என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 795 பேருக்கு கொரோனா - 3 பேர் பலி
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இம்மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 28 ஆயிரத்து 497ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 795 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் ஒரே நாளில் 3 பேர் பலியாகி உள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இம்மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 28 ஆயிரத்து 497ஆக உயர்ந்துள்ளது. நேற்று 419 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இவர்களை சேர்த்து இதுவரை 23 ஆயிரத்து 774 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி 4 ஆயிரத்து 208 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 3 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளது.
இம்மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் மொத்தம் உள்ள 946 படுக்கைகளில் 828 படுக்கைகளில் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 118 படுக்கைகள் காலியாக உள்ளன. சிகிச்சை மையங்களில் உள்ள 1,459 படுக்கைகளில் 628 படுக்கைகளில் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 831 படுக்கைகள் காலியாக உள்ளன. இம்மாவட்டத்தில் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் சங்கரலிங்கபுரம், ஒண்டிப்புலி, ஆமத்தூர், ஆவுடையாபுரம், ராமமூர்த்தி ரோடு, பாண்டியன் நகர், என்.ஜி.ஓ காலனி, லட்சுமி நகர், ஆனிமுத்து பிள்ளையார் கோவில் தெரு, மேலத் தெரு, கந்தபுரம் தெரு, அகமதுநகர், ஏ.சி. சங்கரலிங்கம் தெரு, கம்மாபட்டி ராஜாக்கள் தெரு, கணேஷ் நகர், கசாப்புக்காரர் தெரு, அல்லம்பட்டி, முத்துராமன்பட்டி, பாண்டியன் நகர், கருப்பசாமி நகர், சூலக்கரை, மீசலூர், அழகாபுரி, பெத்தனாட்சி நகர், அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் பந்தல்குடி, அருப்புக்கோட்டை, சிலுக்குவார்பட்டி, சுத்தமடம், தும்முசின்னம்பட்டி, புரசலூர், தொப்பலாக்கரை, கானாவிலக்கு, மேலையூர், கோவிலாங்குளம், நத்தம்பட்டி, குள்ளம்பட்டி, வத்திராயிருப்பு, குன்னூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர், சிவகாசி, திருத்தங்கல், சித்துராஜபுரம், சாட்சியாபுரம், பாலையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story