என் மலர்
உள்ளூர் செய்திகள்

இளம்பெண் உள்பட 4 பேர் மாயம்
இளம்பெண் உள்பட 4 பேர் மாயம்
விருதுநகர் மாவட்டத்தில் இளம்பெண் உள்பட 4 பேர் மாயமாகினர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள நல்லமுத்தன்பட்டியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரது மகள் மதுபாலா(வயது 19). இவர் மெயின் ரோட்டில் உள்ள வளையல் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக வீட்டில் இருந்து சென்ற மதுபாலா அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காததால் சாத்தூர் டவுன் போலீசில் விஜயலட்சுமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை காமாட்சி செட்டியார் தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி(85). மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த இவர் வீட்டில் இருந்து மாயமாகி விட்டதாக அவரது மகன் கணேஷ்குமார் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம் கொத்தன்குளத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி அய்யரம்மாள்(36) திடீரென மாயமாகி விட்டதாக வன்னியம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே உள்ள தேவதானத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவரின் மனைவி ஜோதிலட்சுமி(22). சம்பவத்தன்று திருத்தங்கல் பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து செல்வகுமார் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






