என் மலர்tooltip icon

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 535 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 24,121 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    மாவட்டத்தில் மேலும் 535 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 535 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 24,121 ஆக உயர்ந்துள்ளது.

    21,012 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 2,840 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 3 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது.

    விருதுநகர் நகராட்சி காலனி, ஜெயராம் நகர், கூந்தப்பனை தெரு, அல்லம்பட்டி, வடமலைக்குறிச்சி, ெரயில்வே காலனி, குல்லூர்சந்தை, முத்துராமன் பட்டி, கச்சேரி ரோடு, பாண்டியன் நகர், சிவந்திபுரம், ஆத்துமேடு, மோகன் ராஜேஷ் காலனி, கருப்பசாமி நகர், மணி நகரம், என்.ஜி.ஓ. காலனி, பெத்தனாட்சி, நகர்வேல்சாமி நகர் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு 512 ஆக்சிஜன் படுக்கைகளும், 307ஆக்சிஜன் இல்லாத படுக்கைகளும், 107 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளும் உள்ளன. இதில் 384 ஆக்சிஜன் படுக்கைகளும், 260 ஆக்சிஜன் இல்லாத படுக்கைகளும் 51 தீவிர சிகிச்சைப் பிரிவுபடுக்கைகளும் காலியாக உள்ளன. சிகிச்சை மையங்களில் 1,137 படுக்கைகளில் 445 படுக்கைகளில ்பாதிப்படைந்தோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 692 படுக்கைகள் காலியாக உள்ளன.
    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தலையில் கல்லைபோட்டு கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடர்பாக உறவினரை போலீசார் கைது செய்தனர்.
    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஆவரம்பட்டி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 45),  கட்டிட தொழலாளி.

    இவருக்கும் இவரது அக்காள் மகன் கார்த்திக் (29) என்பவருக்கும் சொத்து சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இது குறித்து பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு காணப்படவில்லை. இதனால் 2 பேருக்கும் அடிக்கடி தகராறு  ஏற்பட்டு உள்ளது.

    இந்நிலையில் நேற்று இரவு மேல் பெருமாள் கோவில் தெருவில் கணேசன் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்திக் சொத்து பிரச்சனை தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

    ஆத்திரமடைந்த கார்த்திக், கணேசனை கீழே தள்ளி அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் போட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் கணேசன் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த ராஜபாளையம் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கணேசனை கொலை செய்த கார்த்திக்கை கைது செய்தனர்.
    விருதுநகர் மாவட்டத்திற்கு மேலும் 10 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தை தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் தற்போது வரை 910 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தும், 1,350 டோஸ் கோவேக்சின் தடுப்பூசி மருந்தும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் மாவட்டத்தில் தடுப்பூசி போட வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஏற்கனவே முன் பதிவு செய்தவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    இருந்த போதிலும் தடுப்பூசி போட ஆர்வத்தோடு வரும் அனைவருக்கும் தடுப்பூசி போட முடியாத நிலையில் தடுப்பூசி மருந்து தேவை என மாவட்ட நிர்வாகம் தமிழக அரசிடம் தெரிவித்தது.

    இந்த நிலையில் தமிழக அரசு விருதுநகர் மாவட்டத்திற்கு 10 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தினை அனுப்பி வைத்துள்ளது. இந்த தடுப்பூசி மருந்து அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேவை அடிப்படையில் பிரித்து வழங்கப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் இதுவரை ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 905 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 444 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்தனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று புதிய உச்சமாக 444 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்து 574 ஆக உயர்ந்துள்ளது. 20 ஆயிரத்து 932 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

    2 ஆயிரத்து 376 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்பால் மேலும் 2 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 267 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டம் முழுவதும் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    விருதுநகர் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பழனிசாமிக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் ரோசல்பட்டி, புல்லலக்கோட்டை ரோடு, ஆமத்தூர், பர்மா காலனி, கூரைக்குண்டு, அகமதுநகர், லட்சுமி நகர், பாண்டியன் நகர், அல்லம்பட்டி, முத்துராமன்பட்டி, தம்மநாயக்கன்பட்டி, ஆர்.எஸ்.ஆர்.நகர், தியாகராஜ நகர் உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் அருப்புக்கோட்டை ஆத்திபட்டி, பந்தல்குடி, செட்டிபட்டி, சாத்தூர், சிவகாசி, விஸ்வநத்தம், விளாம்பட்டி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், மகராஜபுரம், கான்சாபுரம், குன்னூர், நரிக்குடி, வீரசோழன், எம்.ரெட்டியபட்டி, திருச்சுழி, காரியாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    விருதுநகரில் காய்கறி மார்க்கெட் இன்று முதல் 5 இடங்களில் செயல்படும் என நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஜெகதீஸ்வரி தெரிவித்தார்.
    விருதுநகர்:

