என் மலர்
விருதுநகர்
விருதுநகர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை பலியானார்.
விருதுநகர்
விருதுநகர் ஆவுடையாபுரத்தை சேர்ந்தவர் நூர்ஜகான் (வயது 40). இவரது மகன் சதாம் உசேன் (23). இவர் மோட்டார் சைக்கிளில் குப்பம்பட்டி கிராமத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டார்.
ஆர்.ஆர்.நகரில் இருந்து ஆவுடையாபுரம் செல்லும் சாலையில் வந்தபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் கீழேவிழுந்த சதாம்உசேன் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சதாம்உசேன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நூர்ஜகான் கொடுத்த புகாரின்பேரில் வச்சக்காரபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பலியான சதாம்உசேனுக்கு கடந்த மாதம் தான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் மாவட்டத்தில் இளம்பெண் உள்பட 4 பேர் மாயமாகினர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள நல்லமுத்தன்பட்டியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரது மகள் மதுபாலா(வயது 19). இவர் மெயின் ரோட்டில் உள்ள வளையல் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக வீட்டில் இருந்து சென்ற மதுபாலா அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காததால் சாத்தூர் டவுன் போலீசில் விஜயலட்சுமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை காமாட்சி செட்டியார் தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி(85). மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த இவர் வீட்டில் இருந்து மாயமாகி விட்டதாக அவரது மகன் கணேஷ்குமார் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம் கொத்தன்குளத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி அய்யரம்மாள்(36) திடீரென மாயமாகி விட்டதாக வன்னியம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே உள்ள தேவதானத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவரின் மனைவி ஜோதிலட்சுமி(22). சம்பவத்தன்று திருத்தங்கல் பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து செல்வகுமார் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையத்தில் தெருநாய்கள் 8 பேரை கடித்தது. அவற்றின் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் தெருநாய்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துவிட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதன் காரணமாக தெருக்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர், நடந்து செல்பவர்கள் போன்றோரை நாய்கள் விரட்டி விரட்டி கடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெரிய மாரியம்மன் கோவில் தெரு, தென்காசி சாலை, சஞ்சீவிநாதபுரம் தெரு, செவல்பட்டி தெரு, பஞ்சு மார்க்கெட், டி.பி.மில்ஸ் ரோடு போன்ற பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
இந்தநிலையில் பெரிய மாரியம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்த மாணவன் முத்துசரவணனை தெருநாய்கள் துரத்தி துரத்தி கடித்துள்ளது. இதில் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டு முத்துசரவணன் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
தொடர்ந்து தாமோதரன், நகராட்சி துப்புரவு ஊழியர் கருப்பாயி, அவரது உறவினர் தமிழ்ச்செல்வி உள்பட 8 பேரை தெரு நாய்கள் கடித்ததால் படுகாயம் அடைந்தனர். அனைவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.
ராஜபாளையம் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பழனிகுரு, காளி ஆகியோர் தலைமையில் துப்புரவு ஊழியர்கள் நாய்களை பிடித்து ராஜபாளையம் அரசு கால்நடை மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர்.
இதற்கிடையில் 4 மாடுகளையும் நாய்கள் கடித்துள்ளன. பாதிப்படைந்த மாடுகளும் அரசு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் ராஜபாளையம் நகராட்சி நிர்வாகம் தெருநாய்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் அகதிகள் முகாமில் 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கை செய்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் குல்லூர் சந்தையில் அகதிகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள 16 வயது சிறுமி தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரது பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது தெற்குப்பட்டி பாலவனத்தம் பகுதியை சேர்ந்த அச்சப்பன் (22) என்ற தொழிலாளி அங்கு வந்துள்ளார்.
