால் சாலைகளில் கொட்டும் சூழ்நிலை உள்ளது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வருடந்தோறும் நெல் சாகுபடி செய்து வருகிறோம். இங்கு நெற்களம் இல்லாததால் வத்திராயிருப்பு கிருஷ்ணன் கோவில் செல்லும் சாலையில் அறுவடை செய்யும் நெற்பயிர்களை கொட்டி 2 அல்லது 3 நாட்களுக்கு பிறகு வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறோம்.

    அதேபோல வத்திராயிருப்பில் இருந்து கூமாபட்டி செல்லும் சாலையிலும் விவசாயிகள் அறுவடை செய்த நெற்பயிர்களை சாலையில் கொட்டி உலர்த்திய பின்னரே வியாபாரிக்கு விற்பனை செய்கிறோம்.

    எனவே வியாபாரிகளின் நலனைகருத்தில் கொண்டு வத்திராயிருப்பு பகுதியில் நெற்களம் அமைத்து தர வேண்டும். அதுவும் அறுவடைக்கு முன்பு அமைத்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    அருப்புக்கோட்டை தொகுதியில் சாத்தூர் ராமச்சந்திரன் 9-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
    விருதுநகர்:

    அருப்புக்கோட்டை தொகுதியில் சாத்தூர் ராமச்சந்திரன் 9-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

    தற்போதுள்ள அருப்புக்கோட்டை தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு சாத்தூர் தொகுதியாக இருந்தது. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அமைச்சராக இடம் பெற்றார். அப்போது அந்த அமைச்சரவையில் எம்.ஜி.ஆரை தவிர பண்ருட்டி ராமச்சந்திரனும் அமைச்சராக இருந்ததால் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சாத்தூர் ராமச்சந்திரன் அழைக்கப்பட்டார்.

    அதுமுதல் அவர் அரசியல் வட்டாரத்தில் சாத்தூர் ராமச்சந்திரன் என்று அழைக்கப்படுவது வழக்கமாயிற்று.

    அருப்புக்கோட்டை தொகுதியில் மொத்தம் 1,71,409 வாக்குகள் பதிவாகின. இதில் நோட்டா 1,323. செல்லாதவை 208.

    அருப்புக்கோட்டை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சாத்தூர் ராமச்சந்திரன் 91,040. வாக்குகள் பெற்று வெற்றி பெற்று சாதனை படைத்தார். அ.தி.மு.க. வேட்பாளர் வைகைச்செல்வன் 52,006 வாக்குகள் பெற்றார்.

    அருப்புக்கோட்டை தொகுதியில் 29 பேர் போட்டியிட்டனர். அவர்கள் வாங்கிய ஓட்டுகள் வருமாறு:-

    1. சாத்தூர் ராமச்சந்திரன் (தி.மு.க) - 91040.

    2. வைகைச் செல்வன் (அ.தி.மு.க.) - 52006.

    3. ஆர்.ரமேஷ் (தே.மு.தி.க) - 2535.

    4. அ.உமா (நாம் தமிழர் கட்சி) - 12392.

    5. வி.உமாதேவி (மக்கள் நீதி மையம்) - 7638.

    6. சுப்பாராஜ் (பகுஜன் சமாஜ்) - 272.

    7. எம்.கருப்பசாமி (புதிய தமிழகம்) - 478.

    8. எஸ்.தீனதயாளன் (அனைத்து மக்கள் புரட்சி) - 58.

    9. எஸ்.பாண்டியன் ( பகுஜன் திராவிட கட்சி) - 48.

    10. ஏ.பி.எஸ்.ஜான்சன் (மை இந்தியா கட்சி) - 57.

    11. ஜி.ரஞ்சித் (சுயேச்சை) - 57.

    12. ஆர்.எஸ்.ராமச்சந்திரன் (சுயே) - 68.

    13. வழக்கறிஞர் தங்கபாண்டியன் (சுயே) - 426.

    14. தங்கவடிவேல் (சுயே) - 61.

    15. தனசேகரன் பாண்டியன் (சுயே) - 76.