    விருதுநகரில் காய்கறி மார்க்கெட் இன்று முதல் 5 இடங்களில் செயல்படும் என நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஜெகதீஸ்வரி தெரிவித்தார்.

    விருதுநகர் மெயின்பஜாரில் பிரதான காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

    இந்த காய்கறி மார்க்கெட்டில் போதிய இடவசதி இல்லாத நிலையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கடைகளை வைக்க முடியாத நிலையும் காய்கறி வாங்க வரும் மக்கள் நோய்தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத நிலையும் இருந்ததால் நோய்பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து காய்கறி மார்க்கெட்டினை கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது 5 இடங்களில் தற்காலிகமாக மாற்றப்பட்டது போல் தற்போதும் மாற்றப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

    இந்தநிலையில் மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் காய்கறி மார்க்கெட்டுகளை நெரிசல் மிகுந்த பகுதிகளிலிருந்து விசாலமான பகுதிகளுக்கு மாற்ற உத்தரவிட்டது.

    இந்நிலையில் விருதுநகரில் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஜெகதீஸ்வரி மற்றும் பேரிடர் மேலாண்மை பொறுப்பு அதிகாரி சங்கரநாராயணன், தாசில்தார் சிவஜோதி ஆகியோர் காய்கறி வியாபாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து மூன்று முறை கலந்தாய்வு மேற்கொண்டும் இப்பிரச்சினையில் முடிவு ஏற்படாத நிலை தொடர்ந்தது.

    இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக காய்கறி மார்க்கெட்டை மாற்ற உத்தரவிட்டது.

    தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் சாலையோர கடைகளை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினால் போதுமான இடைவெளி கிடைக்கும் என்றும் அங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் அதிகாரிகள் அதனை ஏற்றுக்கொள்ளாமல் மறுத்த நிலையில் காய்கறி மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஜெகதீஸ்வரி கூறியதாவது:-

    மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுபடி காய்கறி மார்க்கெட் இன்று முதல் புதிய பஸ் நிலையம், அருப்புக்கோட்டை முக்கு ரோடு அருகே உள்ள நகராட்சி மைதானம், கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி, உழவர் சந்தை மற்றும் முஸ்லிம் நடுநிலைப்பள்ளி மைதானம் ஆகிய பகுதிகளில் இன்று முதல் மாற்றம் செய்யப்படுகிறது.

    மறு உத்தரவு வரும் வரை இந்த இடங்களில் காய்கறி மார்க்கெட்டுகள் செயல்படும். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நோய் பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி காய்கறிகளை வாங்கி செல்ல வேண்டும்.

    இவ்வாறு கமிஷனர் (பொறுப்பு) ஜெகதீஸ்வரி தெரிவித்தார்
    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 638 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 20,535 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 638 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது.

    மாவட்டத்தில் மேலும் 638 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 20,535 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

    2,019 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 4 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை இல்லாத அளவுக்கு 600-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    விருதுநகர் முத்துராமன் பட்டி, அல்லம்பட்டி, மின்வாரிய காலனி, சின்ன பள்ளிவாசல் தெரு, லட்சுமி நகர், என்.ஜி.ஓ. காலனி, பெத்தனாட்சி நகர், முத்து தெரு, நக்கீரன்தெரு, கருப்பசாமிநகர், குந்தலப்பட்டி, பாரப்பட்டி தெரு, மேல ரத வீதி, புது ெரயில்வே காலனி, கே.கே.எஸ்.எஸ்.என். நகர், வீரபத்திரன் தெரு, பெரிய பேராலி, மெட்டுக்குண்டு, பாண்டியன் நகர், மாரனேரி, பாரப்பட்டி, பூலாம்பட்டி, ஏ.புதுப்பட்டி, காரியாபட்டி, மல்லாங்கிணறு, அருப்புக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர்,நரிக்குடி, எம்.ரெட்டியபட்டி, ராஜபாளையம், சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று ெகாரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    திருத்தங்கல் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என சிவகாசி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோகன் கூறினார்.
    சிவகாசி:

