என் மலர்tooltip icon

    விருதுநகர்

    மாவட்டத்தில் மேலும் 547 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 27,095 ஆக உயர்ந்து உள்ளது.
    விருதுநகர்:

    மாவட்டத்தில் மேலும் 547 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 27,095 ஆக உயர்ந்து உள்ளது.

    22,926 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3,815 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 7 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 294 ஆக உயர்ந்துள்ளது.

    அரசு ஆஸ்பத்திரிகளில் 916 படுக்கைகள் உள்ள நிலையில் 775 படுக்கைகளில் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 121 படுக்கைகள் காலியாக உள்ளன.

    சிகிச்சை மையங்களில் 1450 படுக்கைகள் உள்ள நிலையில் 666 படுக்கைகளில் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 684 படுக்கைகள் காலியாக உள்ளன. விருதுநகர் கணேஷ் நகர், ஆர்.வி.ஆர். நகர், அல்லம்பட்டி, அம்பேத்கர் தெரு, ஆர்.ஆர்.நகர், சேடப்பட்டி, ஆனைக்குழாய்தெரு, ரோசல்பட்டி உள் தெரு, ஆர்.எஸ்.நகர், மோகன் ராஜேஷ் காலனி, சத்திர ரெட்டியபட்டி, வள்ளியூர் வடமலைக்குறிச்சி, பெரிய பள்ளிவாசல் தெரு, கந்தபுரம்தெரு, லட்சுமி காலனி, பெரியவள்ளிகுளம், புல்லலக்கோட்டை ரோடு, கட்டையாபுரம், முத்தால்நகர், பேராசிரியர் காலனி, என்.ஜி.ஓ. காலனி, நீதிபதிகள் குடியிருப்பு, சூலக்கரைமேடு, செவல்பட்டி, பழைய ெரயில்வே காலனி உள்ளிட்ட பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் மல்லாங்கிணறு, நரிக்குடி, திருச்சுழி, சாத்தூர், மேட்டமலை, அருப்புக்கோட்டை, பரளச்சி, முத்தநேரி, இலந்தைகுளம், சிவகாசி, திருத்தங்கல், எம்.புதுப்பட்டி, வெம்பக்கோட்டை, பள்ளிமடம், மேலத்துலுக்கன்குளம், நடுவப்பட்டி, ராஜபாளையம், சேத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராமச்சந்திராபுரம், மம்சாபுரம், மகாராஜபுரம், சேத்தூர், காரியாபட்டி, பாலையம்பட்டி, பந்தல்குடி, பனைக்குடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அரசு தலைமை மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
    வத்திராயிருப்பு:

    நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அரசு தலைமை மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து தலைமை மருத்துவர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    கொரோனா நோய் தொற்றின் காரணமாக நமது பகுதியில் சிகிச்சை அளிப்பதற்காக தனியார் கல்லூரியில் படுக்கைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைப்போல் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகள் அமைக்கப்பட்டு கொரோனா வார்டு தயார்நிலையில் உள்ளது. இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு உள்ளது. போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பு மருத்துவமனையில் உள்ளதால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு தடையின்றி சிகிச்சை அளிக்க போதிய வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
    கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
    சாத்தூர்:

    சாத்தூரில் கொரோனா தடுப்பு பணி குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கலெக்டர் கண்ணன் முன்னிலை வகித்தார். சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன், யூனியன் சேர்மன் நிர்மலா கடற்கரை ராஜ், சிவகாசி சுகாதார மாவட்ட துணை இயக்குனர் கலு சிவலிங்கம், இந்திய மருத்துவர் சங்கம் விருதுநகர் மாவட்ட செயலாளர் மருத்துவர் அறம், சாத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், மற்றும் சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், தாசில்தார் வெங்கடேஷ், நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம், தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை ராஜ், முருகேசன், நகர செயலாளர் குருசாமி, மற்றும் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கு பிறகு கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக 150 படுக்கை வசதிகள் கொண்ட சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம். கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவபடுக்கை வசதிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், கலெக்டர் கண்ணன், சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    மாவட்டம் முழுவதும் தொகுதி வாரியாக ஆய்வு பணிகளை மாவட்ட கலெக்டருடன் சேர்ந்து செய்து வருகிறோம். தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன் மாவட்டம் முழுவதும் தயாராக உள்ளது.

    அரசு மருத்துவமனைக்கு வருகிற நோயாளிகளுக்கு இடம் இல்லை என்று சொல்லாத அளவிற்கு அனைத்து மருத்துவமனைகளிலும் இடவசதி தேவையான ஆக்சிஜன் வசதிகளை மாவட்ட கலெக்டர் செய்து வருகிறார்.

    சாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் சுமார் 150 படுக்கை வசதிகளுடன் கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

    கொரோனாவில் மருத்துவர்களின் பணி சிறப்பாக இருக்கிறது.

    வருகிற 24-ந் தேதிக்கு பிறகு நோயின் தாக்கம் குறைந்தால் ஊரடங்கு நீட்டிப்பு இருக்காது. இருப்பினும் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவெடுப்பார்.

    இந்த ஊரடங்கினால் அன்றாட வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே மக்கள் தாமாகவே முன்வந்து கொரோனா குறித்து தமிழக அரசு அறிவித்த விதிமுறைகளை முறையாக பின்பற்றினால் கொரோனா பரவலை எளிதில் கட்டுப்படுத்தலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி வாங்க மக்கள் அதிகமாக கூடுவதால் சமூக இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    ராஜபாளையம்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி ரேஷன்கார்டுதாரர்களுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக முன் கூட்டியே டோக்கன் வழங்கப்பட்டு குறிப்பிட்ட தேதி, நாளில் வந்து கொரோனா நிவாரண நிதி பெற்றுக்கொள்ளலாம் என கூறப்படுகிறது.

    ஆனாலும் பெரும்பாலான ரேஷன் கடைகளில் நிவாரண தொகையை பெற வரும் மக்களுக்கு கொரோனா பரவல் குறித்து சரியான புரிதல் இல்லாத நிலையில், வழிகாட்டுதலுக்கு முறையான அலுவலர்களும் இல்லாத காரணத்தால் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தனி மனித இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று நிவாரண நிதியை பெற்றுச் செல்கின்றனர். இதனால் ஊழியர்கள் மிகுந்த அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர்.

    ராஜபாளையத்தில் உள்ள சில ரேஷன் கடைகளில் தனிமனித இடைவெளி என்பது பெயரளவுக்கு கூட இல்லாத நிலை காணப்பட்டது. ஒரு கடையில் ஒரே ஒரு பெண் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அதனால் திரண்டிருந்த கூட்டத்தை அவர் கட்டுப்படுத்த முடியாமல் திணறியதை பார்க்க முடிந்தது.

    எனவே கொரோனா மிக தீவிரமாக பரவி வரும் இச்சூழலில் ரேஷன் கடைகளில் தனிமனித இடைவெளியை முறையாக கடைபிடிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 26 ஆயிரத்து 668 ஆக உயர்ந்தது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் பலியாகினர். மேலும் 328 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 26 ஆயிரத்து 668 ஆக உயர்ந்தது. நேற்று 350 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இவர்களையும் சேர்த்து 22 ஆயிரத்து 254 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

    தற்போதைய நிலையில் 4 ஆயிரத்து 16 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    நேற்று நோய் பாதிப்புக்கு நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 287 ஆக உயர்ந்துள்ளது. இம்மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி அரசு ஆஸ்பத்திரியில் 159 படுக்கைகளும், சிகிச்சை மையங்களில் 684 படுக்கைகளும் காலியாக உள்ளன. நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    விருதுநகர் கே.ஆர்.கார்டன், மாத்திநாயக்கன்பட்டி, கூரைக்குண்டு, சங்கரலிங்கபுரம், அரசு ஆஸ்பத்திரி, பாண்டியன் நகர், ரோசல்பட்டி, கச்சேரி ரோடு, சூலக்கரை, பெரியவள்ளிகுளம், ஆர்.ஆர்.நகர், பேராலி ரோடு, அல்லம்பட்டி, முத்துராமன்பட்டி, பெரிய பள்ளிவாசல் தெரு, என்.ஜி.ஓ. காலனி, லட்சுமி நகர், பெத்தனாட்சி நகர், கருப்பசாமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் ராஜபாளையம், சேத்தூர், முகவூர், வத்திராயிருப்பு, மகாராஜபுரம், நத்தம்பட்டி, ராமச்சந்திராபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, திருத்தங்கல், எம். புதுப்பட்டி, திருச்சுழி, எம்.ரெட்டியபட்டி, காரியாபட்டி, மல்லாங்கிணறு, மேட்டுப்பட்டி, நரிக்குடி, வீரசோழன் உள்ளிட்ட பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    நேற்றைய நிலையில் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு 10 ஆக்சிஜன் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் இன்றும் 10 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவைப்படும் நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சிவகாசியில் தற்காலிக மார்க்கெட் பஸ்நிலையத்தில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    சிவகாசி:

    கொரோனா பரவல் காரணமாக சிவகாசியில் இயங்கி வந்த அண்ணாகாய்கறி மார்க்கெட் அண்ணாமலை-உண்ணாமலை நகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும், உழவர்சந்தையிலும் அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து அதற்கான ஆரம்ப கட்ட பணிகளை செய்தது.