    16. பிரசாந்த் (சுயே) - 438.

    17. கே. பூமிநாதன் (சுயே) - 629.

    18. வி.பூர்ணிஷா (சுயே) - 216.

    19. ஆர்.பொன்முனியசாமி (சுயே) - 2884.

    20. எஸ்.மணிவண்ணன் (சுயே) - 398.

    21. எம்.முத்துமாரியப்பன் (சுயே) - 135.

    22. இ.ராமச்சந்திரன் (சுயே) - 3053.

    23. ஜி.ராமச்சந்திரன் (சுயே) - 61.

    24. எஸ்.ராமச்சந்திரன் (சுயே) - 188.

    25. டி.ராமச்சந்திரன் (சுயே) - 39.

    26. ஆர்.ராமச்சந்திரன் (சுயே) - 71.

    27. பி.லிங்க பாண்டி (சுயே) - 419.

    28. விஜயகுமார் (சுயே) - 60.

    29. வெங்கடேசன் (சுயே) - 38.
    ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அவர் வெற்றி பெற்றால், அந்த தொகுதி மீண்டும் இடைத்தேர்தலை சந்திக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததால், இந்த தொகுதியின் தேர்தல் முடிவு தமிழகம் முழுவதும் எதிர்பார்க்கப்பட்டது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியில் 15 வேட்பாளர்கள் களம் கண்டனர்.

    இந்த தொகுதியானது தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதால், காங்கிரஸ் சார்பில் மாதவராவ் (வயது 63) வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அ.தி.மு.க. சார்பில் மான்ராஜ் போட்டியிட்டார்.

    தீவிரமாக பிரசாரம் செய்து வந்த வேட்பாளர் மாதவராவ் கொரோனா தொற்றுக்கு ஆளானார். இதைத்தொடர்ந்து மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 6-ந் தேதி நடைபெற்ற நிலையில், அதற்கு அடுத்த சில நாட்களில் மாதவராவ் உயிரிழந்தார்.

    இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அவர் வெற்றி பெற்றால், அந்த தொகுதி மீண்டும் இடைத்தேர்தலை சந்திக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததால், இந்த தொகுதியின் தேர்தல் முடிவு தமிழகம் முழுவதும் எதிர்பார்க்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் பதிவான ஓட்டுகள் நேற்று விருதுநகரில் உள்ள மையத்தில் எண்ணப்பட்டன.

    தொடக்கத்தில் இருந்தே அ.தி.மு.க. வேட்பாளர் மான்ராஜ் முன்னணியில் இருந்தார். 2-வது இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் வந்தார். சுற்றுக்கள் முடிய, முடிய இவர்கள் 2 பேருக்குமான ஓட்டுகள் வித்தியாசம் அதிகரித்த வண்ணம் இருந்தது. 26 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் 12 ஆயிரத்து 738 ஓட்டுகள் அதிகம் பெற்று அ.தி.மு.க. வேட்பாளர் மான்ராஜ் வெற்றி பெற்றார். அவர் 70 ஆயிரத்து 475 வாக்குகள் பெற்றிருந்தார். காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் 57 ஆயிரத்து 737 ஓட்டுகள் வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
    ராஜபாளையம் தொகுதியில் திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியனை எதிர்த்துப் போட்டியிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோல்வியை தழுவியுள்ளார்.
    தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து, தமிழகத்தில் இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணும் பணியானது தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.

    இதனையடுத்து, வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி, திமுக 157 இடங்களிலும், அதிமுக 77 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜி 68,737 வாக்குகளும், திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியன் 72195 வாக்குகளும் பெற்றனர்.

