என் மலர்
விருதுநகர்
வெம்பக்கோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கிராமங்களில் டாஸ்மாக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தாலும் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இதையடுத்து வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தலைமை காவலர் ராமகாளிதாஸ் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது செவல்பட்டி அருகே உள்ள கொட்டமடக்கிபட்டி கிராமத்தில் பெரியசாமி (வயது38) என்பவருக்கு சொந்தமான மாட்டுத்தொழுவத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ேசாதனை செய்து பார்த்த போது 15 அட்டைப்பெட்டியில் வைத்திருந்த 634 மதுபாட்டில்களை பறிமுதல் ெசய்து பெரியசாமியை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.1 லட்சம் என கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறி மற்றும் பலசரக்கு பொருட்களை கொண்டு சென்று சேர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டம் சிவகாசி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிவகாசி சப்- கலெக்டர் தினேஷ்குமார், அசோகன் எம்.எல்.ஏ., தாசில்தார் ராமசுப்பிரமணியன், யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ்மோகன், ராமராஜ், சுகா தாரத்துறை அதிகாரி ஜெயச்சந்திரன், என்ஜினீயர் நாராயண சாமி மற்றும் 54 பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சப்-கலெக்டர் தினேஷ்குமார் பேசியதாவது:-
சிவகாசி பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் சிகிச்சைக்கு இடம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்படும். எனவே கிராமப்புறங்களில் தற்போது வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்தவர்கள் தீவிரம் காட்ட வேண்டும். குறிப்பாக பஞ்சாயத்து தலைவர்கள் தங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு கொரோ னா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நோய்பாதிப்பு அதிகம் உள்ள பகுதியில் தடுப்புகள் ஏற்படுத்தி பொதுமக்கள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும்.
மருந்தகங்கள் இல்லாத கொத்தனேரி, ஈஞ்சார், செவளூர் பகுதியில் உள்ளவர்கள் அந்த கிராமத்தின் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று தேவையான மருந்துகளை வாங்கி கொள்ளலாம்.
பஞ்சாயத்து பகுதிகளில் தினமும் 40 பேருக்காவது பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது தான் நோய் பாதிப்பை கண்டறியமுடியும். கிருஷ்ணபேரி, ஆனையூர், செங்கமலநாச்சியார்புரம், நாரணாபுரம், விஸ்வநத்தம், பள்ளபட்டி, அய்யம்பட்டி. ஏ.துலுக்கப்பட்டி, சுந்தரராஜபுரம் ஆகிய பகுதியில் நோய் பாதிப்பு அதிகம் இருப்பதால் அங்கு கண்காணிப்பு பணிகளை பஞ்சாயத்து நிர்வாகங்கள் தீவிரப்படுத்த வேண்டும். ஒவ்வொரு பஞ்சாயத்து தலைவர்களும், தங்கள் பகுதியில் வசிக்கும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு வாகனங்கள் மூலம் காய்கறிகளை விற்பனை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக சிவகாசியில் 2 இடங்களில் தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொதுமக்களுக்கு காய்கறிகள் தனியாக விற்பனை செய்யப்படாது. சிவகாசி, திருத்தங்கல் நகராட்சி கமிஷனர்கள், சிவகாசி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கொடுக்கும் அடையாள கடிதம் கொண்டு வரும் வாகனங்களுக்கு மட்டும் காய்கறிகள் வழங் கப்படும்.
இதேபோல் சிவகாசி தாலுகா முழுவதும் 150 வாக னங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும்பட்சத்தில் அடுத்து வரும் நாட்களில் கூடுதல் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 703 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 31,811 ஆக உயர்ந்துள்ளது. 25,760 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 5,712 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு 5 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 340 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,187 படுக்கைகள் உள்ள நிலையில் 1,050 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 137 படுக்கைகள் காலியாக உள்ளன. சிகிச்சை மையங்களில் 1,686 படுக்கைகள் உள்ள நிலையில் 842 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 844 படுக்கைகள் காலியாக உள்ளன. நேற்றும் மொத்த பாதிப்பில் 70 சதவீதம் கிராமப்புறங்களிலேயே ஏற்பட்டு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் கிராமப்புறங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் கண்ணன் முன்னிலையில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரின் தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தளர்வுகள் அற்ற ஊரடங்கு காலத்தில் கொரோனா தடுப்பு பணிைய தீவிரப்படுத்துவதிலும், மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்வதிலும், கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். அந்தவகையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்கு மிகவும் முக்கியமானது ஆகும்.
உள்ளாட்சி பிரதிநிதிகள் அவர்களது பகுதியில் உள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பு விதிமுைறகளை பின்பற்ற வலியுறுத்துவதுடன், விதிமுறைகள் பின்பற்றப்படுவதையும் கண்காணிக்க வேண்டும்.