அவர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது சிறுமியின் மாமா வந்துவிட்டதால், அச்சப்பன் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தபோது பள்ளிக்கு செல்லும்போது அச்சப்பனுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் அவர் தன்னை மிரட்டி வீட்டில் இருக்கும்படி கூறியதாகவும் தற்போது திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி அச்சப்பன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
விருதுநகர் குல்லூர் சந்தையில் அகதிகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள 16 வயது சிறுமி தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரது பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது தெற்குப்பட்டி பாலவனத்தம் பகுதியை சேர்ந்த அச்சப்பன் (22) என்ற தொழிலாளி அங்கு வந்துள்ளார்.
அவர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது சிறுமியின் மாமா வந்துவிட்டதால், அச்சப்பன் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தபோது பள்ளிக்கு செல்லும்போது அச்சப்பனுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் அவர் தன்னை மிரட்டி வீட்டில் இருக்கும்படி கூறியதாகவும் தற்போது திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி அச்சப்பன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பதாக ஸ்ரீவில்லிபுத்தூர் சப்-இன்ஸ்பெக்டர்மருது பாண்டியன் ரோந்து சுற்றி வரும்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சோலைராஜ் வயது 56. என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 30 கிராம் கஞ்சா மற்றும் ரொக்கப்பணம் ரூபாய் 4,500 பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராஜபாளையத்தில் மில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் முருகேசன் 62. இவரது மனைவி சண்முகத்தாய் இருவரும் மில்லில் வேலை செய்து வருகின்றனர் இவர்களுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் முருகேசனுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்றும் குணமாகாததால் மனமுடைந்த முருகேசன் நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலையில் இதுகுறித்து தெற்கு போலீஸ் நிலையத்திற்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த இன்ஸ்பெக்டர் மன்னவன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சுழி அருகே சென்னிலைக்குடி பகுதியில் நெல் விளைந்து தற்போது அறுவடை செய்யும் நிலையில் இருந்து வருகிறது.
காரியாபட்டி:
திருச்சுழி அருகே சென்னிலைக்குடி பகுதியில் நெல் விளைந்து தற்போது அறுவடை செய்யும் நிலையில் இருந்து வருகிறது. நெல் அறுவடைக்கு தயார்நிலையில் காட்டுப்பன்றிகள் நெல்வயல்களில் இறங்கி நெல் கதிர்களை சேதம் செய்துவருகிறது. மிகவும் கஷ்டப்பட்டு விவசாயம் செய்து மகசூல் எடுக்கும் நிலையில் காட்டுப்பன்றிகள் வயல்களில் இறங்கி மிகுந்த நெல் கதிர்களில் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. காரியாபட்டி ,நரிக்குடி, திருச்சுழி பகுதிகளில் விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவது தொடர்ந்து கொண்டே இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்தப் பகுதியில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் சுற்றிவருவதால் விவசாய நிலங்கள் தரிசாக மாறும் நிலை உள்ளது. இந்த பகுதியில் காட்டுப்பன்றிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எந்த விவசாயிகளும் தங்கள் நிலங்களில் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயத்தை கைவிட்டு வெளியூர்களுக்கு பிழைப்பை தேடி செல்லவேண்டிய நிலை ஏற்படும். தொடர்ந்து காட்டுப்பன்றிகளால் விவசாயம் சேதப்படுத்தப்பட்டு வருகிறது என்று பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் இதுவரை மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலை இருந்து வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் விவசாயிகள் முற்றிலும் பாதிகப்படுவார்கள். எனவே காட்டுப்பன்றிகளை ஒழித்து விவசாயிகளை பாதுகாக்கப்பட வேண்டும் என்று இந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மல்லாங்கிணறு பேரூராட்சி பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரியாபட்டி:
மல்லாங்கிணறு பேரூராட்சிக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அருப்புக்கோட்டை தாலுகா மண்டல அலுவலர் முருகன் மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டு மல்லாங்கிணறு பகுதியில் தீவிர ரோந்துபணி செய்து வருகின்றனர். இந்நிலையில் மல்லாங்கிணறு அரசு மருத்துவமனை அருகில் பகுதியில் பறக்கும் படை அதிகாரி முருகன் தலைமையில் வாகன சோதனை செய்துகொண்டிருந்தபோது ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் இருந்த 16 மது பாட்டில்களை அதிகாரி பறிமுதல் செய்து மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பறக்கும் படை வாகன சோதனையில் விவசாயிடம் ரூ.1 லட்சத்து 56 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் செந்தில் முருகன், விவசாயி இவர் தனது குடும்பத்துடன் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலி சத்திரத்திற்கு ஈச்சர் வேனில் சென்று கொண்டிருந்தார் நேற்று இரவு பறக்கும் படை அதிகாரி வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே வரும் வாகனங்களை பறக்கும் படை அதிகாரி ராமர் தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் பரமசிவம் மற்றும் போலீசார் சோதனை செய்தனர் அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தபோது திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள செட்டியபட்டி சேர்ந்த விவசாயி செந்தில் முருகன் இடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த ரூபாய் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து பறிமுதல் செய்து நகராட்சித் தேர்தல் அதிகாரி மல்லிகாவிடம் ஒப்படைத்தனர்.