    இதனால், திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியன் 3,458 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
    சாத்தூர் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் அ.தி.மு.க-அ.ம.மு.க.வினர் மோதலில் ஈடுபட்டனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட 7 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை சிவகாசி ஸ்ரீவித்யா கல்லூரியில் தனித்தனி அறைகளில் எண்ணப்பட்டு வருகின்றன. இங்கு அருப்புக்கோட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வைகை செல்வன் இன்று காலை வந்தார். அவர் தனது தொகுதி வாக்கு எண்ணும் அறைக்கு செல்வதற்கு பதில் சாத்தூர் தொகுதி வாக்குகள் எண்ணும் அறைக்கு தவறுதலாக வந்து விட்டார்.

    இதற்கு அ.ம.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு எதிராக அ.தி.மு.க.வினரும் கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வாக்குவாதம் திடீரென மோதலாக மாறியது. இதில் அ.ம.மு.க. முகவரின் சட்டை கிழிந்தது.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரையும் சமரசம் செய்தனர். மாவட்ட தேர்தல் அலுவலர் கண்ணன் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

    பின்னர் வைகை செல்வனை போலீசார் பாதுகாப்பாக அருப்புக்கோட்டை தொகுதி வாக்கு எண்ணும் மையத்திற்கு அழைத்து சென்றனர்.

    இந்த சம்பவம் காரணமாக வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் பதட்டம் நிலவியது.

    வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே மையம் செயல்படாததால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு தலைமை மருத்துவமனையாக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை உள்ளது.
    இந்த மருத்துவமனைக்கு வத்திராயிருப்பு, கான்சாபுரம், கூமாப்பட்டி, நெடுங்குளம், கொடிக்குளம், சேது நாராயணபுரம், பட்டுப்பூச்சி, சுந்தரபாண்டியன் மகாராஜபுரம், தம்பிபட்டி, மேலக்கோபாலபுரம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் 600-க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளியாக வந்து சிகிச்சை பெற்று சொல்கின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையின் மூலம் எண்ணற்ற நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர்.

    இந்த மருத்துவமனையில் கூடுதலாக டாக்டர்கள் பணி அமர்த்தினால் எண்ணற்ற பேர் பயன்பெறுவர்.

    மருத்துவர்கள் பற்றாக்குறையால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரக்கூடிய நோயாளிகள் உடனடியாக சிகிச்சை பெறமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டால் இந்த மருத்துவமனைக்கு தான் சிகிச்சைக்கு வருகின்றனர். இங்குள்ள எக்ஸ்ரே மையத்தில் எக்ஸ்ரே எடுப்பதற்கு 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாளர் இல்லாததால் இந்த மையம் பூட்டிக்கிடக்கிறது. இதனால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

    ஆதலால் இங்கு வரும் நோயாளிகள் தனியார் எக்ஸ்ரே நிலையத்திற்கு சென்று எக்ஸ்ரே எடுக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே இந்த மையத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    அத்துடன் போதுமான அளவு டாக்டர்கள், தூய்மைப்பணியாளர்கள், இரவு காவலாளி ஆகியோரை நியமித்து, மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ராஜபாளையத்தில் வேன் மோதி அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 19-வது வார்டு அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மாரியப்பன் (வயது 50). இவர் 2 முறை அ.தி.மு.க. கவுன்சிலராக வெற்றி பெற்றவர்.

    இவர் நேற்று இரவு ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றார். பின்னால் அவரது நண்பர் முருக கணேஷ் (48) அமர்ந்திருந்தார்.

    மதுரை சாலையில் சென்று கொண்டிருக்கும்போது எதிரே ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ராஜபாளையத்துக்கு பால் கேன்கள் ஏற்றிவந்த கூட்டுறவு பால் சங்கத்தின் வேன், மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் சென்ற முருக கணேஷ் படுகாயம் அடைந்தார். அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

    இந்த விபத்து குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பால் வேன் டிரைவர் முதுகுடி கிராமத்தைச் சேர்ந்த சக்திராஜன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வத்திராயிருப்பில் இரு சக்கர வாகனம்-ஆட்டோ மோதிய விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு அருகே ஆகாசம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது55). இவர் சுண்ணாம்பு காளவாசல் வைத்து நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி சுந்தரம்மாள் (50). இவர்கள் இருவரும் நேற்று காலை வத்திராயிருப்பில் இருந்து இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது வத்திராயிருப்பில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டு இருந்த போது சுந்தரபாண்டியத்திலிருந்து வத்திராயிருப்பிற்கு வந்து கொண்டிருந்த ஆட்டோ சாலையில் உள்ள பள்ளத்தை விலகி சென்ற போது எதிரே கணேசன் வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.

