என் மலர்
செய்திகள்

ரேஷன் கடையில் நிவாரண நிதி பெற நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.
ரேஷன் கடைகளில் மாயமாகும் சமூக இடைவெளி - நடவடிக்கை எடுக்கப்படுமா?
ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி வாங்க மக்கள் அதிகமாக கூடுவதால் சமூக இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம்:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி ரேஷன்கார்டுதாரர்களுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக முன் கூட்டியே டோக்கன் வழங்கப்பட்டு குறிப்பிட்ட தேதி, நாளில் வந்து கொரோனா நிவாரண நிதி பெற்றுக்கொள்ளலாம் என கூறப்படுகிறது.
ஆனாலும் பெரும்பாலான ரேஷன் கடைகளில் நிவாரண தொகையை பெற வரும் மக்களுக்கு கொரோனா பரவல் குறித்து சரியான புரிதல் இல்லாத நிலையில், வழிகாட்டுதலுக்கு முறையான அலுவலர்களும் இல்லாத காரணத்தால் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தனி மனித இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று நிவாரண நிதியை பெற்றுச் செல்கின்றனர். இதனால் ஊழியர்கள் மிகுந்த அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
ராஜபாளையத்தில் உள்ள சில ரேஷன் கடைகளில் தனிமனித இடைவெளி என்பது பெயரளவுக்கு கூட இல்லாத நிலை காணப்பட்டது. ஒரு கடையில் ஒரே ஒரு பெண் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அதனால் திரண்டிருந்த கூட்டத்தை அவர் கட்டுப்படுத்த முடியாமல் திணறியதை பார்க்க முடிந்தது.
எனவே கொரோனா மிக தீவிரமாக பரவி வரும் இச்சூழலில் ரேஷன் கடைகளில் தனிமனித இடைவெளியை முறையாக கடைபிடிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

Next Story