    சிவகாசி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அசோகன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க இருந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் பத்திரிகைகள் மூலமும், சமூக வலை தளங்கள் வழியாகவும் நன்றி தெரிவித்தேன். கொரோனா கட்டுப்பாடு முடிந்த பின்னர் பொதுமக்களை நேரில் சந் தித்து நன்றி கூறுவேன். தற்போது கொரோனா காலம் என்பதால் பல தொழில்கள் நடைபெறாமல் உள்ளது. தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் உணவு பொருட்களை சிவகாசி தொகுதி மக்களுக்கு வழங்க உள்ளேன். இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 125 சிலிண்டர்கள் தயார் செய்யப்படும். முதல் கட்டமாக 15 ஆக்சிஜன் சிலிண்டர்களை சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கி உள்ளேன்.

    அரசு ஆஸ்பத்திரி மட்டும் இன்றி தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் வினியோகம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கிட ஏற்பாடு செய்யப்படும். அதே போல் உயிர்காக்கும் மருந்துகளும் சிவகாசி அரசு ஆஸ்பத் திரிக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும். அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்படும்.

    திருத்தங்கல்- விருதுநகர் ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். அதேபோல் சுற்றுவட்டசாலைக்கான பணியும் தற்போது தொடங்கி உள்ளது.

    இந்த பணிகளை 4 பிரிவுகளாக பிரித்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் பணி ஒருவருடத்தில் முடியும். சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக கொரோனா நோய் தடுப்புக்கு தேவையான மருந்துகளை சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், சப்-கலெக்டர் தினேஷ்குமாரிடம் வழங்கினார்.
    சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர்களை கைது செய்தனர்.
    சிவகாசி:

    சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர்களை கைது செய்தனர்.

    இதில் திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சத்யாநகரில் மது விற்ற ஆரோக்கியராஜ் (வயது29), கண்ணன் (46), செந்தில் குமார் (33) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 60 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    எம். புதுப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் கொத்தனேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த முருககுமார் (30) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 32 மதுபாட்டில்களை பறி முதல் செய்தனர்.

    இதே போல் சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் நாரணாபுரம் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அனுமதியின்றி மதுவிற்ற முத்துராஜ் (28) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 45 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.

    இதேபோல் சிவகாசி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் ரோந்து பணியில் இருந்த போது சிவானந்தம்நகரில் அனுமதியின்றி மது விற்ற வரதராஜ் (19) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 24 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் நேருரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு அனுமதியின்றி மதுவிற்ற அருள்நகர் சுரேஷ்குமார் (44) என்பவரை போலீசார்கைது செய்து அவரிடம் இருந்து 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    சப்- இன்ஸ்பெக்டர் பாண்டியன் கொங்கலாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்ட போது அங்கு மதுவிற்ற கணேசன் (31) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 8 மதுபாட் டில்களை பறிமுதல் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சிராஜுதீன் சிறுகுளம் பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்ட போது அங்கு மதுவிற்ற ராஜேந்திரன் (41) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 18 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    வெம்பக்கோட்டை சந்திப்பு பகுதியில் மது விற்றதாக கருப்பசாமி (44) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 12 மதுபாட்டில்களை டவுன் போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் காசிராஜன் அம்பலார்மடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு மதுவிற்ற முத்துசெல்வம் (22) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 248 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இருக்கன்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் ஸ்டீபன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முத்தார்பட்டி பஸ் ஸ்டாப் அருகே வைத்து மதுவிற்ற அதேகிராமத்தை சேர்ந்த கருப்பையா (வயது 29), இருக்கன்குடியில் மது விற்ற கார்த்திகேயன் (35), முத்துசாமியாபுரம் பகுதியி்ல மது விற்ற மாரிமுத்து (29) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராகிம் தலைமையில் போலீசார் ரோந்து சென்ற போது கிருஷ்ணன் கோவில் அருகில் வைத்து மதுவிற்ற கருப்பசாமி (40), வீரபாண்டியபுரம் பகுதியில் மது விற்ற மேட்டமலையை சேர்ந்த கந்தசாமி (45) ஆகியோரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர். சாத்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்பெக்டர் சுந்தரராஜ் மற்றும் போலீசார், சிவராஜ் (57) என்பவரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் கையெழுத்திட்ட 5 உத்தரவுகளில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் போக்குவரத்துக்கழக பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் செய்வதற்கான உத்தரவும் ஒன்றாகும்.
    விருதுநகர்:

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற உடன் கையெழுத்திட்ட 5 உத்தரவுகளில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் போக்குவரத்துக்கழக பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் செய்வதற்கான உத்தரவும் ஒன்றாகும்.

    அந்த வகையில் போக்குவரத்து கழக பஸ்களில் பெண்கள் இலவச பயணம் செய்வதற்கான உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் 118 போக்குவரத்துக்கழக சாதாரண கட்டண டவுன் பஸ்களில் நேற்று அதிகாலை முதலே பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    அதிலும் குறிப்பாக கிராமங்களில் இருந்து வரும் பெண்கள் இந்த உத்தரவினால் பெரும் பயனடையும் நிலை இருந்தது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    நேற்று முன்தினமே போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு இதுபற்றி சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. மேலும் நேற்று காலை டவுன் பஸ்கள் புறப்படும் போதே பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு இதுகுறித்து உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. ஆதலால் பெண்கள் இலவச பயணம் மேற்கொண்ட நிலையில் எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை.

    ஆனாலும் இந்த உத்தரவால் எத்தனை பேர் பயனடைந்தார்கள் என்ற கணக்கு தெரிய வாய்ப்பில்லை. அதற்கான அடையாள அட்டை அல்லது பஸ்பாஸ் வழங்கினால் தான் அது பற்றிய கணக்கு தெரியவரும். அதுபற்றி அரசு எந்த அறிவுறுத்தல் வழங்கப்படாத நிலையில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு டிக்கெட் ஏதும் வழங்கப்படவில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    விருதுநகர் அருகே உள்ள குளத்தூர் குளம் கிராமத்தில் இருந்து விருதுநகர் பகுதியில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை பார்ப்பதற்காக வரும் செல்வி, மாரீஸ்வரி என்ற 2 பெண்கள் கூறியதாவது:-

    வீட்டு வேலை மூலம் மாதம் ரூ.5000 வரை ஊதியம் பெறும் நிலையில் பஸ்சுக்காக மட்டும் மாதம் ரூ. 800 வரை செலவழிக்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது அந்த தொகை தங்களுக்கு மீதமாகும் நிலையில் பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறியதோடு இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

    ஒரு போக்குவரத்து கழக டவுன் பஸ்சில் பயணம் செய்த 55 பயணிகளில் 38 பேர் இலவசமாக பெண்கள் பயணம் செய்ததாக நடத்துனர் ஒருவர் தெரிவித்தார்.

    சாதாரண கட்டண டவுண் பஸ்களில் மகளிர் இலவசபயணம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. மேலும் போக்குவரத்து கழக பஸ்களில் அரசு விதிமுறையை மீறி பயணிகளை நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கும் நிலையும் பஸ் படிக்கட்டு வரை பயணிகள் நின்றுகொண்டு பயணம்செய்ய அனுமதிக்கும்நிலை இருந்தது.

    விருதுநகரிலிருந்து வத்திராயிருப்பு சென்ற போக்குவரத்து கழக பஸ்களில் படிக்கட்டில் நின்று கொண்டு பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர் இதேபோன்று பல பஸ்களில் விதிமுறைகளை மீறி பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். எனவே இதனால் நோய் பரவல் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். எனவே போக்குவரத்துக்கழக நிர்வாகத்தினர் பஸ்களில் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி 50 சதவீத பணிகளை பயணிக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    அருப்புக்கோட்டை அருகே குடும்ப பிரச்சினையில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    விருதுநகர்:

    அருப்புக்கோட்டை அருகே உள்ள போடம்பட்டியை சேர்ந்தவர் சங்கரம்மாள் (வயது 58). இவரது நான்காவது மகள் முத்துராதேவி (29). கடந்த 11 வருடங்களுக்கு முன்பு அருப்புக்கோட்டையை சேர்ந்த செந்தில்வேல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட முத்துராதேவி கணவருடன் வாழ்ந்து வந்தார்.