    இந்த நிலையில் சிவகாசியில் கடந்த 3 நாட்களாக மழை விட்டு, விட்டு பெய்ததால் அண்ணாமலை-உண்ணாமலை பள்ளி மைதானத்தில் மழைநீர் தேங்கி அங்கு தற்காலிக காய்கறிகடை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று சிவகாசி நகராட்சி நிர்வாகம் தற்காலிக மார்க்கெட்டை சிவகாசி பஸ் நிலையத்துக்கு மாற்றிக்கொள்ள அனுமதி வழங்கி உள்ளது.

    இந்தநிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் தற்காலிக மார்க்கெட் பஸ் நிலையத்திலும், உழவர்சந்தையிலும் இயங்கும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்காக நகராட்சி ஊழியர்கள் நேற்று காலை பஸ் நிலையத்தை சுத்தப்படுத்தி அங்கு 70 வியாபாரிகள் கடை நடத்த வசதியாக இடம் ஒதுக்கி அடையாளப்படுத்தி சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு உரிய தகவல் தெரிவித்தனர்.

    பஸ் நிலையத்தில் இடம் ஒதுக்கப்பட்ட வியாபாரிகள் மட்டும் பஸ் நிலையத்தில் வியாபாரம் செய்யலாம். மற்றவர்கள் உழவர்சந்தையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மார்க்கெட்டில் வியாபாரம் செய்யலாம் என்று நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்
    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 439 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 26,330 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    21,909 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 4,194 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதுடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 284 ஆக உயர்ந்துள்ளது.

    மாவட்டத்தில் 693 கொரோனா சிகிச்சை படுக்கை கள் காலியாக உள்ளன. விருதுநகர் சங்கரலிங்கபுரம், பெத்தனாட்சி நகர், தாதம்பட்டி, ஒண்டிப்புலி, முதலிப்பட்டி, சூலக்கரை, ஆவுடையாபுரம், சின்ன வள்ளி குளம், பாண்டியன் நகர், என்.ஜி.ஓ. காலனி, ஆர்.எஸ். நகர், எம்.ஜி.ஆர். நகர், முத்துராமன் பட்டி, அல்லம்பட்டி, புறவழிச்சாலை, அழகாபுரி, பாலாஜி நகர், நக்கீரர்தெரு, கந்தபுரம் தெரு, ராமமூர்த்திரோடு, அரசு ஆஸ்பத்திரி, மாவட்ட போலீஸ் அலுவலகம், மாடர்ன்நகர், கத்தாளம்பட்டி, நிறைவாழ்வு நகர், சின்ன பள்ளிவாசல் தெரு, சின்ன வள்ளி குளம், முத்துராமன் பட்டி, கத்தாளம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் சாத்தூர் வேப்பிலைப்பட்டி, செம்பட்டி, கரிசல்குளம், மலைப்பட்டி, மம்சாபுரம், ஆராய்ச்சி பட்டி, புதூர், கோட்டையூர், ராஜபாளையம், சேத்தூர், தேசிகாபுரம், வத்திராயிருப்பு, ராமச்சந்திராபுரம், துலுக்கப்பட்டி, முகவூர், மேட்டுப்பட்டி, நத்தத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் பரவலாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மாநிலப்பட்டியலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 439 என குறிப்பிடப்பட்டுள்ள மாவட்ட பட்டியலில் 624 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த முரண்பாடு ஏன் என்று தெரியவில்லை. தொடர்ந்து ஏற்பட்டு வரும் இந்த எண்ணிக்கை முரண்பாடுகள் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 570 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 25,866 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 570 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 25,866 ஆக உயர்ந்துள்ளது.

    21,607 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் 3,999 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் நோய் பாதிப்புக்கு 3 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 281 ஆக உயர்ந்து உள்ளது.

    மாவட்டத்தில் 462 ஆக்சிஜன் சிகிச்சை படுக்கைகளும், 368 ஆக்சிஜன் இல்லாத படுக்கைகளும், 111 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளும் உள்ளன.