மேலும் பொதுமக்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
ஊரடங்கு காலத்தில் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் வினியோகம் செய்வது அவசியம் ஆகும்.
மேலும் ஊரடங்கு காலத்தில் தடுப்பூசி அதிக எண்ணிக்கையில் போடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
மாவட்டத்தில் தாலுகா அளவில் கொரோனா கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 8,600 மகளிர் சுய உதவிக்குழுக்களில் உறுப்பினர்களாக உள்ள 90 ஆயிரம் பேர் மற்றும் சேவை அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், தடுப்பு பணியிலும், சேவை பணியிலும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இவர்களின் முக்கிய பணியாக வீடு, வீடாக சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய ெபாருட்களை நியாயமான விலையில், தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
குறிப்பிட்ட பகுதிகளை கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும். இந்த பணியில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கண்காணிப்பு குழுவிடம் விளக்கம் கேட்கலாம்.
பணியில் அமர்த்தப்படும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும்.
ஊரடங்கு காலத்தில் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு முற்றிலுமாக குறையும் வகையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
ேமலும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
காய்ச்சல் முகாம்கள் நடத்த வேண்டிய பகுதிகளை அடையாளம் கண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றி கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், தங்கப்பாண்டியன், அசோகன், டாக்டர் ரகுராமன், தென்காசி எம்.பி. தனுஷ்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன், மக்கள் தொடர்பு அதிகாரி வெற்றி வேந்தன், சுகாதார துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 9 பேர் பலியாகினர்.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆதலால் பாதிப்பு எண்ணிக்கை 31,105 ஆக உயர்ந்துள்ளது.
அதில் 25,218 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 5,553 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் நோய் பாதிப்புக்கு நேற்று 9 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 335-ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 952 படுக்கைகள் உள்ள நிலையில் 859 படுக்கைகளில் நோய்பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 64 படுக்கைகள் காலியாக உள்ளன.
சிகிச்சை மையங்களில் 1,621 படுக்கைகள் உள்ள நிலையில் 771 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 850 படுக்கைகள் காலியாக உள்ளன.
விருதுநகர் ஆர்.சி. நகர், சிவானந்த நகர், என்.ஜி.ஓ. காலனி, பாண்டியன் நகர், ராஜாஜி நகர், காந்திநகர், அல்லம்பட்டி, குருசாமி கொத்தன் தெரு, பட்டம்புதூர், சூலக்கரை, வடமலைக்குறிச்சி, அண்ணாமலை தெரு, ஏ.ஏ. ரோடு, பேராளி ரோடு, லட்சுமி நகர், அரசு ஆஸ்பத்திரி, கருப்பசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் அருப்புக்கோட்டை, திருநகரம், கோவிலாங்குளம், வெம்பக்கோட்டை, மேல கோதை நாச்சியார்புரம், புள்ளக்கவுண்டன்பட்டி, வன்னியம்பட்டி, காரியாபட்டி, பெரிய ஓடைப்பட்டி, உப்பத்தூர், சின்னகாமன்பட்டி, சிதம்பரம் நகர், ஆலமரத்துப்பட்டி, பள்ளப்பட்டி, எம்.ரெட்டியப்பட்டி, முஸ்டக்குறிச்சி, வீரசோழன், வேடநத்தம், நத்தம்பட்டி, குன்னூர், ஆர்.ரெட்டியப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, திருத்தங்கல், சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜபாளையம்:
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்க பாண்டியன், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சிங்கராஜ் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:-
ராஜபாளையம் பகுதியில் முதலாவது தொற்றை விட 2-வது தொற்றில் அதிகமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை விரைவாக கவனித்து உரிய முன்னேற்பாடுகள் செய்து அவை முற்றிலும் தடுக்க அதிகாரிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்.
ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் உள்ள 130 படுக்கைகள் 200 படுக்கைகளாக மாற்றவும், கூடுதலாக ஒரு கல்லூரியில் 200 படுக்கை வசதிகள் அமைத்து சிறப்பு வார்டாக மாற்றவும் ஏற்பாடுகள் செய்யப்படும்.