    இந்நிலையில் திருமணமாகி ஒன்றரை வருடத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில் செந்தில்வேல், முத்துராதேவியை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். முத்துராதேவி குழந்தையுடன் தனது தாயார் சங்கரம்மாள் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு முத்துராதேவி மத்திய சேனையை சேர்ந்த கருப்பசாமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவருடன் மத்திய சேனையில் வசித்து வந்தார். கருப்பசாமி மது குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிய நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை வந்தது. சம்பவத்தன்று கருப்பசாமி குடித்துவிட்டு வந்த நிலையில் முத்துராதேவி இரவு தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

    பலத்ததீக்காயங்களுடன் முத்துரா தேவியை அவரது கணவர் கருப்பசாமியும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி சங்கரம்மாள் கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    சாத்தூர் அருகே கடந்த 7 நாட்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் அடுத்தடுத்து பலியான சம்பவத்தால் கிராமத்தில் கொரோனா நோய்த்தொற்று பலருக்கும் ஏற்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது சல்வார்பட்டி கிராமம். இங்கு 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் மற்றும் பட்டாசு ஆலைகளில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து 7 ஆண்கள், 3 பெண்கள் என 10 பேர் மர்மமான முறையில் இறந்துள்ளனர்.

    இதனால் அந்த கிராம மக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததாகக் கூறப்படுகிறது.

    இதில் ஒருவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இறந்துள்ளார். எனவே அந்த கிராமத்தில் கொரோனா நோய்த்தொற்று பலருக்கும் ஏற்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

    இது குறித்த தகவல் கிடைத்ததும் மாவட்ட சுகாதாரத்துறையின் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சல்வார்பட்டி கிராமத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

    இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    தொடர்ந்து கிராமம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வந்தால்தான் வேறு யாருக்கும் கொரோனா நோய் தொற்று இருக்கிறதா? என்ற விவரங்கள் தெரிய வரும்.

    இருப்பினும் சல்வார்பட்டி கிராமத்தில் சுகாதாரதுறையினர் முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 21,270 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    மாவட்டத்தில் மேலும் 237 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 21,270 ஆக உயர்ந்துள்ளது. 19,299 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 1697 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவருவதோடு வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளனர். நோய் பாதிப்புக்கு இதுவரை 248 பேர் பலியாகி உள்ளனர். 237 பேர் நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    விருதுநகர் பகுதியில் கன்னிசேரி புதூர் வெள்ளூர் முத்துராமன்பட்டி அரசு ஆஸ்பத்திரி செவிலியர் பயிற்சி பள்ளி, வ.உ.சி. நகர், கே. கே.எஸ்.எஸ்.என். நகர், காந்திபுரம் தெரு, என்.ஜி.ஒ. காலனி, அல்லம்பட்டி, முத்துராமன்பட்டி, புல்லலக்கோட்டை கண்ணதாசன் தெரு, லட்சுமி நகர், பிபிரோடு, சண்முகம் தெரு, தங்கமணி காலனி, மணிநகரம், செந்தி விநாயகபுரம் தெரு, ஆனைக்குழாய் தெரு, கந்தபுரம்தெரு, லட்சுமிநகர், கருப்பசாமிநகர், ரோசல்பட்டி ரோடு, மல்லி கிட்டங்கி தெரு, கசாப்புக் காரர் தெரு, ஆர். ஆர். நகர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் 25 பேர் மற்றும் குப்பாம்பட்டி, கன்னிசேரி புதூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சிவகாசி ஆலமரத்துப்பட்டி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, பந்தல்குடி, சாத்தூர், நரிக்குடி, திருச்சுழி, மறவர் ெபருங்குடி, பூலாங்கால், எம்.ரெட்டியபட்டி, தும்முசின்னம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
    ×