    இந்த விபத்தில் கணேசன், சுந்தரம்மாள், ஆட்ேடாவில் வந்த காந்தி (54), மேகலா தேவி (51), ஆட்டோ டிரைவர் மணிகண்டன் (22) ஆகிய 5 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கணேசன், சுந்தரம்மாள், மணிகண்டன் ஆகிய மூன்று பேரும் மேல் சிகிச்சைகாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    காந்தி, மேகலா தேவி ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக ராஜபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அருப்புக்கோட்டையில் சொக்கநாதர் கோவில் குளத்தை தூய்மைப்படுத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோவில் திருச்சுழி ரோட்டில் அமைந்துள்ளது.

    இந்த கோவில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மன்னரால் கட்டப்பட்டது. தற்போது இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது. இந்த கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு தேங்கி நிற்கும் புனித நீரில் பக்தர்கள் குளித்துவிட்டு அருகிலுள்ள படித்துறை விநாயகரை தரிசித்துவிட்டு கோவிலுக்கு செல்வது வழக்கம்.

    இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தெப்பக்குளம் வறண்டு கழிவுநீர் தேங்கி நிற்கும் குளமாக மாறி வருகிறது.

    இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:-

    அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தொடர்ந்து 15 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

    கோவிலுக்கு வருவதற்கு முன்பாக தெப்பக்குளத்தில் நீராடிவிட்டு தரிசனம் செய்வது வழக்கமாக இருந்தது. தற்போது தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரும் பாதை அடைப்பட்டதாலும், தூர்வாரப்படாததாலும் தண்ணீர் இல்லாத நிலை உள்ளது.

    ஆதலால் கடந்த பல ஆண்டுகளாக தெப்பக்குளம் வறண்டு கழிவுநீர் தேங்கி பாசி படர்ந்து காணப்படுகிறது.

    தெப்பக்குளத்தை சுற்றி சுகாதாரமற்ற நிலை நிலவுகிறது. இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுேநாய் பரவும் அபாயநிலை நிலவுகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெப்பக்குளத்தில் உள்ள கழிவுநீைர அகற்றி, தூய்மைப்படுத்தி, குளத்தை தூர்வாரி தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சிவகாசியில் முன்னாள் பெண் ஒன்றிய கவுன்சிலரிடம் தகராறில் ஈடுபட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி கிழக்கு பகுதியில் உள்ள ஜமீன்சல்வார்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் வைதேவி (வயது 50). முன்னாள் ஒன்றிய கவுன்சிலரான இவர் சிவகாசி குற்றவியல் நடுவர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஜமீன்சல்வார்பட்டியை சேர்ந்த ஆறுமுகச்சாமியின் மகன் கனகரத்தினம் எங்கள் பகுதியில் உள்ள குடிநீர் குழாயை உடைத்துவிட்டார். பின்னர் இரவு 7 மணிக்கு எனது வீட்டிற்கு வந்து என்னிடம் தகராறு செய்தார். அதை தட்டி கேட்ட எனது மகனின் இடதுகை ஆள்காட்டி விரலை கடித்துவிட்டார். மேலும் கழுத்தில்அணிந்து இருந்த தங்கநகையை பறித்துக்கொண்டார். அவருடன் அவரது உறவினர்கள் பாப்பா, தீபா, அருண்குமார், சவுந்திரபாண்டியன், கதிரேசன் ஆகியோரும் இருந்தனர். தகராறை தட்டிக்கேட்ட என்னை 6 பேரும் கீழே தள்ளி விட்டனர். இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

    மனுவை விசாரித்த கோர்ட்டு சிவகாசி கிழக்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×