தினசரி காய்கறி சந்தையில் அதிகமாக கூட்டம் கூடு வதை தவிர்க்கும் வகையில் தோட்டக்கலை துறை சார்பில் சென்ற ஆண்டு வாகனங்கள் ஏற்பாடு செய்து தெருத்தெருவாக காய்கறி விற்பனை நடத்தியதை போலவே இந்த ஆண்டும் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
இந்தியாவிலேயே அனைத்து கட்சிகள் அடங்கிய குழுவை அமைத்து ஆலோசனை நடத்திய பெருமை தமிழகத்தையே சேரும். தமிழகத்திலேயே கொரோனா இல்லாத மாவட்டமாக விருதுநகர் மாவட்டத்தை ஆக்குவதற்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பையும் தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
இதில் காவல்துறை, வருவாய்துறை, சுகாதாரத்துறை, நகராட்சி உள்பட பலர் பங்கேற்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் ஊரடங்கு விதிகளை மீறி தேவையின்றி சாலைகளில் சுற்றி திரிகின்றனர். இதனால் நாளுக்கு நாள் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் பள்ளி மைதானத்தில் இயங்கிவரும் தற்காலிக காய்கறி சந்தையில் நேற்று காலை துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் தலைமையில் போலீசார் மற்றும் நகராட்சி சுகாதாரத் துறையினர் முகாமிட்டு சந்தைக்கு முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்தனர். அத்துடன் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் கூறியதாவது:-
ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் பள்ளி மைதானத்தில் செயல்படும் 46 காய்கறி கடைக்காரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதேபோல முக கவசம் இல்லாமல் தேவையின்றி சுற்றி திரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ேதவையின்றி சாலைகளில் சுற்றி திரிபவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், கொரோனா பரிசோதனையும் இனி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள காரைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 25). இவரும், அதே பகுதியை சேர்ந்த பெண்ணும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் இவர் களது காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சுரேஷ்குமாரையும் அவர்கள் எச்சரித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் சுரேஷ்குமார் தனது காதலில் உறுதியாக இருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டை சேர்ந்தவர்கள் சம்பவத்தன்று சுரேஷ் குமாரை சரமாரியாக தாக்கி மிரட்டியதாக தெரிகிறது. இந்த தாக்குதலில் அவர் காயமடைந்தார்.
இதுதொடர்பாக சுரேஷ்குமார் போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து சுரேஷ் குமார் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். வளாகத்தில் நின்றிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
இதைப்பார்த்த போலீசார் அவரை உடனே விருது நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் சுரேஷ்குமார் விஷம் குடித்து இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தன்னை தாக்கிய காதலியின் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கணடித்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக சுரேஷ்குமார் போலீசில் தெரிவித்தார். இதன் அடிப்படையில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 795 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் ஒரே நாளில் 3 பேர் பலியாகி உள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இம்மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 28 ஆயிரத்து 497ஆக உயர்ந்துள்ளது. நேற்று 419 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இவர்களை சேர்த்து இதுவரை 23 ஆயிரத்து 774 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி 4 ஆயிரத்து 208 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 3 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளது.
இம்மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் மொத்தம் உள்ள 946 படுக்கைகளில் 828 படுக்கைகளில் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 118 படுக்கைகள் காலியாக உள்ளன. சிகிச்சை மையங்களில் உள்ள 1,459 படுக்கைகளில் 628 படுக்கைகளில் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 831 படுக்கைகள் காலியாக உள்ளன. இம்மாவட்டத்தில் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் சங்கரலிங்கபுரம், ஒண்டிப்புலி, ஆமத்தூர், ஆவுடையாபுரம், ராமமூர்த்தி ரோடு, பாண்டியன் நகர், என்.ஜி.ஓ காலனி, லட்சுமி நகர், ஆனிமுத்து பிள்ளையார் கோவில் தெரு, மேலத் தெரு, கந்தபுரம் தெரு, அகமதுநகர், ஏ.சி. சங்கரலிங்கம் தெரு, கம்மாபட்டி ராஜாக்கள் தெரு, கணேஷ் நகர், கசாப்புக்காரர் தெரு, அல்லம்பட்டி, முத்துராமன்பட்டி, பாண்டியன் நகர், கருப்பசாமி நகர், சூலக்கரை, மீசலூர், அழகாபுரி, பெத்தனாட்சி நகர், அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் பந்தல்குடி, அருப்புக்கோட்டை, சிலுக்குவார்பட்டி, சுத்தமடம், தும்முசின்னம்பட்டி, புரசலூர், தொப்பலாக்கரை, கானாவிலக்கு, மேலையூர், கோவிலாங்குளம், நத்தம்பட்டி, குள்ளம்பட்டி, வத்திராயிருப்பு, குன்னூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர், சிவகாசி, திருத்தங்கல், சித்துராஜபுரம், சாட்சியாபுரம், பாலையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதி மற்றும் கடைவீதிகளில் முக கவசம் இன்றியும், தேவையின்றியும் பொதுமக்கள் வெளியில் சுற்றி திரிந்தனர்.
