என் மலர்
விருதுநகர்
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல், சிவகாசி நகராட்சிகள் இணைக்கப்பட்டு 48 வார்டுகளுடன் சிவகாசி மாநகராட்சி உருவானது. இந்த மாநகராட்சி முதன் முறையாக தற்போது தேர்தலை சந்தித்தது.
இங்கு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. 24 வார்டுகளில் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது. அ.தி.மு.க. 11 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் 2-ந்தேதி பதவி ஏற்க உள்ளனர். 4-ந்தேதி மேயர், துணை மேயர் மறைமுக தேர்தல் நடக்கிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 11 பேரில் 30-வது வார்டு உறுப்பினர் கரை முருகன் தவிர மற்ற 10 பேரும் திடீரென மாயமாகி விட்டனர். அவர்கள் எங்கு சென்றார்கள்? என்பது மர்மமாக உள்ளது.
இதுபற்றி விசாரித்ததில் கும்பகோணம், திருநள்ளாறு உள்ளிட்ட பகுதி கோவில்களுக்கு வழிபட சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் ஒட்டுமொத்தமாக சென்று ஏன்? என்பது தெரிய வில்லை.
மாவட்ட அ.தி.மு.க. தலைமைக்கு நெருக்கமான கவுன்சிலர்களும் மாயமாகி உள்ளனர். மாவட்ட தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் சென்றார்களா? என்பது தெரிய வில்லை.
இதையும் படியுங்கள்... ஹங்கேரியில் இருந்து 240 இந்தியர்களுடன் புறப்பட்ட 3வது விமானம் டெல்லி வந்தடைந்தது
ஒவ்வொரு வருடமும் வரும் மகா சிவராத்திரி தினத்தன்று சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அதன்படி இந்த ஆண்டு வருகிற 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மகா சிவராத்திரி வருகிறது. இதையொட்டி சதுரகிரி கோவிலுக்கு திரளான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே மகா சிவராத்திரி, பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு வருகிற 28ம் தேதி (திங்கட்கிழமை) முதல் 3-ந் தேதி (வியாழக்கிழமை) வரை சதுரகிரிக்கு செல்ல கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மேற்கண்ட நாட்களில் காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற வேண்டும். பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்க அனுமதி இல்லை. மலையேறும் பக்தர்கள் அங்குள்ள நீரோடைகளில் குளிக்க கூடாது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் அதிகமாக வருவார்கள் என்ற காரணத்தால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மலை அடிவாரம் மற்றும் கோவில் பகுதியில் செய்யப்பட்டுள்ளது.
சிவராத்திரி தினமான 1-ம் தேதி அன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு விடிய விடிய இரவு முழுவதும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாம்....திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து
விருதுநகர் மாவட்டத்தில் போதை பொருள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர்-சிவகாசி சாலையில் ஆமத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் தனியார் கல்லூரி அருகே நின்றபோது வேகமாக ஒரு கார் வந்தது. போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தினர்.
காருக்குள் 2 வாலிபர்கள் இருந்தனர். அவர்களிடம் போலீசார் எங்கிருந்து வருகிறீர்கள்? என்ன கொண்டு செல்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினர். ஆனால் 2 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது காருக்குள் 5 பாக்கெட்டுகள் இருந்தன. அதனை பிரித்து பார்த்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதனை காருடன் பறிமுதல் செய்த போலீசார் காரில் வந்த 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது ஆமத்தூர் அருகே உள்ள கவலூர் கிராமத்தில் ஒரு பட்டாசு கடையில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக அவர்கள் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். பட்டாசு கடைக்குள் 89 பாக்கெட்டுகளில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றையும் போலீசார் கைப்பற்றினர். மொத்தத்தில் 204 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி காரில் வந்த 2 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்களது பெயர் சிவசாமி (வயது 32), சதீஷ்பாண்டி (22) என்பதும், இவர்கள் மதுரையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. 2 பேரும் திருத்தங்கல்லை சேர்ந்த ஜோதிராஜா என்பவருடைய பட்டாசு கடையை லீசுக்கு எடுத்து அங்கு கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்து வந்துள்ளனர்.
கைதான 2 பேரும் மதுரைக்கு கடத்தி சென்று கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாரிடம் தெரிவித்தனர். ஆனால் கவலூரில் இருந்து விருதுநகர் வழியாக நேரடியாக மதுரை செல்லாமல் இவர்கள் கிராம பகுதி வழியாக சுற்றி செல்வதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பட்டாசு கடையில் பதுக்கி வைத்து 2 கிலோ பாக்கெட்டுகளாக கஞ்சா இவர்கள் கொண்டு வருவதால் பல்வேறு பகுதிகளுக்கும் அதனை சப்ளை செய்து வருகிறார்களா? அல்லது போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க நேர் வழியில் செல்லாமல் கிராமங்கள் வழியாக செல்கின்றனரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






