search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அறுவடைக்கு தயார் நிலையில் நெற்பயிர்கள்.
    X
    அறுவடைக்கு தயார் நிலையில் நெற்பயிர்கள்.

    வத்திராயிருப்பு பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையில் நெற்பயிர்கள்

    வத்திராயிருப்பு பகுதியில் அறுவடை செய்யப்படும் நெற்பயிர்களை நெற்களம் இல்லாததால் சாலைகளில் கொட்டும் சூழ்நிலை உள்ளது.
    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு, கான்சாபுரம், கூமாபட்டி, மகாராஜபுரம், தம்பிபட்டி, இலந்தைகுளம், கோட்டையூர் உள்பட வத்திராயிருப்பு தாலுகாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல்சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் விளைந்து ஒரு சில வாரங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.

    வத்திராயிருப்பு பகுதியில் அறுவடை செய்யப்படும் நெற்பயிர்களை நெற்களம் இல்லாததால் சாலைகளில் கொட்டும் சூழ்நிலை உள்ளது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வருடந்தோறும் நெல் சாகுபடி செய்து வருகிறோம். இங்கு நெற்களம் இல்லாததால் வத்திராயிருப்பு கிருஷ்ணன் கோவில் செல்லும் சாலையில் அறுவடை செய்யும் நெற்பயிர்களை கொட்டி 2 அல்லது 3 நாட்களுக்கு பிறகு வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறோம்.

    அதேபோல வத்திராயிருப்பில் இருந்து கூமாபட்டி செல்லும் சாலையிலும் விவசாயிகள் அறுவடை செய்த நெற்பயிர்களை சாலையில் கொட்டி உலர்த்திய பின்னரே வியாபாரிக்கு விற்பனை செய்கிறோம்.

    எனவே வியாபாரிகளின் நலனைகருத்தில் கொண்டு வத்திராயிருப்பு பகுதியில் நெற்களம் அமைத்து தர வேண்டும். அதுவும் அறுவடைக்கு முன்பு அமைத்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×