search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அருப்புக்கோட்டையில் கோவில் தெப்பக்குளத்தில் கழிவுநீர் தேங்கி பாசி படர்ந்து காணப்படுகிறது.
    X
    அருப்புக்கோட்டையில் கோவில் தெப்பக்குளத்தில் கழிவுநீர் தேங்கி பாசி படர்ந்து காணப்படுகிறது.

    அருப்புக்கோட்டையில் கோவில் குளம் தூய்மைப்படுத்தப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு

    அருப்புக்கோட்டையில் சொக்கநாதர் கோவில் குளத்தை தூய்மைப்படுத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோவில் திருச்சுழி ரோட்டில் அமைந்துள்ளது.

    இந்த கோவில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மன்னரால் கட்டப்பட்டது. தற்போது இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது. இந்த கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு தேங்கி நிற்கும் புனித நீரில் பக்தர்கள் குளித்துவிட்டு அருகிலுள்ள படித்துறை விநாயகரை தரிசித்துவிட்டு கோவிலுக்கு செல்வது வழக்கம்.

    இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தெப்பக்குளம் வறண்டு கழிவுநீர் தேங்கி நிற்கும் குளமாக மாறி வருகிறது.

    இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:-

    அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தொடர்ந்து 15 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

    கோவிலுக்கு வருவதற்கு முன்பாக தெப்பக்குளத்தில் நீராடிவிட்டு தரிசனம் செய்வது வழக்கமாக இருந்தது. தற்போது தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரும் பாதை அடைப்பட்டதாலும், தூர்வாரப்படாததாலும் தண்ணீர் இல்லாத நிலை உள்ளது.

    ஆதலால் கடந்த பல ஆண்டுகளாக தெப்பக்குளம் வறண்டு கழிவுநீர் தேங்கி பாசி படர்ந்து காணப்படுகிறது.

    தெப்பக்குளத்தை சுற்றி சுகாதாரமற்ற நிலை நிலவுகிறது. இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுேநாய் பரவும் அபாயநிலை நிலவுகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெப்பக்குளத்தில் உள்ள கழிவுநீைர அகற்றி, தூய்மைப்படுத்தி, குளத்தை தூர்வாரி தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×