search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 570 பேருக்கு கொரோனா

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 570 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 25,866 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 570 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 25,866 ஆக உயர்ந்துள்ளது.

    21,607 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் 3,999 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் நோய் பாதிப்புக்கு 3 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 281 ஆக உயர்ந்து உள்ளது.

    மாவட்டத்தில் 462 ஆக்சிஜன் சிகிச்சை படுக்கைகளும், 368 ஆக்சிஜன் இல்லாத படுக்கைகளும், 111 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளும் உள்ளன.

    இதில் 430 ஆக்சிஜன் படுக்கைகளிலும், 129 ஆக்சிஜன் இல்லாத படுக்கைகளிலும், 93 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய நிலையில் 89 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன. கொரோனா சிகிச்சை மையங்களில் 1281 படுக்கைகள் உள்ள நிலையில் 498 படுக்கைகளில் கொரோனா பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    783 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன. விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி, போலீஸ் குடியிருப்பு, கலைஞர் நகர், செங்குன்றாபுரம், ஆனைக்குழாய்தெரு, அண்ணாமலை செட்டியார் தெரு, அகமதுநகர், லட்சுமி நகர், மேல பாண்டியன் காலனி, ராமமூர்த்தி ரோடு, ஆர். எஸ். ஆர். நகர், சூலக்கரை, குருசாமி கொத்தன்தெரு, பெருமாள் கோவில் தெரு, கட்டையாபுரம், அல்லம்பட்டி, பாண்டியன் நகர், கருப்பசாமி நகர், கூரைக்குண்டு, பெத்தனாட்சி நகர், கே.ஆர்.கார்டன், ராஜாஜி நகர், ஐ.சி.ஏ.காலனி, சங்கரலிங்கபுரம், ஓ. கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    அருப்புக்கோட்டை, புளியம்பட்டி, வி.புதூர், மேல கண்டமங்கலம், செட்டிகுறிச்சி, மலைப்பட்டி, பாண்டியன் நகர், காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, வீரசோழன், புளியம்பட்டி, வடுககோட்டை, திருநகரம், பரளச்சி, துலுக்கன்குளம், அயன் ரெட்டியபட்டி, மல்லாங்கிணறு, மாரனேரி, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு, திருத்தங்கல், சாத்தூர் உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக பாதிப்பு உள்ளது.
    Next Story
    ×