என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
தேவையின்றி சாலைகளில் சுற்றித்திரிந்த 200 பேருக்கு கொரோனா பரிசோதனை
வத்திராயிருப்பு பகுதியில் தேவையின்றி சாலைகளில் சுற்றி திரிந்த 200 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதி மற்றும் கடைவீதிகளில் முக கவசம் இன்றியும், தேவையின்றியும் பொதுமக்கள் வெளியில் சுற்றி திரிந்தனர்.
இந்தநிலையில் முக கவசம் அணிவதன் நன்மைகள் குறித்தும், கொரோனா தொற்றின் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வத்திராயிருப்பு வருவாய் துறை அலுவலகம் முன்பு நேற்று வட்டார மருத்துவ அலுவலர் ஜெயராமன், வத்திராயிருப்பு தாசில்தார் மாதா ஆகியோர் தலைமையில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதாவது தேவையின்றி சாலைகளில் சுற்றி திரிபவர்களையும், முக கவசம் அணியாதவர்களை அழைத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இவ்வாறு பஜார் பகுதியில் முக கவசம் இ்ன்றி, தேவையின்றியும் சுற்றித்திரிந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதைப்போல் வத்திராயிருப்பு அருகே உள்ள ராமசாமியாபுரம், சேதுநாராயணபுரம், கரிசல்குளம், ரெங்கப்பநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளிலும் பொது மக்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.

Next Story