search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலி - மேலும் 328 பேருக்கு நோய் தொற்று

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 26 ஆயிரத்து 668 ஆக உயர்ந்தது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் பலியாகினர். மேலும் 328 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 26 ஆயிரத்து 668 ஆக உயர்ந்தது. நேற்று 350 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இவர்களையும் சேர்த்து 22 ஆயிரத்து 254 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

    தற்போதைய நிலையில் 4 ஆயிரத்து 16 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    நேற்று நோய் பாதிப்புக்கு நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 287 ஆக உயர்ந்துள்ளது. இம்மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி அரசு ஆஸ்பத்திரியில் 159 படுக்கைகளும், சிகிச்சை மையங்களில் 684 படுக்கைகளும் காலியாக உள்ளன. நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    விருதுநகர் கே.ஆர்.கார்டன், மாத்திநாயக்கன்பட்டி, கூரைக்குண்டு, சங்கரலிங்கபுரம், அரசு ஆஸ்பத்திரி, பாண்டியன் நகர், ரோசல்பட்டி, கச்சேரி ரோடு, சூலக்கரை, பெரியவள்ளிகுளம், ஆர்.ஆர்.நகர், பேராலி ரோடு, அல்லம்பட்டி, முத்துராமன்பட்டி, பெரிய பள்ளிவாசல் தெரு, என்.ஜி.ஓ. காலனி, லட்சுமி நகர், பெத்தனாட்சி நகர், கருப்பசாமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் ராஜபாளையம், சேத்தூர், முகவூர், வத்திராயிருப்பு, மகாராஜபுரம், நத்தம்பட்டி, ராமச்சந்திராபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, திருத்தங்கல், எம். புதுப்பட்டி, திருச்சுழி, எம்.ரெட்டியபட்டி, காரியாபட்டி, மல்லாங்கிணறு, மேட்டுப்பட்டி, நரிக்குடி, வீரசோழன் உள்ளிட்ட பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    நேற்றைய நிலையில் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு 10 ஆக்சிஜன் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் இன்றும் 10 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவைப்படும் நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×