விருதுநகரில் 17 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்
விருதுநகர் விக்னேஷ் காலனியில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சுப்பல் மிருதா(வயது 49) என்பவர் கடந்த 17 ஆண்டுகளாக மூலம், பவுத்திரத்துக்கு மருத்துவம் பார்த்து வருகிறார். இவரது கிளினிக்கிற்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக வருவதுண்டு.
ரூ25ஆயிரம் முதல் 30ஆயிரம் வரை சிகிச்சைக்காக கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சுப்பல் மிருதாவின் மருத்துவத்தில் சந்தேகம் இருப்பதாக அங்கு சிகிச்சைக்கு வந்த பொதுமக்கள் சிலர் மாவட்ட சுகாதாரத்துறையிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த கிளினிக்கில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சுப்பல் மிருதா 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு மருத்துவம் பார்த்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மனோகரன் விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து போலி டாக்டர் சுப்பல் மிருதாவை கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை அருகே சரக்கு வேன் மோதி பாதயாத்திரை பக்தர் பலியானார்.
பாலையம்பட்டி
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள தோப்பூரை சேர்ந்தவர் பாண்டி(வயது 74). இவர் வருடந்தோறும் திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக செல்வது வழக்கம்.
அதன்படி பாண்டி அதே பகுதியை சேர்ந்த 50 பேர் கொண்ட குழுவுடன் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக புறப்பட்டார். இன்றுகாலை அந்த குழுவினர் அருப்புக்கோட்டை அருகே உள்ள சேதுராஜபுரம் விலக்கு 4 வழிச்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பாண்டி ரோட்டை கடக்க முயன்றபோது அந்த வழியாக வேகமாக வந்த மினி சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட பாண்டி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பந்தல்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மினி வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதயாத்திரைக்கு புறப்பட்ட சில மணி நேரத்திலேயே முதியவர் வாகன விபத்தில் இறந்தது பாதயாத்திரை குழுவினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்டத்தில் போலி பீடிகள் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெட்டிக்கடைகளில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி பீடிகள் விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிட்ட நிறுவனத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதுகுறித்து நெல்லையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பீடி நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதி விருதுநகரைச் சேர்ந்த முருகேஷ்(வயது59) என்பவர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் விருதுநகர் பர்மா காலனியைச் சேர்ந்த தங்கதுரை (60), சிவகாசியை சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆகிய 2 பேரும் போலி பீடிகளை தயாரித்து பெட்டி கடைகளுக்கு சப்ளை செய்து வந்தது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய சோதனையில் அவர்களிடமிருந்து 41 பீடி பண்டல்கள், 27 கிலோ பீடி இலை, 15 கிலோ பீடி தூள், பிரபல நிறுவனத்தின் போலி லேபிள்கள் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கு மூளை யாக செயல்பட்ட தங்கதுரையை போலீசார் கைது செய்தனர். பாலகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.






