என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலி டாக்டர்
விருதுநகரில் போலி டாக்டர் கைது
விருதுநகரில் 17 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்
விருதுநகர் விக்னேஷ் காலனியில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சுப்பல் மிருதா(வயது 49) என்பவர் கடந்த 17 ஆண்டுகளாக மூலம், பவுத்திரத்துக்கு மருத்துவம் பார்த்து வருகிறார். இவரது கிளினிக்கிற்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக வருவதுண்டு.
ரூ25ஆயிரம் முதல் 30ஆயிரம் வரை சிகிச்சைக்காக கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சுப்பல் மிருதாவின் மருத்துவத்தில் சந்தேகம் இருப்பதாக அங்கு சிகிச்சைக்கு வந்த பொதுமக்கள் சிலர் மாவட்ட சுகாதாரத்துறையிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த கிளினிக்கில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சுப்பல் மிருதா 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு மருத்துவம் பார்த்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மனோகரன் விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து போலி டாக்டர் சுப்பல் மிருதாவை கைது செய்தனர்.
Next Story






