search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மேலும் 10 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து - தமிழக அரசு அனுப்பி வைத்தது

    விருதுநகர் மாவட்டத்திற்கு மேலும் 10 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தை தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் தற்போது வரை 910 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தும், 1,350 டோஸ் கோவேக்சின் தடுப்பூசி மருந்தும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் மாவட்டத்தில் தடுப்பூசி போட வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஏற்கனவே முன் பதிவு செய்தவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    இருந்த போதிலும் தடுப்பூசி போட ஆர்வத்தோடு வரும் அனைவருக்கும் தடுப்பூசி போட முடியாத நிலையில் தடுப்பூசி மருந்து தேவை என மாவட்ட நிர்வாகம் தமிழக அரசிடம் தெரிவித்தது.

    இந்த நிலையில் தமிழக அரசு விருதுநகர் மாவட்டத்திற்கு 10 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தினை அனுப்பி வைத்துள்ளது. இந்த தடுப்பூசி மருந்து அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேவை அடிப்படையில் பிரித்து வழங்கப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் இதுவரை ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 905 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×