என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவரின் பெற்றோர் * * * பெருமாவளவன்
உக்ரைன் நாட்டின் பதுங்கு குழியில் தவிக்கும் ராஜபாளையம் மாணவர்களை மீட்க வேண்டும்- பெற்றோர்கள் கோரிக்கை
உக்ரைன் நாட்டின் பதுங்கு குழியில் தவிக்கும் மாணவர்களை மீட்டு தரக்கோரி விருதுநகர் மாவட்ட கலெக்டர் மற்றும் மத்திய-மாநில அரசு அதிகாரிகளுக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் தென்றல் நகரை சேர்ந்த பால்சாமி- சவுந்தரலதா ஆகியோரது மகன் பெருமாவளவன். இவரது நண்பர்கள் உக்ரைன் நாட்டில் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்ததால் இவரும் அவர்களுடன் சேர்ந்து படித்து வருகிறார்.
தற்போது உக்ரைனில் ரஷிய படை தாக்குதல் நடத்தி வருகிறது. பெருமாவளவனுடன் ராஜபாளையம் பகுதியில் உள்ள இடையன்குளம், வத்திராயிருப்பு மற்றும் திருச்சி, பெரம்பலூரை சேர்ந்த மாணவ-மாணவிகள் சுரங்க பாதைகளில் பதுங்கி உள்ளனர்.
அவர்கள் பெற்றோருடன் தொலைபேசியில் பேசிய போது கண்ணீருடனும், நடுக்கத்துடனும் தொடர் குண்டு மழை பொழியும் எல்லை பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் தெரிவித்தனர்.
அவர்களை மீட்டு தரக்கோரி விருதுநகர் மாவட்ட கலெக்டர் மற்றும் மத்திய-மாநில அரசு அதிகாரிகளுக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மாணவர் பெருமாவளவன் ஊர் திரும்பும் நாளை எதிர்பார்த்து கவலையுடன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காத்திருக்கின்றனர்.
Next Story