    இதில் 430 ஆக்சிஜன் படுக்கைகளிலும், 129 ஆக்சிஜன் இல்லாத படுக்கைகளிலும், 93 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய நிலையில் 89 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன. கொரோனா சிகிச்சை மையங்களில் 1281 படுக்கைகள் உள்ள நிலையில் 498 படுக்கைகளில் கொரோனா பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    783 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன. விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி, போலீஸ் குடியிருப்பு, கலைஞர் நகர், செங்குன்றாபுரம், ஆனைக்குழாய்தெரு, அண்ணாமலை செட்டியார் தெரு, அகமதுநகர், லட்சுமி நகர், மேல பாண்டியன் காலனி, ராமமூர்த்தி ரோடு, ஆர். எஸ். ஆர். நகர், சூலக்கரை, குருசாமி கொத்தன்தெரு, பெருமாள் கோவில் தெரு, கட்டையாபுரம், அல்லம்பட்டி, பாண்டியன் நகர், கருப்பசாமி நகர், கூரைக்குண்டு, பெத்தனாட்சி நகர், கே.ஆர்.கார்டன், ராஜாஜி நகர், ஐ.சி.ஏ.காலனி, சங்கரலிங்கபுரம், ஓ. கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    அருப்புக்கோட்டை, புளியம்பட்டி, வி.புதூர், மேல கண்டமங்கலம், செட்டிகுறிச்சி, மலைப்பட்டி, பாண்டியன் நகர், காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, வீரசோழன், புளியம்பட்டி, வடுககோட்டை, திருநகரம், பரளச்சி, துலுக்கன்குளம், அயன் ரெட்டியபட்டி, மல்லாங்கிணறு, மாரனேரி, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு, திருத்தங்கல், சாத்தூர் உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக பாதிப்பு உள்ளது.
    அருப்புக்கோட்டையில் கொரோனா நிவாரண நிதி உதவியை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
    அருப்புக்கோட்டை:

    முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.

    அதன்படி அருப்புக்கோட்டையில் நேரு மைதானம், திருநகரம் மற்றும் பாலவநத்தம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நிவாரண நிதி உதவிகளை வழங்கினார்.

    பயனாளிகள் முக கவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியை பின்பற்றியும் நிவாரண நிதியை பெற்று சென்றனர்.

    இதில் கலெக்டர் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், தாசில்தார் ரவிச்சந்திரன், முன்னாள் நகர்மன்றத்தலைவர் சிவபிரகாசம், தி.மு.க. நகரசெயலாளர் ஏ.கே. மணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபுஜி, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அதேபோல ஆலங்குளத்தில் வெம்பக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் சசிகலா தலைமையில் கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆலங்குளம் வருவாய் அலுவலர் பொன்மாரியப்பன் முன்னிலை வகித்தார். இதற்கான ஏற்பாடுகளை ரேஷன் கடை விற்பனையாளர் பொன்ராஜ் செய்து இருந்தார்.

    சாத்தூர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் நேற்று மட்டும் 11 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக சாத்தூர் வட்டார வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் கூறினார்.

    வத்திராயிருப்பு பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் நடைபெற்ற கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் முனியாண்டி, நகர செயலாளர் முனியாண்டி, ஒன்றிய கவுன்சிலர் கண்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் கோவிந்தன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 623 பேருக்கு கொரோனாபாதிப்பு உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 25,314 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    மாவட்டத்தில் மேலும் 623 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பலி எண்ணிக்கை 278 ஆக உயர்ந்துள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 623 பேருக்கு கொரோனாபாதிப்பு உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 25,314 ஆக உயர்ந்துள்ளது.

    21,205 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3,832 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    கொரோனா பாதிப்புக்கு மேலும் 5 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 278 ஆக உயர்ந்துள்ளது.

    மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் உதவியுடனான படுக்கைகள் 477, ஆக்சிஜன் இல்லாத படுக்கைகள் 338, தீவிர சிகிச்சை பிரிவில் 116 படுக்கைகள் உள்ள நிலையில் ஆக்சிஜன் படுக்கைகள் 419, ஆக்சிஜன் இல்லாத படுக்கைகள் 224, தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் 96 ஆகியவற்றில் சிகிச்சைக்காக நோய் பாதிப்பு அடைந்தோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தற்போதுள்ள நிலையில் மாவட்டத்தில் 58 படுக்கைகள் மட்டுமே அரசு ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ளன.

    மேலும் கொரோனா சிகிச்சை மையங்களில் 1,254 படுக்கைகள் உள்ள நிலையில் 366 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    858 படுக்கைகள் காலியாக உள்ளன. விருதுநகர் லட்சுமி நகர், சுப்பையா பிள்ளை தெரு, அகதிகள் முகாம், வில்லி பத்திரி, செவல்பட்டி, நேருஜி நகர், அகமதுநகர், அல்லம்பட்டி, ஆர்.வி.ஆர். நகர், அம்பேத்கார்தெரு, பெரியசாமி திரு மாணிக்கம் மகால், பாண்டியன் நகர், ஆர்.எஸ்.நகர், பெத்தனாட்சிநகர், ராமமூர்த்தி ரோடு, மேற்கு பாண்டியன் காலனி, சாஸ்திரி நகர், ஆவுடையாபுரம், என்.ஜி.ஓ. காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நோய் பாதிப்பு பரவலாக ஏற்பட்டுள்ளது.