இந்தநிலையில் முக கவசம் அணிவதன் நன்மைகள் குறித்தும், கொரோனா தொற்றின் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வத்திராயிருப்பு வருவாய் துறை அலுவலகம் முன்பு நேற்று வட்டார மருத்துவ அலுவலர் ஜெயராமன், வத்திராயிருப்பு தாசில்தார் மாதா ஆகியோர் தலைமையில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதாவது தேவையின்றி சாலைகளில் சுற்றி திரிபவர்களையும், முக கவசம் அணியாதவர்களை அழைத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இவ்வாறு பஜார் பகுதியில் முக கவசம் இ்ன்றி, தேவையின்றியும் சுற்றித்திரிந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதைப்போல் வத்திராயிருப்பு அருகே உள்ள ராமசாமியாபுரம், சேதுநாராயணபுரம், கரிசல்குளம், ரெங்கப்பநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளிலும் பொது மக்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.
வெம்பக்கோட்டை அருகே உள்ள செவல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரிைய பிரேம்குமாரி முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சத்தை கலெக்டர் கண்ணனிடம் வழங்கினார்.
அதேபோல விருதுநகர் அருகே உள்ள ஆவுடையாபுரத்தை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி பிரதீபா மற்றும் அவளது தம்பி 4-ம் வகுப்பு மாணவன் தீபக் ஆகிய இருவரும் தாங்கள் சைக்கிள் வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த ரூ.2ஆயிரத்தை முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக கலெக்டர் கண்ணனிடம் வழங்கினர்.
நிவாரண நிதி வழங்கிய பள்ளி மாணவியையும், தலைமை ஆசிரியையும் கலெக்டர் கண்ணன் நன்றி தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிந்தன் நகர் காலனி பகுதியில் வசித்து வரும் திருவேங்கடத்தின் மகள் சிவானி பிரியா. 7-ம் வகுப்பு படித்து வரும் இந்த மாணவி ஆன்லைன் வகுப்பிற்கு புதிய செல்போன் வாங்க வைத்திருந்த ரூ.3 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாசில்தார் சரவணனிடம் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 660 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 300-ஐ கடந்தது.
மாவட்டத்தில் மேலும் 660 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 27,702 ஆக உயர்ந்துள்ளது.
23,364 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3,823 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 7 பேர் பலியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 301 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 941 படுக்கைகள் உள்ள நிலையில் 811 படுக்கைகளில் கொரோனா பாதிப்படைந்தோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா சிகிச்சை மையங்களில் 1,459 படுக்கைகள் உள்ள நிலையில் 638 படுக்கைகளில் நோய் பாதிப்படைந்தோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 821 படுக்கைகள் காலியாக உள்ளன.
விருதுநகர் வடமலைக்குறிச்சி, முத்தால் நகர்,கவலூர் கிராமத்தில் 21 பேர், ஆமத்தூர், ஒண்டிப்புலி, நக்கீரன்தெரு, மீசலூர், கத்தாளம்பட்டி, சங்கரன் கிணற்று தெரு, மேலத்தெரு, பாத்திமா நகர், சிவந்திபுரம், ஆத்துமேடு, பெத்தனாட்சி நகர், புல்லலக்கோட்டை ரோடு, லட்சுமி நகர், சூலக்கரை, இனாம் ரெட்டியபட்டி, ஆர்.ஆர். நகர், நடுவப்பட்டி, சங்கரலிங்கபுரம், ஓ. கோவில்பட்டி, பெரிய வாடியூர், பெரிய பள்ளிவாசல் தெரு, பஜனை மடம் தெரு, அல்லம்பட்டி, முத்துராமன் பட்டி, கூரைக்குண்டு, சூலக்கரை, குமாரலிங்கபுரம், என்.ஜி. ஓ. காலனி மேற்கு, போலீஸ் நிலைய குடியிருப்பு, லட்சுமி நகர், புறவழிச்சாலை, முத்துராமன் பட்டி, கருப்பசாமி நகர், மோகன் ராஜேஷ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் எரிச்சநத்தம், செட்டிகுறிச்சி, அத்திபட்டி, குருந்தமடம், அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி செவிலியர், அருப்புக்கோட்டை, மல்லாங்கிணறு, ஆவியூர், காரியாபட்டி, சல்வார் பட்டி, துலுக்கன்குளம், வேளச்சேரி, உளுத்தி மடை, உலக்குடி, நரிக்குடி, பந்தல்குடி, சிவகாசி, நாரணாபுரம், அனுப்பங்குளம், வேப்பிலைப்பட்டி, வெம்பக்கோட்டை, வெற்றிலையூரணி, கஞ்சநாயக்கன்பட்டி, கல்லமநாயக்கன்பட்டி, நல்ல முத்தம்பட்டி, நள்ளி, சாத்தூர், படந்தால், ராஜபாளையம், சேத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, மகாராஜபுரம், குன்னூர், ராமச்சந்திராபுரம், நத்தம்பட்டி, சேது நாராயணபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்றும் மாவட்ட, மாநில பட்டியல்களுக்கிடையில் முரண்பாடு உள்ள நிலை தொடர்கிறது. இதனை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலை தொடர்கிறது.