    தொடர்ந்து மாவட்ட, மாநில பாதிப்படைந்தோர் பட்டியல்களில் முரண்பாடு உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் முரண்பாடுகளை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    நோய் தொற்று உள்ளவர்கள் வீட்டில் தனிமையில் இல்லாமல் வெளியில் சுற்றி வருவதால் பல மடங்கு பரவி வருவதாக தெரியவந்துள்ளது.

    பாலையம்பட்டி:

    அருப்புக்கோட்டை நகர, ஒன்றிய பகுதியில் கொரோனா நோய் தடுப்பு குறித்து அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களிடம் கூட்டம் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கலெக்டர் கண்ணன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கல ராமசுப்பிரமணியன், தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அரசு மருத்துவர்கள், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ஆகியோருடன் கொரோனா தடுப்பு குறித்து கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

    கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆக்சிஜன் சிலிண்டர்கள்

    கடந்த ஒரு வார காலமாக அருப்புக்கோட்டை நகர் மற்றும் ஒன்றிய பகுதியில் நடத்திய ஆய்வில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் உயிர் பலியும் அதிகமாக இருந்து வருகிறது.

    இதனை தடுக்க அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நோய் தொற்று உள்ளவர்கள் வீட்டில் தனிமையில் இல்லாமல் வெளியில் சுற்றி வருவதால் பல மடங்கு பரவி வருவதாக தெரியவந்துள்ளது.

    இதனை கட்டுப்படுத்த கொரோனா நோய் கண்டறியப்பட்ட வீடுகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு அவர்கள் வெளியே செல்லாதவாறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் தடுப்பூசி போடாதவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    முழு ஊரடங்கின்போது தேவையில்லாமல் வாகனங்களில் சுற்நுபவர்களை கண்டறிந்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு அரசு சுகாதாரத்துறை மருத்துவர்கள் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    அனைத்து அரசு அலுவலர்களும் ஒன்றிணைந்து அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றை தடுக்கவும், நோய் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாக்கவும் தமிழக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 564 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 24,688 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 564 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 24,688 ஆக உயர்ந்துள்ளது.

    21,117 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3,299 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 3 பேர் பலியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.

    மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 485 ஆக்சிஜன் கொரோனா சிகிச்சை படுக்கைகளும், 307 ஆக்சிஜன் இல்லாத சிகிச்சை படுக்கைகளும், 105 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளும் உள்ள நிலையில் 441 ஆக்சிஜன் படுக்கைகளும், 168 ஆக்சிஜன் இல்லாத படுக்கைகளும், 95 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளும கொரோனா பாதிப்படைந்தோருக்கு தரப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 193 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளது.

    கொரோனா சிகிச்சை மையங்களில் 1138 படுக்கைகள் உள்ள நிலையில் 433 படுக்கைகளில் பாதிப்படைந்து அனுமதிக்கப்பட்டுள்ளனர். 705 படுக்கைகள் காலியாக உள்ளன.

    விருதுநகர் கே.கே.எஸ்.எஸ்.என்.நகர், இனாம் ரெட்டியப்பட்டி, ராமகுடும்பன்பட்டி, வீரபத்திரன் தெரு, லட்சுமி நகர், பெரியவள்ளிகுளம், பட்டம்புதூர், அல்லம்பட்டி, பேராளி ரோடு, என்.ஜி.ஓ. காலனி, சங்கரலிங்கபுரம், கூரைக்குண்டு, பாரப்பட்டி தெரு, ராமச்சந்திரன் தெரு, பி.சி.கே.பெரியசாமி தெரு, அனுமன் நகர், பராசக்தி நகர், பாண்டியன் நகர், வ.உ.சி. நகர், அரசு ஆஸ்பத்திரி, பெத்தனாட்சி நகர், அல்லம்பட்டி, முத்துராமன் பட்டி, ஆமத்தூர், கருப்பசாமி நகர், சாஸ்திரி நகர், ஏ.எஸ்.எஸ்.எஸ்.எஸ். ரோடு, கட்டையா புரம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் காரியாபட்டி, நரிக்குடி, வீரசோழன், தச்சனேந்தல், நாங்கூர், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாட்சியாபுரம், திருத்தங்கல் உள்பட மாவட்டத்தில் பல்ேவறு பகுதிகளில் பரவலாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    ×